என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டளை சொத்து விற்கப்பட்டதாக தகவல் பரவியதால் திடீர் பரபரப்பு
    X

    கோவில் முன் திரண்டு இருந்த பக்தர்கள், பொதுமக்கள்.

    வீரட்டானேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான கட்டளை சொத்து விற்கப்பட்டதாக தகவல் பரவியதால் திடீர் பரபரப்பு

    • வெங்கடாசலம்செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும்.
    • ரூ.50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் .

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்திபெற்ற வீரட்டா னேஸ்வரர் கோவில். இந்த கோவில் எதிரில்திலகவதி யார் நந்தவனம், திருநா வுக்கரசர் நந்தவனம் உள்ளது. திலகவதியார் நந்த வனம் திருவாடுதுறை ஆதீனம்பராமரிப்பில் உள்ளது திலகவதியார் நந்தவனத்தைபராமரித்து வரும் திருவாடுதுறை ஆதீனம் திருவதிகை விரட்டா னேஸ்வரர் கோவிலுக்கு செய்ய வேண்டிய கட்ட ளைகளை முறையாக நிறை வேற்றி வருகின்றனர். திருநாவுக்கரசர் நந்தவனம் பரங்கிப்பேட்டை வெங்கடாசலம் செட்டியார் 1914-ம் ஆண்டு உயில் எழுதி வைத்தகட்டளை சொத்தாகும். பரங்கிப்பேட்டை வெங்க டாசலம் செட்டியா ருக்கு வாரிசு இல்லாததால் அவரது தம்பி சிவனேசன் செட்டியார் குடும்பத்தினர் அந்த சொத்தை அனுபவித்து உயிலில்உள்ளவாறு கட்டளைகளை செய்து வந்தனர். தற்போது உள்ள 5-வது தலைமுறையினர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கட்டளையை நிறைவேற்றாமல் சுமார் 50 கோடி மதிப்புள்ள இந்த கட்டளை சொத்தைவேறு நபருக்கு விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

    40 ஆண்டு காலமாக கட்டளை பணிகளை செய்யாமல் இந்த கட்டளை சொத்தை விற்பதற்கு தற்போதுள்ள வாரிசுதாரர்களுக்கு உரிமை இல்லை எனக்கூறி கோவில் நிர்வாகம் சார்பில் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இதற்கிடையில் இந்த சொத்தை நாங்கள்வாங்கிவிட்டோம் என்று கூறி ஒருகூட்டத்தினர் நந்தவனத்திற்குள் புகுந்து பொக்லைன் எந்திரம் மூலம் இங்குள்ள ரூ50 லட்சத்துக்கு அதிகம் பொருமான மரங்களைவெட்டி கடத்தி சென்றனர் . இதனை அறிந்த கோவில் நிர்வாகத்தினர், கிராம மக்கள்,சிவனடியார்கள், சிவதொண்டர்கள், இந்து மக்கள் கட்சியினர் அங்கு திரண்டனர்.இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபடுபோவதாக வதாக மிரட்டல் விடுத்தனர்.இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது கடலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இரண்டு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.அனுமதி இல்லாமல் பச்சை மரங்களை வெட்டி கடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் சொத்து கொள்ளை போவதை தடுக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கைவிடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் பொதுமக்கள், பக்தர்கள் கலைந்து சென்றனர் இதனால்பொதுமக்கள் நடத்த இருந்த சாலை மறியல் கைவிடப்பட்டது.

    Next Story
    ×