என் மலர்
கடலூர்
- கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது.
- துணை மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடலூர்:
கடலூர் மாநகராட்சி குட்டக்கார தெருவில் கழிவுநீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது. மேலும் இந்த கால்வாயில் கழிவு நீர் சரியான முறையில் ஓடாததால் மழைக்காலங்களில் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கால்வாயை உடனடியாக சரி செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அப்போது ராஜா, வெற்றி, வடிவேல், விக்கி மற்றும் பலர் உடனிருந்தனர்
- நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர்.
- எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தை மையமாக வைத்து இணைக்கும் சென்னை- கன்னியாகுமரிதொழில் தட திட்ட புதியசாலை அமைக்கும்பணி கடந்த 2021 -ம் ஆண்டு தொடங்கிவேகமாக நடந்து வருகிறது. இந்த புதிய சாலைபணிக்காக நிலம் கையகப்படுத்தும்பணி மற்றும் இழப்பீடு தொகைவழங்கும்பணிகள் முழுமையாக நடந்துமுடிந்தநிலையில் அண்ணாகிராமம் ஒன்றியம் கனிசபாக்கம் ஊராட்சியில் நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியில் இருந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிடிய இடித்து அகற்ற நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரத்துடன்அங்கு வந்தனர். புதிய போர் போடும் பணி தாமமமானதால் மேல்நிலை நீர்த்தேக்க.தொட்டியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அங்கு திரண்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றிதகவல்அ றிந்ததும்அங்கு விரைந்து வந்த அண்ணா கிராமம் தி.மு.க. ஒன்றியசெ யலாளர்வெங்கட்ராமன் கிருஷ்ணமூர்த்திகி ராமபொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். நெடுஞ்சாலை துறை அதிகாரிகள்,என்ஜி னீயர்கள் சுந்தரி, ஜெயந்தி, ஏழிலரசி, நில எடுப்புதனி தாசில்தார் தமிழ்ச்செல்வி, புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், அண்ணா கிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்ரா, மீரா கோமதி, கணிசபாக்கம்பஞ்சாயத்து தலைவர்திருநாவுக்கரசு ஆகியோர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ஒரு மாத காலத்துக்குள் புதிய குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பணிகள் நிறைவு பெற்றபிறகு புதிய சாலை அமைக்கும் பணிக்கான பழைய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை இடித்து அகற்ற பொதுமக்கள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.இதனால் அங்கு ஏற்பட்ட பரபரப்பு முடிவுக்கு வந்தது.
- கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.
- பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர்.
கடலூர்:
திருவண்ணாமலை போல் கிரிவலத்தில் புகழ் பெற்று விளங்கும் கடலூர் மாவட்டம் திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவி லில் பவுர்ணமி தோறும் கிரி வலம், ஊஞ்சல் உற்ச வம் ஆகியவை நடந்து வரு கிறது. வைகாசி பவுர்ணமி தினமான நேற்று இரவு கிரிவலம் மற்றும் ஊஞ்சல் உற்சவம் விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் சாமி, அம்மன், உற்சவர் தனி அம்மன் ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை விசேஷ பூஜை நடை பெற்றது. தொடர்ந்து மாலை 6 மணி அளவில் மாட வீதியை 16 முறை வலம் வரும் கிரிவலம் தொடங்கியது. கோவில் செயல் அலுவலர் மகாதேவி கிரிவலத்தை தொடங்கி வைத்தார்.
இதில் கடலூர். விழுப்பு ரம், புதுவை பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் வலம் வந்தனர். தொடர்ந்து மாலை 7 மணி அளவில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. பெரியநாயகி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வைகாசி மாத பவுர்ணமி உற்சவ தாரர் காடாம்புலியூர் ஏவிகுமரன், ஏவி சுரேஷ் குடும்பத்தினர் செய்திருந்த னர்.
- விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
- நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் கடலூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலை யங்களிலும் விவசாயிகள் தங்கள் நெல்லினை விற்பனைக்காக இணைய வழியில் பதிவு செய் யும்போது பயோ மெட்ரிக் முறையில் விரல் ரேகை பதிவு செய்யும் முறை புதிதாக கடந்த 1-ந் தேதி முதல் அறிமுகப்படுத்தப் பட்டு உள்ளது.
விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல் காலதாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்ய முடியும். பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்வதன் மூலமும், ஆதார் எண்ணில் பதிவு செய்திருக்கும் செல்போன் எண்ணுக்கு ஓ.டி.பி. பெறு வதன் மூலமும் விவசாயி களின் விவரத்தை துல்லிய மாக பதிவேற்றம் செய்து கொள்ளலாம். இந்த விரல் ரேகை பதிவு மூலம் விவசாயி களின் சுய விவரங்கள் சரியாக இருக்கிறதா? என கொள்முதல் நிலை யங்களிலேயே சரிபார்த்துக் கொண்டு நெல்லினை விற்பனை செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- டாஸ்மாக்கில் விற்ற குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்கியதால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
- கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதுவிற்கு கூடுதல் பணம் வாங்குவதாக கூறி ஆட்டோ டிரைவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிதம்பரம்:
தமிழகத்தில் சமீப காலமாக டாஸ்மாக் கடையில் மதுபிரியர்கள் வாங்கும் மதுவிற்கு குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்குவதாக புகார்கள் எழுந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் விற்ற குவார்ட்டருக்கு ரூ.10 கூடுதல் பணம் வாங்கியதால் மதுபிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மதுவிற்கு கூடுதல் பணம் வாங்குவதாக கூறி ஆட்டோ டிரைவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
சிதம்பரம் சித்தலபாடி வண்டிகாரதெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். ஆட்டோ டிரைவர். மேலும் பா.ஜ.க நிர்வாகியாக உள்ளார். வெங்கடேசன் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டி வருகிறார். சிதம்பரம் பஸ் நிலையம் அருகே 3 டாஸ்மாக் கடைகள் உள்ளது. வெங்கடேசன் அங்கிருந்த ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது பாட்டில் வாங்கினார். அப்போது டாஸ்மாக் கடையில் பணியில் இருந்த ஊழியர் மது பாட்டில் ஒன்றிற்கு பாட்டிலில் அச்சிடப்பட்டிருந்த விலையை விட கூடுதலாக 10 ரூபாய் கேட்டு வாங்கினார்.
இதற்கு ஆட்டோ டிரைவர் வெங்கடேசன் 10 ரூபாய் எதற்கு அதிகமாக தர வேண்டும் என டாஸ்மாக் ஊழியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கூடுதல் பணத்தை தந்தால் மட்டுமே இங்கிருந்து செல்வேன் என்று கூறி தகராறு செய்தார். அவர் தகராறில் ஈடுபட்டதை தனது செல்போனில் படம் எடுத்து அதனை சமூக வலை தளத்தில் வெளியிட்டார்.
மேலும் அங்கு மது அருந்தி கொண்டிருந்த நபர்களிடமும் நீங்களும் பணத்தை கேளுங்கள் என்று கூறினார். அப்போது அங்கு வந்த ஆட்டோ தொழிலாளர்களுடனுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து சிதம்பரம் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் சம்பவ இடத்திற்கு வந்து டாஸ்மாக் கடையில் ரகளையில் ஈடுபட்ட வெங்கடேசனை சிதம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில் வெங்கடேசன் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்டது தெரியவந்தது. உடனே போலீசார் வெங்கடேசன் மீது நடுரோட்டில் பொது மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்டதாக வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.
- சிலம்பு வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர்.
- மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர்.
கடலூர்:
கடலூர் முதுநகர் பகுதியை சேர்ந்தவர் சிலம்பு (வயது 28). இவரது வீட்டின் மாடியில் கார்த்தி உட்பட 5 பேர் வாடகைக்கு தங்கி வருகின்றனர். இந்நிலையில் சிலம்பு வீட்டின் மாடியில் தங்கி இருக்கும் 5 பேரை காலி செய்யுமாறு கூறி வந்தார். சம்பவத்தன்று கார்த்திக்கும், சிலம்பிற்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
அப்போது இந்த தகராறு மோதலாக மாறியது. இந்த மோதலில் சிலம்பு மற்றும் வேளாங்கண்ணி ஆகியோர் காயம் அடைந்தனர். பின்னர் இவர்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து கடலூர் முதுநகர் போலீஸ் நிலையத்தில் சிலம்பு கொடுத்த புகாரின் பேரில் கார்த்தி உட்பட 5 பேர் மீதும், வேளாங்கண்ணி கொடுத்த புகாரின்பேரில் சத்தியமூர்த்தி உட்பட 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது.
- கனிஷ் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் தனியார் பொருட்காட்சி இயங்கி வருகின்றது. இங்கு கடலூர் கூத்தப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் கோடைவிடுமுறையை முன்னிட்டு பொருட்காட்சிக்கு வந்தனர். அப்போது கார்த்திக் மகன் கனிஷ் (வயது 7) என்பவர் பொருட்காட்சியில் இருந்த ராட்டினத்தில் சுற்றிய போது திடீரென்று தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கனிஷ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் அஸ்வின் ராஜ் உட்பட 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் படத்தை ஏற்படுகிறது.
- திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர்.
- பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் இந்து சமய அறநிலைத்துறை சொந்தமான உலக புகழ்பெற்ற அழகிய காதலி அம்மன் உடனுறை பிரளயகலேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலின் 20 அடி உயரம் உள்ள சுற்றுப்புற மதில் சுவர் ஏறி உள்ளே புகுந்த திருடர்கள் பயங்கர ஆயுதத்துடன் உண்டியல் பூட்டை அதிகாலை உடைத்து திருட முயற்சி செய்யும்போது குடமுழுக்குக்காக திருப்பணி செய்யும் பணியாளர்கள் பார்த்து கூச்சலிட்டதால் அருகில் குடியிருந்த பொதுமக்கள் துரத்தி பிடிக்க முயற்சி செய்யும் போது மர்ம கும்பல் தப்பி சென்றது. தப்பிச்சென்ற மர்ம கும்பல் பற்றி பெண்ணாடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பெண்ணாடம் பகுதி பொதுமக்கள் இரவு கோவிலில் ஒன்று திரண்ட தால் பரபரப்பு ஏற்பட்டது.
- கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்தார்.
- பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டியை சேர்ந்தவர் கிஷோர் குமார். இவர்பொன்னு சாமி தெருவில் நகை அடகு கடை வைத்துள்ளார். இவரது அடகு கடையில் கடந்த 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தங்க மோதி ரம் ஒன்றை அடகு வைத்து ரூ14.500பணத்தைப் பெற்றுக் கொண்டு சென்றுள்ளார். இவர் அடகு வைத்து பணம் வாங்கி சென்றது போலிநகை என்றும் தங்கமுலாம் பூசியது என்றும்தெரியவந்தது. இது குறித்து நகை அடகு கடை உரிமையாளர் கிஷோர் குமார் பண்ருட்டிபோலீசில்புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார்சம்பவ இடத்துக்குவிரைந்து சென்று விசாரணை நடத்தினர் விசார ணையில் பொய்யான விலாசம் மற்றும் போன் நம்பரை கொடுத்து போலிமோதிரத்தை அடகு வைத்தது தெரிய வந்தது.தீவிர விசாரணையில் விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பாத்தி மா லே அவுட்டை சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (வயது 38) என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து ராஜேஷ் கண்ணனை அதிரடியாக கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- மர்ம நபர் 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
- மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார்.
கடலூர்:
சேத்தியாதோப்பு அருகே வடகிரிராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி ஜெயசெல்வி (வயது 52) இவர் கடந்த 24-ந்தேதி வீட்டிலிருக்கும்போது அங்கு வந்த மர்ம நபர் ஏ.டி.எம் ல் பணம் எடுத்து தருவதாக கூறி நூதன முறையில் ஜெயசெல்வியிடருந்து 4 பவுன் நகையை திடுடி சென்றார்.
இதுகுறித்து மூதாட்டி ஒலக்கூர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி ரூபன்குமார் வழக்குபதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று இரவு சேத்தியாதோப்பு பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறினார். இதனால் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று அந்த நபரிடம் கிடுக்குப்பிடி விசாரணை செய்ததில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த ஆசைகுமார் (வயது 49) என்பதும் வடகிரிராஜபுரம் பகுதியில் உள்ள மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் நகையை திருடி சென்றதை ஒப்புகொண்டார்.
உடனே போலீசார் ஆசைகுமாரின் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் ஆசைகுமார் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அய்யப்பன் அதிர்ச்சி அடைந்தார்.
- அரசு பஸ்சை டிரைவர் கட்டி பிடித்து அழும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பண்ருட்டி:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கோலியனூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது57). இவர் பண்ருட்டி அரசு பணிமனையில் உள்ள பஸ்சில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக பண்ருட்டியில் உள்ள பணிமனையில் பஸ்கள் வழக்கம் போல் இயங்கி வந்தது. ஆனால் டிரைவர் அய்யப்பனுக்கு பணிமனை அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் அடிக்கடி ஆப்சென்ட் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் பாதி சம்பளம் பெற முடியாமல் அய்யப்பன் அவதிப்பட்டு வந்தார். கடந்த மாதம் 6 நாள் முழுவதும் வேலைக்கு வந்தும் வருகை பதிவேட்டில் 6 நாளும் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று வழக்கம் போல அய்யப்பன் பணிக்கு வந்தார். அப்போது வருகை பதிவேட்டில் ஆப்சென்ட் போடப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கிளை மேலாளரிடம் கேட்ட போது, எனக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளார். அலுவலகத்தில் இருப்பவர்களிடம் கேட்ட போது அவர்களும் எங்களுக்கு எதுவும் தெரியாது என கூறி உள்ளனர்.
இதனால் மனவேதனை அடைந்த அய்யப்பன் திடீரென தான் ஓட்டும் பஸ்சை கட்டிப்பிடித்து கதறி அழுதார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அரசு பஸ் டிரைவருக்கு வருகை பதிவேட்டில ஆப்சென்ட் போடப்பட்டது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து ஊழியர்களின் நலன் காக்க வேண்டும் என அய்யப்பன் மற்றும் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு பஸ்சை டிரைவர் கட்டிப்பிடித்து கதறி அழுத காட்சி அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர்.
- 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
கடலூர்:
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி துறை மூலமாக 2022-23-ம் கல்வியாண்டில் அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களுக்காக கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 77 ஆயிரத்து 339 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் தேர்வு செய்யப்பட்ட 41 ஆயிரத்து 413 மாணவர்களுக்கு வட்டார அளவில் போட்டி நடத்தி, அதில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு மட்டும் மாவட்ட அளவில் 6.12.2022 முதல் 10.12.2022 வரை போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் 6,952 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 1,358 மாணவ மாணவிகள் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றனர். இதையடுத்து மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்ற மாணவ- மாணவிகளில் 491 பேர் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டனர். அதில் 35 மாணவ, மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதையடுத்து மாநில மற்றும் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற கடலூர் மாவட்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் அருண் தம்புராஜ், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் சரவணகுமார் நன்றி கூறினார்.






