என் மலர்
கடலூர்
- Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
- ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.
இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
- முருகன் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது.
கடலூர்:
பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் தலைமையிலான போலீசார் அதிகாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது சிறுவத்தூர் 2-வது தெருவை சேர்ந்த முருகன் (வயது 47) அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் வழக்குபதிவு செய்து முருகனை கைது செய்தனர். பின்னர் முருகனை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
- அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர்.
- அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.
கடலூர்:
திட்டக்குடியில் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் அரசு மாணவியர் விடுதியில் 55 பேர், அரசு விடுதியில் 58 பேர் தங்கி படிக்கின்றனர். இந்த விடுதிகளில் மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் திருமாவளவன் திடீரென ஆய்வு செய்தார். அப்போது விடுதிகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா என பார்வையிட்டார்.
மேலும் இதில் டாக்டர் ஆனந்தி, மருந்தாளுனர் சரவணன் உள்ளிட்ட மருத்துவக் குழுவினர் மாணவிகளை உடற்பரி சோதனை செய்து மருந்து, மாத்திரை வழங்கினர். விடுதியை சுற்றியுள்ள புதர்களை சுத்தம் செய்யவும், கழிவறைகளை சுத்தமாக பராமரிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது விடுதி காப்பாளர் செல்வரா ணி, வார்டு கவுன்சிலர் சுரேந்தர் உடனிருந்தனர்.
- குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது .
- அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் நடுக்கு ப்பம் கிராமத்தில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் ஆடி செடல் உற்சவம திருவிழாவை முன்னிட்டு கடந்த 13-ந் தேதி மாலை 6மணிக்கு குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி கொடியேற்றுவிழா நடைபெற்றது . நேற்று ( வியாழக்கிழமை) அம்மனு க்கு சாகை வார்த்தல் மற்றும் அன்ன தா னம், இரவு தெருக்கூத்து நடைபெற்றது.
இன்று (வெள்ளிகிழமை ) காலை 9 மணி அளவில் நடுக்குப்பம் குளக்கரையில் இருந்து பால் குடம் எடுத்துச் சென்று அம்ம னுக்கு அபிஷேகம் செய்து மாலை 4 மணிக்கு ஊஞ்சல் செடல் உற்சவம் நடைபெற உள்ளது. நாளை ( சனிக்கிழமை) இரவு 8 மணி யளவில் முத்தாலம்மனுக்கு தலை குளம் பம்பை சிவகுமார் தலைமையில் தாலாட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
- ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.
- பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர்.
கடலூர்:
தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் என பெரும்பாலான காய்கறி விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றனர். இதில் இஞ்சி கிலோ 250 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 150 ரூபாய் வரையிலும், தக்காளி 100 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் இந்த விலை உயர்வானது தற்போது வரை குறையாமல் தொடர்ந்து நீடித்து வருவதால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிப்படைந்து வருவதோடு காய்கறியை வாங்குவதை குறைத்து வருகின்றனர். ரேஷன் கடைகளில் தற்போது ஒரு கிலோ தக்காளி ரூ. 60 ரூபாய்க்கு தமிழக அரசின் உத்தரவு பேரில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் முதுநகர் சாலைக்கரை பகுதியில் உள்ள ஒரு காய்கறி கடையில், கடை வைத்துள்ள வியாபாரி ஒருவர் தக்காளி விலை தொடர்ந்து குறையாத காரணத்தினால் இன்று ஒரு கிலோ தக்காளியை 30 ரூபாய்க்கு விற்பனை செய்தார். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் அந்த கடைக்கு வந்து போட்டி போட்டுக் கொண்டு தக்காளியை வாங்கி சென்றனர். ஆனால் ஒருவருக்கு ஒரு கிலோ மட்டுமே வழங்கப்பட்டது. தக்காளி அனைத்தும் சுமார் 1 மணி நேரத்தில் விற்று தீர்ந்தது. இதே வியாபாரி கடந்த சில வாரங்களுக்கு முன்பு 20 ரூபாய்க்கு தக்காளியை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
- தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
- மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.
