என் மலர்
கடலூர்
- முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம்.
- இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழில் மையத்தில் வாயிலாக அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் குறித்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில் முனைவோர்களுக்கான விழிப்புணர்வு முகாமினை கலெக்டர் அருண் தம்புராஜ், தொடங்கி வைத்தார். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தினை இந்த ஆண்டு முதல் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் திட்ட மதிப்பீட்டில் 65 சதவீதம் வங்கி கடனாகவும், 35 சதவீதம் மானியமாகவும் பெறலாம். முன் முனை மானியமாக அதிகபட்சமாக 1.50 கோடி வரை பெறலாம். வங்கி கடன் வட்டியில் 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். ஏற்கனவே தொழில் செய்து வரும் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் தொழிலை விரிவாக்கம் செய்யவும், புதியதாக தொழில் செய்ய விரும்புவோரும் இத்தி ட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
18 முதல் 55 வயதுக்குட்பட்டோர், உற்பத்தி, சேவை, வணிகம் சார்ந்த தொழில் தொடங்க லாம். மேலும் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க கல்வி தகுதி ஏதும் இல்லை. வாகனங்களை முதன்மையாக கொண்டு செயல்படுத்தக்கூடிய தொழில்களான டாக்சி, சரக்கு வாகனங்கள், பொக்லைன் எந்திரம், கான்கிரீட் எந்திரம், ஜே.சி.பி, அழகு நிலையம், ஆம்புலன்ஸ் சேவை, உடற்பயிற்சிக் கூடம், கயிறு தயாரித்தல், வியாபாரம், தரி அமைத்தல் மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்கள் தொடங்குவோரும் இத்தி ட்டத்தில் பயன்பெறலாம். மேலும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த தொழில் முனைவோர்கள் தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தொழில் தொடங்கி இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என பேசினார். இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்,மாவட்ட தொழில் மையம் விஜயகுமார் , மாவட்ட மேலாளர் தாட்கோ மணிமேகலை , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அசோக் ராஜா ,உதவி பொறியாளர் அறிவழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- நவாப்ஜான் ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார்.
- திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4.5 லட்சம் எனத் தெரிகிறது.
கடலூர்:
நெய்வேலியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகை, பணம், மோட்டார் சைக்கிள் திருடு போனது. நெய்வேலியை அடுத்த வடக்குத்து பகுதியைச் சேர்ந்தவர் நவாப்ஜான் (வயது 60). இவர் தனது குடும்பத்தாருடன் வீட்டை பூட்டி விட்டு கடந்த 4-ந்தேதி சேலத்திற்கு சென்றார். அங்கு உறவினர் வீட்டு விசேஷத்தை முடித்துவிட்டு நேற்று இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைந்திருந்தது. வாசலில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த நவாப்ஜான், பீரோவை திறந்து பார்த்தார். இதில் வைக்கப்பட்டிருந்த 7½ பவுன் தங்க நகை, ரூ.10 ஆயிரம் பணம் திருடு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியில் மயங்கி விழுந்தார். அவரது குடும்பத்தார் அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து மயக்கத்தை போக்கினர். திருடுபோன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.4.5 லட்சம் எனத் தெரிகிறது. இது தொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேர்க்கப்பட்டது. வழக்கு பதிவு செய்து கதவை உடைத்து நகை, பணம், மோட்டார் சைக்கிளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன.
கடலூர்:
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர்கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், விருத்தகிரீ்ஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா முன்னிலையில், கோவில் மேலாளர் பார்த்தசாரதி மேற்பார்வையில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோவில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கோவிலில் உள்ள 9 நிரந்தர உண்டியல்கள் மற்றும் 1 திருப்பணி உண்டியல் என 10 உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டன. இதில் 9 லட்சத்து 18 ஆயிரத்து, 53 ரூபாய் ரொக்கம், 6 கிராம் தங்கம் மற்றும் 200 கிராம் வெள்ளிப் பொருட்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தன. உண்டியல் எண்ணும் பணி முடிந்தபின் காணிக்கைகளை கோவில் ஊழியர்கள் கோவிலின் வங்கிக் கணக்கில் செலுத்தினர்.
- கல்யாணசுந்தரம் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி .
- வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தொரப்பாடி சேர்ந்தவர்கல்யாணசுந்தரம் (72),இவர் ஓய்வு பெற்ற மின்வாரிய அதிகாரி ஆவார்.இவர்நீண்ட நாட்களாகவயிற்றுவலியால் அவதிப்பட்டுவந்ததாககூறப்படுகிறது. நேற்று காலை வீட்டிலிருந்த பூச்சி மருந்தை குடித்துள்ளார். இதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- பிரபுவை குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர்.
- கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர்.
