என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தருமபுரம் ஆதீனம்"
- ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, அகோரம் மற்றும் சிலர் சிறையில் இருந்து ஜாமின் பெற்று வெளியே வந்தனர்.
இதைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அதேபோல் திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், பொதுச்செயலாளர் செந்திலரசன் ஆகியோரும் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- தமிழ்நாட்டின் மிக தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுரம் ஆதீனம் மிக முக்கியமானதாகும்.
- அண்மையில் தருமபுரம் மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது
தமிழ்நாட்டின் மிக தொன்மையான ஆதீன மடங்களில் தருமபுரம் ஆதீனம் மிக முக்கியமானதாகும். இந்த மடத்தின் 27 வது மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் இருந்து வருகிறார். புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறக்கப்பட்டபோது இவரது தலைமையில் தமிழ்நாட்டின் முக்கிய மடாதிபதிகள் டெல்லி சென்று பிரதமரிடம் செங்கோல் வழங்கினார்கள்.
அண்மையில் தருமபுரம் மடாதிபதிக்கு மிரட்டல் விடுத்த விவகாரத்தில் தமிழ்நாடு காவல்துறை விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் திமுக அரசுக்கும் தருமபுரம் ஆதீனத்திற்கும் இடையே நல்லுறவு பேணப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று கடலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2024 பாராளுமன்ற தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது எனும் முழு வெற்றியைப் பெற வாழ்த்துகளைத் தெரிவித்து வெள்ளி செங்கோலை வழங்கினார் தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள். மேலும், ஆதீனம் சார்பில் வெள்ளி செங்கோலை ஸ்டாலினிடம் வழங்கி ஆசி கூறினார்.
- தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
- அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமி இருந்து வருகிறார்.
இந்நிலையில், தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக தருமபுரம் ஆதீனம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் பூதாகாரமானதை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆபாச வீடியோ தொடர்பாக விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பா.ஜ.க. தலைவர் அகோரம் உள்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களில் நான்கு பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி அகோரம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அதன்படி தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோவை வெளியிடுவதாக மிரட்டல் விடுத்த மயிலாடுதுறை மாவட்ட பா.ஜ.க. தலைவர் அகோரத்தை மும்பையில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.
- தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராக உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.
எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளா இருந்து வருகிறார்
இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.
அதில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும். நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி. கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.
இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.
இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவர்களை நேற்று இரவு 10 மணியளவில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
- இந்த முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பவள விழா நிறைவை முன்னிட்டு நடைபெற்ற முப்பெரும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
கல்லூரியின் பவளவிழா மலரையும், திருக்குறள் உரைவளம் நூலையும் வெளியிட்டு, தருமை இணையதள வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி ஒளிப்பதிவகத்தினையும் முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். அப்போது முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
1946ம் ஆண்டு தருமை ஆதீனம் 25வது குருமகா சன்னிதானம் தொடங்கிய இக்கல்லூரி 1972ம் ஆண்டு நடந்த வெள்ளிவிழாவில் கலைஞர் கலந்துகொண்டார்., பொன்விழா நிகழ்ச்சியில் பேராசிரியர் அன்பழகனும் கலந்துகொண்டு சிறப்பித்திருக்கிறார். பவளவிழா கலந்துகொண்டு இந்த கலைரயங்கில் உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
அறநிலையத் துறையை மிக சிறப்பாக நிர்வகித்து வருகிறோம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில் தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத் துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.
தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். நாட்டுக்கும், மக்களுக்கும் பிரச்சினை வரும்போது ஆன்மீகவாதிகளும் போராடி உள்ளனர் என தெரிவித்தார்.
- புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
- மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.
சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 32 ஆண்டுகளுக்கு பிறகு, வருகிற 24-ந் தேதி குடமுழுக்கு நடக்கிறது. குடமுழுக்கையொட்டி கோவிலில் திருப்பணிகள் நடந்தது. தற்போது பணகள் நிறைவடைந்துள்ளது. சட்டை நாதர் கோவிலில் உள்ள 4 கோபுர வாசல்களில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டியே வைக்கப்பட்டு இருந்தது. மற்ற 3 கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று காலை மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது.
தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலில் சிறப்பு பூஜைகள் செய்து, புனித நீர் தெளிக்கப்பட்டு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.
அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் சென்றனர். 40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டிருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க தலைவர் மார்க்கோனி, கோவில் திருப்பணி உபயதாரர் முரளி, கோவில் நிர்வாகி செந்தில், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் பந்தல் முத்து, பொறியாளர் செல்வகுமார், கோவி நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை, சப்தகன்னிகள் பூஜை நடந்தது.
- வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
கன்னியாகுமரி:
ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை சார்பில் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி கன்னியாகுமரி கடற்கரையில் நேற்று மாலை நடந்தது.
கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள வேதபாட சாலையில் இருந்து மேளதாளத்துடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் நடராஜர் எழுந்தருளி கடற்கரையில் பரசுராமரால் ஸ்தாபிக்கப்பட்ட விநாயகர் கோவிலுக்கு ஊர்வலமாக புறப்பட்டு வந்தார்.
தொடர்ந்து பரசுராமர் விநாயகர் கோவிலில் பூஜை, சப்தகன்னிகள் பூஜை நடந்தது. அதன் பிறகு கடல் மாதாவுக்கு சங்கல்ப பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடந்தது. சுமங்கலிப்பெண்கள் அகல்விளக்கு ஏற்றி கடல் அன்னைக்கு தீபம் காட்டினார்கள். அதன்பிறகு வானத்தில் பவுர்ணமி நிலவு தோன்றியதும் முக்கடல் சங்கமம் மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவை தலைவர் வக்கீல் ராஜகோபால் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில், ஒருங்கிணைப்பாளர் அனுசியாசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது தருமபுரம் ஆதீனம் நெல்லை கட்டளை விடாதிபதி ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் தீபம் ஏற்றி முக்கடல் சங்கமம் மகா சமுத்திர ஆரத்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் அர்ச்சகர் ராஜாமணி அய்யர் விக்னேஷ் தலைமையில் கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் அர்ச்சகர் சுரேஷ் முன்னிலையில் 5 சிவாச்சாரியர்கள் மற்றும் அர்ச்சகர்கள் 5 அடுக்கு தீபம் கொண்ட ராட்சத தீபாரதனைத்தட்டில் தீபம் ஏற்றி பவுர்ணமி நிலவை நோக்கி தீபம் காட்டி ஆராதனை செய்தனர். இதில் திரளான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இறுதியாக நிகழ்ச்சி பொறுப்பாளர்கள் முருகேஷ் ஜெயராம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி மாவட்ட இந்து திருத்தொண்டர் பேரவையினர் செய்து இருந்தனர்.
- அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர்.
- ராஜராஜ சோழனால் தான் நமக்கு திருமுறை பாடல்கள் கிடைத்துள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவிலில் மாமன்னர் ராஜராஜ சோழன் 1037-வது சதயவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் இன்று காலை கோவில் பணியாளர்களுக்கு புத்தாடைகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பேரபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக தருமபுரம் ஆதீனம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
மாமன்னர் ராஜராஜ சோழன் சதயவிழா இனி ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம்.
நான் ஏற்கனவே கூறியபடி ஆன்மீக அரசாக தி.மு.க. திகழ்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். அரசு விழாவாக கொண்டாடப்படுவதின் மூலம் இனி அனைத்து தரப்பினரும் சதய விழாவை கொண்டாடுவர். உலகம் முழுக்க புகழ் கிடைக்கும்.
ராஜராஜ சோழனால் தான் நமக்கு திருமுறை பாடல்கள் கிடைத்துள்ளது. 12 திருமுறைகளில் உள்ள 18 ஆயிரம் பாடல்களை செப்பேடு, ஓலைச்சுவடிகளில் பதிவிட்டு வருகிறோம். தற்போது கை பிரதிகளாக அச்சிடப்பட்டு வருகிறது. மேலும் செல்போனில் செயலி மூலமும் வெளியிடும் பணி நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்