பண்ருட்டி திருவதிகையில் பிரசித்திபெற்ற வீரட்டானேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர தேர்த்திருவிழா 10 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் வீரட்டானேஸ்வரருக்கும், பெரியநாயகி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கும், பெரியநாயகி அம்பாளுக்கும் விசேஷ அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து காலை 8.15 மணியளவில் உற்சவர் பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். இதையடுத்து அங்கு கூடியிருந்த பெண் பக்தர்கள் மட்டும் ஓம் சக்தி ஓம் சக்தி என பக்தி கோஷம் எழுப்பியபடி வடம் பிடித்து தேரை மாட வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர். தேரானது காலை 9.30 மணியளவில் நிலையை வந்தடைந்தது.
இந்த விழாவில் பண்ருட்டி நகரமன்ற தலைவர் ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத் துறை செயல் அலுவலர்கள் மகாதேவி, வேல்விழி, வியாபார சங்க பிரமுகர்கள் மோகன், வீரப்பன், ராஜேந்திரன், சபாபதி செட்டியார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்திருந்தனர்.
- பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
- மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் அருகே கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல். இவரது மனைவி பழனியம்மாள்.
பழனியம்மாள் 5 வருடங்களுக்கு முன்னர் காணாமல் போய்விட்டதாகவும் கூறப்படுகிறது. அவரை பல இடங்களில் தேடி கிடைக்காத நிலையில் விருத்தாசலம் போலீஸ் நிலையத்தில் பழனிவேல் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் 5 ஆண்டுகள் ஆகியும் அவரது மனைவியை கண்டுபிடித்து தரவில்லை என சோகத்தில் ஆழ்ந்த பழனிவேல் விருத்தாசலம் போலீஸ் நிலையம் முன்பு மைக் மற்றும் ஸ்பீக்கருடன் அமர்ந்து பாட்டு பாடி போலீசாரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பாடல் பாடினார்.
இதுபற்றி பழனிவேலிடம் கேட்டபோது, தான் ஒரு மைக் ஒரு ஸ்பீக்கர் வைத்துக்கொண்டு பாட்டு பாடும் தொழில் செய்வதாகவும், மாதம் ரூ.40ஆயிரம் சம்பாதிப்பதாகவும் தனது மனைவி 5 ஆண்டுகளாக காணவில்லை எனவும், மனைவியை கண்டுபிடித்து கொடுக்குமாறு விருத்தாச்சலம் போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வந்தபோது அங்கிருந்த போலீசார் ஒருவர் அதிகாரிகள் யாரும் இல்லை பிறகு வாருங்கள் என கூறி என்னை அனுப்பிவிட்டனர். இதனால் போலீஸ் நிலையம் முன்பு தனது மனைவியை நினைத்து உருகி பாடுவதாகவும் கூறினார்.
இளங்காற்று வீசுதே, என் ஜீவன் பாடுது, ராசாத்தி உன்ன காணாத நெஞ்சு உள்ளிட்ட சோக பாடல்களை போலீஸ் நிலையம் முன்பு அவர் பாடியதைக் கண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள் வியப்புடன் பார்த்து சென்றனர்.
- கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
- வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்து பெருமுனை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி மகன் பார்த்திபன் (வயது 28). இவருக்கும் கோழியூர் கிராமத்தை சேர்ந்த வினோதினி (23) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு தற்போது பார்த்திபன் மற்றும் இவரது மனைவி வினோதினி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று வினோதினியின் கணவர் வீட்டில் இருக்கும் வினோதினிக்கு சொந்தமான திருமண சீர்வரிசை பொருட்களை எடுப்பதற்கு வினோதினியின் சகோதரர்கள் விக்னேஷ், விஜய் மற்றும் இவர்களுடைய நண்பர்களுடன் பெருமுளையில் உள்ள பார்த்திபன் வீட்டிற்கு சென்றனர். அப்போது பார்த்திபனுக்கும், வினோதினியின் சகோதரர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் இந்த வாய்த்தகராறு கைகலப்பாக மாறியது. இதனால் வினோதினி சகோதரர்கள் பார்த்திபனை ஓட ஓட விரட்டி பீர் பாட்டிலால் தலையில் தாக்கினர்.