கடலூர்:
கடலூர் எஸ்.என்.சாவடியை சேர்ந்தவர் ராஜம் (வயது 57). இவரது மகன் பிரபு வை கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி 28- ந்தேதி குடும்பப் பிரச்சினை காரணமாக 3 பேர் அடித்து கொலை செய்தனர். இது தொடர்பாக கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடலூர் எஸ்.என். சாவடியை சேர்ந்த தங்கபாண்டியன் (27), கம்மியம்பேட்டையை சேர்ந்த சதீஷ் (21), வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகின்றது.
மேலும் தங்கபாண்டியன் மற்றும் சதீஷ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட பிரபுவின் தாய் ராஜம் என்பவரை கொலை வழக்கு தொடர்பாக சாட்சி சொல்லக்கூடாது என கூறி மானபங்க படுத்தி உள்ளனர். இதனை மீறி மீண்டும் சாட்சி சொல்ல சென்றால் கொன்று விடுவோம் என மிரட்டியதோடு கத்தியால் வெட்ட முயன்ற போது அங்கிருந்து ராஜம் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டியன் , சதீஷ் ஆகியோரை கைது செய்தனர். பெண்ணை வெட்டி கொல்ல முயன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம்.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு இணைய வழி குற்றங்கள் தடுப்பு விழிப்புணர்வு சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ராஜாராம் தலைமை தாங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி தொடங்கி வைத்தார்.
இதில் கடலூர் டவுன் ஹால் எதிரில் விழிப்புணர்வு பதாகைகளை போலீசார் ஆட்டோவின் பின்னால் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது சமூக வலைத்தளங்களில் உங்கள் புகைப்படங்களை வைக்க வேண்டாம், ரகசிய எண்ணை யாரிடமும் பகிர வேண்டாம், லோன் ஆப்பில் லோன் வாங்க வேண்டாம், ஆன்லைன் பார்ட் டைம் ஜாபில் நுழைய வேண்டாம், முகம் தெரியாத நபர்கள் ஆன்லைன் வாயிலாக தொடர்பு கொண்டு பணம் மோசடி செய்யும் நோக்கில் பேசினால் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்றும் மேலும் இணையவழி குற்றம் தொடர்பாக இணையவழி இலவச உதவி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்திலும் புகார் பதிவு செய்யலாம் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இதில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசலு, கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் கவிதா, புதுநகர் சப்-இன்ஸ்பெக்டர் கதிரவன் மற்றும் போலீசார், ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- பெருமாள் மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
- சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார்.
கடலூர்:
பண்ருட்டி அருகே மின் வாரிய அதிகாரி மனைவி தற்கொலை செய்து கொண்டார். கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறுகிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவர் பண்ருட்டி மின் வாரியத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாண்டி (52). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் பெரம்பலூர் போலீஸ் சூப்பிரண்டின் பாதுகாவலராக பணியாற்றி வருகிறார்.இந்த நிலையில் பாண்டி திடீரென விஷம் குடித்து விட்டார். இதில் மயங்கி விழுந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி பாண்டி பரிதாபமாக இறந்தார். இது குறித்து புதுப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் நந்த குமார் வழக்கு பதிவு செய்து பாண்டி தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்.
- அக்னேஷ் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார்.
- மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலூர்:
புவனகிரி அருகே பு.ஆதி வராகநத்தம் பகுதியை சேர்ந்தவர் அக்னேஷ் (வயது 18) இவர் கடந்த 6 மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் இந்த வயிற்றுவலிக்கு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று வயிற்றுவலி அதிக மாகவே மன உளைச்சளில் இருந்த அக்னேஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை யடுத்து வீட்டின் அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அக்னேஷ் தூக்கில் பிண மாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இது குறித்து புவனகிரி போலீ சாருக்கு தகவல் தெரி வித்தனர். தகவல் அறிந்த புவனகிரி போலீ சார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அக்னே ஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி தொடங்கி வைத்தார்.
- ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டுள்ளன.
கடலூர்:
என்.எல்.சி. இந்தியா நிறுவன தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் சுரங்கப் பகுதியில் இயக்கப்பட புதிதாக வாங்கப்பட்ட 95 வாகனங்களை என்.எல்.சி. அதிபர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி, நிறுவன இயக்குனர்கள், உயர் அதி காரிகள் முன்னலையில் கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.
நெய்வேலியில் உள்ள 3 சுரங்கங்களில் இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய வாகனங்கள் மாற்றப் பட்டு புதிதாக 47 பணியாளர் வாகனங்கள், 33 திறந்த வகை லாரிகள், 7 கேண்டீன் வாகனங்கள் மற்றும் 7 எரி பொருள் நிரப்பும் வாகனங்கள் உள்ளட்ட 95 வாகனங்கள் புதிதாக வாங்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய சுரங்க இயக்குனரகத்தின் சமீபத்திய உமிழ்வு விதிகளுக்கிணங்க மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் பல்வேறு நவீன வசதிகளுடன் இப் புதிய வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சுரங்கத்தில் பணிபுரியும் பணியாளர்கள், சுரங்க பகுதிக்கு சென்று வர பயன்படும் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த 47 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு பயன்பாட் டிற்கு வந்தது.
