திட்டக்குடி அருகே காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு

பெரியசாமி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
திட்டக்குடி அருகே  காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்கல்பூண்டி பகுதி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 65 ) இவரது மனைவி கன்னி யம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லை. சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெரியசாமி நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் பெரியசாமி கிடைக்கவில்லை.

கீழ்கல்பூண்டி அருகில் உள்ள கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரிய சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com