என் மலர்
நீங்கள் தேடியது "Contract Labourer"
- செல்வதுரை ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.
- இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கடலூர்:
நெய்வேலிஎன்.எல்.சி. இந்தியா நிறுவனம் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இங்குள்ள முதலாவது சுரங்கத்தில் பவர் ஸ்டேஷனில் கல்லுக்குழி கிராமத்தை சேர்ந்த தண்டபாணி மகன் செல்வதுரை ( 37) ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். வழக்கம்போல் பணிக்குச் சென்ற செல்வதுரைஅங்கு பணியாற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அப்பகுதியில் மின் கசிவு ஏற்பட்டு தண்டபாணி மீது திடீரென்று தீ பரவியது. இதில் அவரது உடல் முழுவதும் தீ பரவியது. உடனடியாக அருகில் இருந்த சக தொழி லாளர்கள் செல்வதுரை யை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் என்.எல்.சி. பொது மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் செல்வதுரைக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்வதுரை இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இது குறித்து டவுன் ஷிப் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






