என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணி: கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு
    X

    கடலூர் மஞ்சகுப்பம் மைதானத்தில் தற்காலிக கடை அமைப்பதற்கான இடத்தை கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

    கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணி: கலெக்டர் அருண் தம்புராஜ் திடீர் ஆய்வு

    • 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.
    • மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும்

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட மஞ்சக்குப்பம் அண்ணா மார்க்கெட், திருப்பாதிரிப்புலியூர் பான்பரி மார்க்கெட் மற்றும் முதுநகர் பக்தவச்சலம் மார்க்கெட் கட்டிடம் பழுதடைந்த காரணத்தினால் 17 கோடி 50 லட்சம் செலவில் மாநகராட்சி சார்பில் கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது. இதனை தொடர்ந்து இங்கு உள்ள வியாபாரிகளுக்கு மாற்று இடம் தர வேண்டி மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் அதிகாரிகள் மற்றும் கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மற்றும் வியாபாரிகள் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர் மற்றும் முதுநகரில் இடம் தேர்வு செய்வதற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள மார்க்கெட்டுக்கு அருகில் வியாபாரிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கடலூர் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் ஜி.ஆர்.துரைராஜ் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா விடம் வலியுறுத்தி மனு அளித்தார். இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் வியாபாரிகளுக்கு தற்காலிகமாக கடை அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டார். இதனை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வியாபாரிகளுக்கு தேவையான அனைத்து பணிகளையும் உடனுக்குடன் முடித்து கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அப்போது மாநகராட்சி பொறியாளர் மாலதி, உதவி பொறியாளர் மகாதேவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×