இந்நிகழ்ச்சியில் சுரங் கங்கள் மற்றும் நித இயக்குனர் (கூடுதல் பொறுப்பு) டாக்டர் சுரேஷ் சந்திரா சுமன், மனித வளத்துறை இயக்குனர் சமீர் ஸ்வரூப், மின் துறை இயக்குனர் வெங்கடாசலம், தலைமை அதிகாரி சந்திர சேகர் மற்றும் செயல் இயக்கு னர்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது.
- அளிக்கப்படும் மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும்.
கடலூர்:
கடலுார் மாவட்டத்தில், வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை கீழ்க்கண்ட வட்டங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம் நடத்தப்பட வுள்ளது. இதில்கடலுார், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி காட்டு மன்னார் கோவில், சிதம்பரம், திருமுட்டம் , புவனகிரி, விருத்தாச்சலம், திட்டக்குடி, வேப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வட்டாட் சியர் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவல கத்தில் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.
மேற்கண்ட முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை களில் பெயர் சேர்த்தல், முக வரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்த லுக்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம். மேற்படி மனுக்களின் மீது உடன் தீர்வு காணப்படும். மேற்குறிப்பிட்ட முகா மில் கைரேகையினை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதர வற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தி னால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நியாய விலைக்கடைகளுக்கு சென்று பொது விநியோத் திட்டத்தின் கீழ் வழங்கப் படும் அத்தியா வசியப் பொருட்களை பெறு வதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.
கணவரால் கைவிடப் பட்ட பெண்கள் அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக் களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர் சமுதாயத்தினை சேர்ந்தவர்கள் விடுபட்டு இருப்பின் அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம். பொது விநியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்க லாம். தனியார் சந்தைகளில் விற்கப்படும் பொருட்கள் மற்றும் சேவை குறைபாடு கள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன்படி நட வடிக்கை மேற்கொள் வதற்குரிய மனுக்களை முகாம்களில் அளித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்படி முகாம் நடைபெறும் இடங்களில் கொரோனா முன்னெச் செரிக்கை நட வடிக்கைகளான முகக்க வசம் அணிதல், சமூக இடை வெளியை கடைபிடித்தல் மற்றும் கிருமி நாசினி பயன் படுத்திடவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டி ருந்தது.
- அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர்.
- சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர்.
கடலூர்:
பண்ருட்டி அடுத்த தொரப்பாடி பேரூராட்சியில் நேற்று பிற்பகல் சாலையோரம் 2 வயது குழந்தை எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டு திரிந்தது. அந்த வழியாக வந்த இளைஞர்கள் புதுப்பேட்டை போலீசில் குழந்தையை ஒப்படைத்தனர். புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் துரிதமாக செயல்பட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தினார்.
சிறிது நேரத்தில் குழந்தையின் பெற்றோர் யார் என போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை காணாமல் போனது எப்படி? குழந்தையை யாராவது கடத்தி வந்தார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
- பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று வீசி வந்தது. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 7-ம் தேதியான இன்று திறக்க இருந்த அனைத்து பள்ளிகளும் வருகிற 12 மற்றும் 14 - ம்தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து கடும் சேதத்தை விளைவித்தது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதன்பின்னர் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்த காரணத்தினால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று நேற்றும் காலை முதல் மாலை நேரங்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மாலை முதல் குளிர்ந்த காற்று வீசதொடங்கி மலை பெய்தது. இந்த மழை கடலூர் மாவட்டத்தில் காட்டு மயிலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வேப்பூர், சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, கடலூர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது. இதனால் 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மழை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளையும் மும்முரமாக மேற்கொண்டு வந்ததும் காண முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-
காட்டுமயிலூர் - 10.0 மி.மீ, மே.மாத்தூர் - 10.0 மி.மீ, பரங்கிப்பேட்டை- 8.6 மி.மீ, பண்ருட்டி- 6.0 மி.மீ, வேப்பூர் - 6.0 மி.மீ, சேத்தியாதோப்பு - 5.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி -3.5 மி.மீ, வடகுத்து -3.0 மி.மீ, வானமாதேவி -3.0 மி.மீ, கடலூர் - 3.0 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் -1.9 மி.மீ, அண்ணாமலைநகர் -1.7 மி.மீ, என மொத்தம் - 61.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.






