search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "temple kumbabishekam"

    • ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம்.
    • இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் புனரமைக்கப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தினை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தொடங்கி வைத்தார்.

    பின்னர், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு குடமுழுக்கு நடத்திட 2016-ம் ஆண்டு திருப்பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு காரணங்களினால் குடமுழுக்கு தள்ளிப் போனது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, கடந்த 2021 ஜூலை மாதம் கோவிலுக்கு வருகை தந்து ஆய்வு செய்தோம்.

    அதனைத் தொடர்ந்து கடந்த 2022 செப்டம்பர் மாதம் மீண்டும் ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தியதன் காரணமாக ரூ.4.57 கோடி மதிப்பீட்டில் 21 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்றைய தினம் சேலம் மாவட்டம் மக்கள் மகிழ்ச்சியடையும் வகையில் விமரிசையாக குடமுழுக்கு நடைபெற்று உள்ளது. தமிழிலும் குடமுழுக்கு நடந்தது.

    இக்கோவிலை பொருத்தளவில் கடைசியாக எப்பொழுது குடமுழுக்கு நடைபெற்றது என்ற வரலாறே இல்லை. 1993-ம் ஆண்டு ராஜகோபுரத்திற்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.

    இப்படி நீண்ட ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இதுவே சான்றாகும். இந்த ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை 1,118 கோவில்களுக்கு குடமுழுக்கு நடந்தேறி இருக்கின்றது.

    அதேபோல கோவிலில் திருப்பணிகள் தொடங்கப்பட்டதால் தங்கத்தேரானது பவனி வரவில்லை. தற்போது உபயதாரர்கள் நிதியுதவிடன் ரூ.3.04 லட்சம் மதிப்பீட்டில் தங்கத்தேர் புனரமைக்கப்பட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் இன்றைக்கு வெள்ளோட்டம் விடப்பட்டது.

    கோவில்களுக்கு சொந்தமான சொத்துக்களை மீட்கும் பணிகளில் இதுவரை ரூ.5,473 கோடி மதிப்பிலான 5,820 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் 68 தங்கரதங்களும், 57 வெள்ளி ரதங்களும் பயன்பாட்டில் இருக்கின்றன.

    ராமேசுவரம், சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களில் பல ஆண்டுகளாக ஓடாமல் இருந்த தங்கத் தேர்களை பக்தர்களின் நேர்த்திக்காக உலா வரச் செய்துள்ளோம். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு பெரியபாளையம், புரசைவாக்கம் மற்றும் நங்கநல்லூர் ஆகிய திருக்கோவில்களுக்கு புதிய தங்கத்தேர் செய்திடவும், திருத்தணி, இருக்கன் குடி, சென்னை காளிகாம்பாள், திருக்கருக்காவூர் மற்றும் திருநெல்வேலி ஆகிய கோவில்களுக்கு புதிய வெள்ளித்தேர்கள் செய்திடவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருத்தணி வெள்ளித் தேர் பணி நிறைவுற்று வெள்ளோட்டம் நடைபெற்றுள்ளது.

    அதேபோல் ரூ.41.53 கோடி மதிப்பீட்டில் 71 புதிய மரத்தேர்கள் உருவாக்கிடவும், ரூ.7.83 கோடி மதிப்பீட்டில் 41 மரத்தேர்களை மராமத்துப் பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆட்சியானது இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் ஒரு புரட்சி ஏற்படுத்தி வசை பாடியவர்கள் எல்லாம் வாழ்த்துகின்ற நிலையை உருவாக்கி உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம், எம்மதமும் சம்மதமே என்று ஆட்சி நடத்துகின்றார். அதற்கு சாட்சியாக இன்றைக்கு நடைபெற்ற குடமுழுக்கு விழாவிற்கு அருகில் உள்ள மசூதியில் இருந்து பக்தர்களுக்கு இலவசமாக குடிநீர் பாட்டில்களை வழங்கிய நிகழ்வே அமைந்துள்ளது. அனைத்து மதத்தினரும் அவரவர் சுதந்திரமாக மத வழிபாடுகளை செய்வதற்கு இந்த ஆட்சியிலே பாதுகாப்பு இருக்கின்றது என்பதற்கும் இதனை சான்றாக எடுத்துக் கொள்ளலாம்.

    இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 7,036 கோவில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில வல்லுநர் குழுவினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதில் 3000-க்கும் மேற்பட்ட கோவில்களில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 4 ஆயிரம் கோவில்களுக்கும் திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத்துறைக்கு அரசிடமிருந்து மானியமாக சுமார் ரூ.450 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒருகால பூஜைத் திட்டத்திற்கு ரூ.200 கோடியும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைக்க ரூ. 200 கோடியும், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட கோவில்களின் பராமரிப்பு மற்றும் நிர்வாக செலவினத்திற்கு ரூ.37 கோடியும், வள்ளலார் முப்பெரும் விழாவினை கொண்டாடிட ரூ.3.25 கோடியும், ராமேசுவரம், காசி ஆன்மிகப் பயணத்திற்கு ரூ. 1.25 கோடியும் என பல்வேறு திட்டங்களுக்கு அரசு மானியங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார்.

    கடந்த ஆட்சி காலங்களில் இந்த அளவிற்கு அரசு மானியம் வழங்கப்பட்டதே இல்லை. எங்களை பொறுத்தளவில் சிறிய கோவில்கள், பெரிய கோவில்கள் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்து கோவில்களிலும் திருப்பணிகளை முழு வீச்சில் செய்துக் கொண்டிருக்கின்றோம். நீண்ட காலங்களாக குடமுழுக்கு நடைபெறாத கோவில்கள் குறித்து தகவல் தெரிவித்தால் அதனை ஆய்வு செய்து திருப்பணி மேற்கொள்ள இந்து சமய அறநிலையத்துறை தயாராக இருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது.
    • கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பரிவாரதெய்வங்களுக்கு ஏராளமான பொருட்கள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (புதன்கிழமை ) காலை9மணிக்குமேல் 10.30 மணிக்குள்நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் இன்று ( திங்கட் கிழமை )மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . இதற்கான ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர்சிறப்பாக செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.

    மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பாக ஊர் நாட்டாண்மையை ஆபாசமாக திட்டியதால் மன வேதனை அடைந்த அவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    திருநாவலூர்:

    விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் அருகே உள்ள பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர்(வயது65). இவரது மனைவி அஞ்சலை.

    சந்திரசேகர் ஊர் நாட்டாண்மையாக இருந்து வந்தார். அந்த ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பாக சந்திர சேகர் மற்றும் சிலர் பேசினர். அப்போது அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    அப்போது சில வாலிபர்கள் சந்திர சேகரை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனவேதனை அடைந்தார். பின்னர் அவர் அங்குள்ள மாமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அவரது மகன் பார்த்தீபன் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், மணி ஆகியோர் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×