என் மலர்
கடலூர்
- நெல்லிக்குப்பத்தில் சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.
- போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு சுகன்யா என்பவர் சப்-இன்ஸ்பெக்டராக பணி செய்து வருகிறார்.வழக்கம் போல இன்று காலையில் அவர் பணிக்கு வந்தார். சிறிது நேரத்தில் மயங்கிய நிலையில் காணப்பட்டார். அங்கு பணியில் இருந்த போலீசார் அவரிடம் விசாரித்த போது, தான் தூக்க மாத்திரை அதிகளவில் விழுங்கியதாக கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை மீட்டு புதுவை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரையை ஏன் விழுங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா விழுப்புரம் போலீஸ் பயிற்சி பள்ளிக்கு தற்காலிக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனால் மனஉளைச்சல் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலை முயற்சி செய்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தொடர் விசாரணை நடந்து வருகிறது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த போதே பெண் சப்-இன்ஸ்பெக்டர் தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
- கடலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர்.
- நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது
கடலூர்:
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடை வெயில் தொடங்கி சுட்டெரிக்கும் வெயில் பதிவாகி வருகின்றது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் மார்ச் மாதம் முதல் தற்போது வரை சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் கடும் அவதி யடைந்து வருகின்றனர். மேலும் அனல் காற்று வீசி வருவதால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் பாதிப்படைந்து வருவதோடு வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக சாலை ஓரங்களில் உள்ள பழச்சாறுகள், கரும்பு சாறு, இளநீர், நுங்கு, பழ வகைகள் போன்றவற்றை பொது மக்கள் வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். மேலும் மதிய வேளையில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெருமளவில் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது.
இது மட்டும் இன்றி காலை முதல் மதியம் வரை கடுமையான வெயில் மற்றும் அனல் காற்று வீசி வருவதால் இரவு நேரங்களில் வழக்கத்தை விட அதிக அளவில் புழுக்கம் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் தூக்கமின்றி இருப்பதையும் காண முடிந்தது. இந்த நிலையில் கடும் வெயில் காரணமாக தமிழகத்தில் நாளை மறுநாள் திறக்க இருந்த பள்ளிகள் 14-ந் தேதி திறக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 -ந்தேதி 102.2, 2- ந் தேதி 104.5, 3- ந் தேதி 104, 4 -ந் தேதி 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி இருந்தது. கடலூரில் இன்று காலை 11.30 மணி நிலவரப்படி 101.48 டிகிரி வெயில் பதிவாகியிருந்தது. பொதுமக்கள் கடும் வெயிலால் கடுமையாக பாதிப்படைந்து வரு வது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து வானிலையாளர் பாலமுருகனிடம் கேட்டபோது, கடலூர் மாவட்டத்தில் கோடை வெயில் தொடங்கி தற்போது வரை வழக்கத்தை விட அதிக அளவில் பதிவாகி வருகின்றது. இதில் கடந்த நான்கு நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் அளவு பதிவாகி உள்ளது. இந்த நிலையில் கடல் பகுதியில் இருந்து மேற்கு திசை காற்று மிக வலிமையாக வறண்ட காற்றாக வருவதால் அனல் காற்று அதிகரித்து சுட்டெரிக்கும் வெயில் தாக்கி வருகின்றது.
மேலும் கிழக்கு பகுதியிலிருந்து வரக்கூடிய ஈரக்காற்று மதியம் ஒரு மணி முதல் 2 மணிக்குள் காற்று வந்தால் வெயிலின் தாக்கம் குறையும். ஆனால் தற்போது கிழக்கு காற்று தாமதமாக வருகின்றது. இது மட்டும் இன்றி தென்மேற்கு பருவமழை எப்போதும் ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கப்படும். ஆனால் இதனால் வரை தென்மேற்கு பருவ மழை கேரளா பகுதியில் தொடங்காததால் தமிழகத்தில் தொடர்ந்து வெயில் தாக்கி வருகின்றது. இந்த வருடம் தென்மேற்கு பருவக்காற்று நிலை இதுவரை அடையாததால் சற்று காலதாமதம் ஆகும் என எண்ணப்படுகிறது. இது மட்டும் இன்றி அந்தமான் பகுதியில் தற்போது தான் தென்மேற்கு பருவ மழை நிலை கொண்டு தொடங்கும் நிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து கேரளா பகுதியில் தென்மேற்கு மழை தொடங்கும் பட்சத்தில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படும். எனவே வருகிற 2 நாட்களும் இதே போன்ற வறண்ட நிலை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் என தெரிவித்தார். ஆகையால் பொதுமக்கள் தமிழக அரசின் நிபந்தனைக்கு உட்பட்டு வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும்.
- புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.
சிதம்பரம்:
சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உலகிலேயே 2-வது பெரிய ரெயில்வே ஸ்தாபனமான இந்திய ரெயில்வே துறையில் ஓடிசா ரெயில் விபத்தில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சி.ஐ.ஜி. எனப்படும் தணிக்கை துறையின் அறிக்கையை துரிதமாக செயல்படுத்தியிருந்தால் இந்த விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும். எனவே இந்த விபத்திற்கு பிரதமர் மோடி முழுப்பொறுப்பேற்க வேண்டும். மத்திய ரெயில்வே மந்திரி பதவி விலக வேண்டும், இது தொடர்பாக விசாரணை நடத்திட தனி ஆணையம் அமைக்க வேண்டும்.
கடந்த காலத்தில் ரெயில்வே அமைச்சராக இருந்த மம்தாவால் செயல்படுத்தப்பட்ட கலாச்சி என்ற பெயரிலான விபத்து தடுப்பு திட்டம் செயல்படுத்தியிருந்தாலே இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. ரெயில் விபத்து தடுப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.ஆயிரம் கோடி ஓதுக்கீடு செய்தும் இந்த விபதது நடந்துள்ளது உலக அரங்கில் இந்தியாவிற்கு தலை குனிவை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீராம், ஹரே ராம் என்று கோஷம் இடுபவர்களுக்கும், கிறிஸ்துவர்கள், முஸ்லிம்களுக்கு எதிராக செயல்படுபவர்களுக்கு மட்டுமே பிரதமர் மோடி மந்திரி சபையில் இடம் தரப்படுகிறது, பாராளுமன்றம் என்பது அனைத்து தரப்பு மக்களுக்குமானதாகும். ஆனால், இங்கு ஒரு குறிப்பிட்ட மதத்தினரை அழைத்து திறப்பு விழா நடத்தியது தவறாகும். எனவே, புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்ட தினத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கருப்பு தினமாக அறிவிக்கிறது.
விழுப்புரம் மெல்பாதி கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றவர்களை தாக்கிய சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருந்தபோதும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. கடந்த 1947-ம் ஆண்டு ஆலய நுழைவு தனிச்சட்டம் இயற்றப்பட்டது. இருந்தபோதும் தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான இந்து சமய அறநிலைத்துறை தொடர்பான கோவில்களில் சாதிய மறுப்பு நிகழ்வு நடைபெறுவது வெட்கக்கேடானது.
பா.ம.க. போன்று சாதி வெறுப்பு அரசியலில் ஈடுபடும் அரசியல் வாதிகளாலேயே இது போன்ற நிகழ்வுகள் தமிழகத்தில் தொடர்கதையாக உள்ளது. இதற்கு எதிராக எனது தலைமையில் வருகிற 9-ந்தேதி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதேபோல மதுரை திருமோகூர் கோவிலில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர். 30-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளும், கார், கொடி மரம், பெயர்ப்பலகைகள் கலவரத்தில் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டதே தவிர யாரும் கைது செய்யப்படவில்லை. இதனை கண்டித்து எனது தலைமையில் 12-ந்தேதி மதுரையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
சிதம்பரத்தில் நடந்த குழந்தை திருமணம் கண்டிக்கத்தக்கதாகும். குழந்தைகள் திருமண வயதை எட்டிய பின்னரே அவர்களுக்கு திருமணம் செய்ய வேண்டும் என்பதே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைபாடாகும்.
