search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Damaged embankment"

    • வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.
    • மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. அரியலூர் மாவட் டத்தை இணைக்கும் இந்த தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும். இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள வெள்ளாற்றங்கரை மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.

    இதனால் வெள்ளாற்றங் கரை பகுதி வழியாக விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கரையின் ஓரம் சீமை கரு வேல மரங்கள் அதிக அள வில் உள்ளதால் விவசாயி கள், பொதுமக்கள் கரையில் நடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர் கரையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மழையால் சேதமடைந்துள்ள வெள்ளாற்றங்கரையை சீரமைக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்துள்ள கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயி கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

    ×