search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவந்திபுரம் கோவிலில்  பாலாலயம் யாகசாலை பூஜை நிறைவடைந்தது  விரைவில் திருப்பணிகள் தொடங்குகிறது
    X

    திருவந்திபுரம் தேவநாதசாமி கோவிலில் பாலாலய யாகசாலை நிறைவு பூஜை நடந்த போது எடுத்தபடம்.

    திருவந்திபுரம் கோவிலில் பாலாலயம் யாகசாலை பூஜை நிறைவடைந்தது விரைவில் திருப்பணிகள் தொடங்குகிறது

    • இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம்.
    • மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் 108 வைணவ தளங்களில் முதன்மை பெற்றதாகும். இக்கோவிலில் வருடம் தோறும் இரண்டு பிரம்மோற்சவ விழா மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் முடிவடையும் நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் பாலாலயம் கடந்த 5-ந்தேதி பாலாலயம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து பகவத் பிரார்த்தனை புண்ணியாவாஜனம், ஹோமம், பூர்ணாஹதி மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டன. நேற்று 6-ந் தேதி காலை புண்ணியாவாஜனம், அக்னி பிரதிஷ்டை, கும்ப ஆராதனம், ஹோமம், பூர்ணா ஹதி, மாலை மகா சாந்தி ஹோமம், மகா சாந்தி திருமஞ்சனம் ஹோமம் மற்றும் பூர்ணாஹதி நடைபெற்றது. இறுதி நாளான இன்று அக்னி பிரவேசம், மகா பூர்ணாஹதி, யாத்ரா தானம், கும்பம் புறப்பாடு நடைபெற்று பாலாலயம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி கும்பிட்டனர். இதனைத் தொடர்ந்து பாலாலயம் நடைபெற்று கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×