தமிழகம் முழுவதும் சிறையில் 10 ஆண்டு நிறைவு செய்த தண்டனை கைதிகளை கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும்.
- மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கூடலூர் கிராமத்தில் வெள்ளாற்றின் குறுக்கே தடுப்பணை உள்ளது. அரியலூர் மாவட் டத்தை இணைக்கும் இந்த தடுப்பணை வெள்ளாற்றில் ரூ.15.77 கோடியில் கட்டப் பட்ட தடுப்பணையால் 4.14 மில்லியன் கனஅடி நீரைச் சேமிக்க முடியும். இந்த தடுப்பணையை ஒட்டியுள்ள வெள்ளாற்றங்கரை மழைக் காலங்களில் சேதம் அடைந்து கரைப்பகுதியில் மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
இதனால் வெள்ளாற்றங் கரை பகுதி வழியாக விவசாயிகள், பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும் கரையின் ஓரம் சீமை கரு வேல மரங்கள் அதிக அள வில் உள்ளதால் விவசாயி கள், பொதுமக்கள் கரையில் நடந்து செல்லும்போது பெரும் சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். எனவே பொதுப்பணித்துறையினர் கரையோரம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி மழையால் சேதமடைந்துள்ள வெள்ளாற்றங்கரையை சீரமைக்க வேண்டும். மேலும் சேதம் அடைந்துள்ள கரையை சீரமைக்க வேண்டும் என விவசாயி கள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- பெரியசாமி சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
- கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கீழ்கல்பூண்டி பகுதி மெயின் ரோட்டில் வசித்து வருபவர் பெரியசாமி (வயது 65 ) இவரது மனைவி கன்னி யம்மாள். இவர்களுக்கு குழந்தை இல்லை. சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பெரியசாமி நேற்று மாலை வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இவரது உறவினர்கள் பெரியசாமியை பல்வேறு இடங்களில் தேடினர் ஆனால் எங்கு தேடியும் பெரியசாமி கிடைக்கவில்லை.
கீழ்கல்பூண்டி அருகில் உள்ள கிணற்றில் பெரிய சாமி உடல் மிதப்பதாக ராமநத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பெரிய சாமி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமியை எப்படி இறந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது.
- கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு மதுரா துண்டுக்காடு கிராமத்தில் கணபதி,முருகன், அழகு முத்துமாரியம்மன், தட்சணாமூர்த்தி, நொண்டிவீரன் கோவில் உள்ளது. இக் கோவிலில் பரிவாரதெய்வங்களுக்கு ஏராளமான பொருட்கள் செலவில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நாளை மறுநாள் (புதன்கிழமை ) காலை9மணிக்குமேல் 10.30 மணிக்குள்நடைபெற உள்ளது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான யாகசாலையில் இன்று ( திங்கட் கிழமை )மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்குகிறது. விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது . இதற்கான ஏற்பாடுகளை சாத்திப்பட்டு துண்டுகாடு கிராமவாசிகள், விழா குழுவினர்சிறப்பாக செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு துண்டு காடு கிராமமே விழாக்கோலம் கொண்டுள்ளது.
- கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது.
- கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த அமரேசன் கையில் தண்ணீர் குவளையுடன் மனு அளித்தார்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்ற வருகின்றது. இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதனைதொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பொது மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்க நேரில் வந்தனர். அப்போது வேப்பூர் வட்டம் வலசை கிராமத்தை சேர்ந்தவர் அமரேசன். இவர் டிசம்பர்-3 இயக்க மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த அமரேசன் கையில் தண்ணீர் குவளையுடன் நூதன முறையில் மனு அளித்தார்.
வலசை கிராமத்தில் பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஆலை அமைத்து பல ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.
