வேப்பூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து; டிரைவர் பலி தாய்-மகன் உயிர் தப்பினார்கள்

முஹம்மது பாஷா விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .
வேப்பூர் அருகே ஆட்டோ  கவிழ்ந்து விபத்து; டிரைவர்  பலி தாய்-மகன் உயிர் தப்பினார்கள்
Published on

கடலூர்: 

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த காசிம் பாஷா மகன் முஹம்மது பாஷா( வயது 24) ஆட்டோ டிரைவர். இவர் தனது ஆட்டோவில் விருத்தாசலத்தில் இருந்து கண்டப்பக்குறிச்சிக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு, விருத்தாச்சலம் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். ஏ. சித்தூர் கிராமத்திலுள்ள மின்சார வாரிய அலுவலகம் அருகே சென்ற போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையின் இடது புறத்தில் கவிழ்த்து விபத்து ஏற்பட்டது .

இதில் ஆட்டோவில் பயணம் செய்த கண்டபங்குறிச்சி கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி அவரது மகன் பிரவீன் ஆகிய இருவரும் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்கள் ஆனால் ஆட்டோவை ஓட்டி சென்ற டிரைவர் முஹம்மது பாஷா உடல் , தலை,முகம் ஆகிய பகுதிகளில் பலத்த அடிபட்டவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே முஹம்மது பாஷா இறந்து விட்டதாக கூறினார்கள் . அதனை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் முஹம்மது பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருதா ச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com