மேலும் எனது ஊரில் கிட்னி பிரச்சினையால் பலர் உயிரிழந்துள்ளனர். அதனை தடுக்கும் வகையில் பல லட்சம் ரூபாய் செலவில் சுத்திகரிப்பு எந்திரம் அமைக்கப்பட்டும் இயங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதன் மூலம் பொதுமக்களின் உடல்நிலை பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தடுக்கப்படும். ஆகையால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கு வதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு முதல்- அமைச்சர் இளையபெருமாளுக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
- இயல்பான விபத்தல்ல. நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து.
கடலூர்:
சிதம்பரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறிய தாவது:-
இளையபெருமாள் நூற்றாண்டு விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடத்தப்படவுள்ளது. மறைந்த முன்னாள் தலை வர் இளைய பெருமாள் சமூக பணியை அறிந்து தமிழ்நாடு முதல்- அமைச்சர் அவருக்கு சிதம்பரத்தில் நினைவு சின்னம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். . இந்த நூற்றாண்டு மிகப்பெரிய விபத்து ஓடிசா ரெயில் விபத்தாகும். 275 பேர் இறந்துள்ளனர். ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் காயமுற்றுள்ளனர். நவீன தொழில்நுட்பம் நிறைந்த இந்த நூற்றாண்டில் இந்த விபத்திற்கு காரணம் மனித தவறுதான். அதனை கையாண்ட அதிகாரிகள், பணியாளர்கள் தவறு செய்துள்ளார்கள். மோசமான நிர்வாகத்தால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குற்றம் செய்தவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் கூறியுள்ளார். இது இயல்பான விபத்தல்ல. நிர்வாக கோளாறினால் ஏற்பட்ட விபத்து. இதனால் ரயிலில் பயணம் செய்பவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
காவிரியில் மேகதாது அணை கட்டுவது குறித்து தமிழகத்தில் பற்றி எரியும் கருத்தாக உள்ளது. தமிழ கத்தை பொறுத்தவரை காவிரி என்பது நம் உயிர் மூச்சு. காவிரி நதி தோன்றி யதிலிருந்து தமிழகத்திற்கு பலனும் ஏற்பட்டுள்ளது. பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. பருவ மழை காலங்களில் 20 லட்சம் கன அடி வரை தமிழக காவிரி டெல்டா கடை மடை பகுதிகளில் வெள்ளப் பெருக்கெடுத்து பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நதி நீர் ஆணையம் 177.25 கன அடி நீர் தமிழ கத்திற்கு வழங்க வேண்டும் என அறி வித்தது. அதில் குறைவு ஏற்படக்கூடாது. குறைவு ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும். நீரை பெற நமக்கு உரிமை உள்ளது. பாஜகவினர் தமிழக காங்கிரசை விமர்சிக் கிறார்கள். கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு இருந்த போது அன்றைய முதல்வர் பொம்மை மேகதாது அணை கட்ட ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார். அப்போது ஏன் தமிழக பா.ஜனதா எதிர்க்க வில்லை. அப்போது தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள்தான் எதிர்த்தது. மேலும் 2017-ம் ஆண்டு மேகதாது அணை கட்ட விரிவாக திட்ட அறிக்கை தயாரிக்க, தமிழக அரசை ஆலோசிக்காமல் மத்திய நீர்வளத்துறை அமைச் சகம் அனுமதி அளித்தது. 2018 நவம்பர் 22-ல் மேகதாது அணை கட்ட சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்தது பா.ஜனதா அரசு. அதற்கு தமிழக பா.ஜனதா பாவ மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகஅரசு அனுமதி மற்றும் ஒப்புதலின்றி மேகதாது அணை கட்டக்கூடாது. சைவ ஆதீனங்களை மட்டும் அழைத்து நரேந்திரமோடி நாடாளுமன்றத்தை திறந்துள்ளார் . இவ்வாறு கே.எஸ்.அழகிரி கூறினார்.
முன்னதாக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மறைந்த தலைவர் இளையபெருமாள் நூற்றாண்டு விழா குறித்து கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் செந்தில்நாதன் தலைமை வகித்தார். நகர தலைவர் தில்லை மக்கீன் வரவேற்றார். மாநில செயலாளர் சித்தார்த்தன், சேரன், பொதுக்குழு உறுப்பினர் ஜெமின் ராதா, மாவட்ட துணைத் தலைவர் ராஜாசம்பத்குமார், ஜோதி மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் டாக்டர் செந்தில்வேலன், மாவட்ட தொண்டரணி தலைவர் தில்லை குமார், விவசாய சங்கத் தலைவர் இளங்கீரன், வட்டாரத் தலைவர் சுந்தரராஜன், செழியன் மகளிரணி தில்லை செல்வி, ஜனகம், மாலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டி உள்ளது.
- அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது.
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை அருகே, கோவி லானூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் வியாபாரி மைக்கேல் ராயன் (வயது.60). இவரது வீட்டின் பின் புறத்தில் உள்ள சுமார் 8 அடி உயரம் உள்ள மா மரத்தில், கதண்டு விஷ வண்டுகள் கூடு கட்டிக்கொண்டு, அவரது வீட்டில் உள்ள வர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை தினந் தோறும் அச்சுறுத்தி வந்தது. இது குறித்து, மங்கலம் பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் பாண்டியன், முஹமது புன்யாமீன், சிவசங்கரன், அன்புமணி, அருள்செல்வன், பார்த்திபன், ராஜதுரை ஆகியோர் அங்கு விரைந்து சென்று, விஷ வண்டு கூட்டினை முற்றிலும் அப்புறப் படுத்தினர்.
- பிரதிஷா கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை.
- சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார்.
கடலூர்:
பண்ருட்டி ெரயில்வே காலனியை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகள் பிரதிஷா (19), இவர் டிப்ளமோ படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.இவர் கடந்த 2-ந் தேதி மாலை 6மணிக்கு வெளியில் சென்றவர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இவரது தாயார் லதா பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரில் ெரயில்வே காலனியை சேர்ந்த சீராளன் ஆசை வார்த்தை கூறி பிரதிஷாவை கடத்தி சென்றதாக கூறியுள்ளார். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன இளம் பெண்ணை வலை வீசி தேடி வருகிறார்.
- 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது.
- ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது.
கடலூர்:
கடலூர் கம்மியம்பேட்டை சாலையில் கெடிலம் ஆறு உள்ளது. இந்த ஆற்றின் குறுக்கே பாலம் ஒன்று செல்கிறது. இந்த பாலம் வழியாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் கடலூர் மாநகரத்திற்குள் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் கடலூர் செம்மண்டலம் மற்றும் கடலூர் ஜவான்பவன் சாலை வழியாக அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலம் வழியாக தான் சென்று வருகின்றது. இதன் காரணமாக இவ்வழியாக 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த பாலமானது கம்மியம்பேட்டை பாலத்தின் இருபுறமும் விபத்து ஏற்படாத வகையில் சிமெண்ட் தடுப்பு கட்டைகள் அமைத்து இருந்தன.
ஆனால் தற்போது சிமெண்ட் கட்டைகள் பெயர்ந்து வருகின்றது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் போது அதிகமான அதிர்வுகள் ஏற்படுவதால் சிமெண்ட் காரைகள் சாலையில் விழுந்தும், பல இடங்களில் விரிசல் ஏற்பட்டும், ஒரு சில இடங்களில் உள்ளே இருக்கும் கம்பிகள் முழுவதும் வெளியே தெரிந்த வண்ணம் உள்ளது. இதனால் ெபரிய அளவிலான விபத்து ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சமூக அலுவலர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே பெரிய அளவிளான சேதம் ஏற்படும் முன்னர் அதிகாரிகள் இதில் தலையிட்டு பாலத்தின் சிமெண்ட் தடுப்பு கட்டைகளை உடனடியாக சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்.
- 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
- மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்
கடலூர்:
கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் மற்றும் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் வியாபாரிகள் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் இடம் தேர்வு செய்வதற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் வலியுறுத்தி மனு அளித்தார். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் உடனுக்குடன் முடித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.