இதனை தடுக்க வந்த பார்த்திபனின் மைத்துனர் வடிவேலையும் அவர்கள் கல் மற்றும் கட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த பார்த்திபனை அருகில் இருந்தவர்கள் மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பார்த்திபனை சேர்த்தனர். இது குறித்து புகாரின் பேரில் திட்டக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
- சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும்.
கடலூர்:
ஒவ்வொரு ஆண்டும் சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதினை பெறுவோருக்கு ரூ.5 லட்சம் தொகையும், ஒரு சவரன் தங்க பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் 'சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பதாரர்கள் சமூக நீதிக்காக பாடுபட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், பெரியார் கொள்கையில் உள்ள ஈடுபாடு, சமூக சீர்திருத்த கொள்கை, கலை, இலக்கியம், சமூக பணிகள் ஆகியவற்றிலுள்ள அர்ப்பணிப்பு ஆகிய தகுதிகள் இருத்தல் வேண்டும். விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், சுயவிவரம்,முழு முகவரி மற்றும் மேற்குறிப்பிட்ட தகுதிகள் உடையவராயின் அதற்குரிய ஆவணங்கள், புகைப்படங்கள், நிகழ்வுகள் குறித்த நாள், இடம் ஆகிய விவரங்களை தவறாது குறிப்பிட்டு செப்டம்பர் 15-ந்தேதிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்பட்டோர் நல அலுவலகம் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கடலூர் என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
- விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் 21 -ந்தேதி கலெக்டர் தலைமையில் நடைபெறும்.
- விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
ஜூலை 2023 -ம் மாத விவசாயிகள் குறைகேட்பு மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் வருகிற 21 -ந்தேதி (வெள்ளிக் கிழமை) கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் தலைமையில் காலை 10.30 மணியளவில் நடைபெறும்.கடலூர் மாவட்ட விவசாயிகள் தங்களது வேளாண்மை சார்ந்த குறைகள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான ஆலோசனைகளை கோரிக்கைகளாக வைக்க வாய்ப்பு வழங்கப்படும். கூட்ட அரங்கில் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க விருப்பம் உள்ள விவசாயிகள் தங்கள் சிட்டா, அடங்கல் கிசான் கடன் அட்டையுடன் காலை 8மணிமுதல் 10 மணிக்குள் தங்களது பெயர், கோரிக்கை விவரம் மற்றும் கோரிக்கை வைக்கவுள்ள துறையின் பெயர் ஆகியவற்றை பதிவு செய்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாகவும் வழங்கலாம். இக்குறைகளுக்கு சம்மந்தப்பட்ட துறையின் உயர் அலுவலர்கள் உரியபதில் அளிக்கவும் மேலும் தொடர் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பினை கடலூர் மாவட்ட விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
- உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
கடலூர் மாவட்டத்தில் இறால் வளர்ப்போரை ஊக்குவித்திடும் விதமாக தமிழக அரசால் உவர்நீர் இறால் உற்பத்தியினை அதிகப்படுத்திட பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உவர்நீர் இறால் வளர்ப்பிற்காக புதிய குளங்கள் கட்டுதல் (2021-2022) மற்றும் அக்குளங்களுக்கு உள்ளீடுகள் வழங்குதல் திட்டத்தில் 6 ஹெக்டர் (பொது) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில் 1 ஹெக்டர் புதிய குளங்கள் அமைப்பதற்கு ரூ.8 இலட்சம் மற்றும் உள்ளீடு வழங்க ரூ.6 இலட்சம் ஆக மொத்த செலவினம் மேற்கொண்ட தொகையில் 40 சதவீதம் மானியம் ரூ. 5.60 இலட்சம் வழங்கப்பட உள்ளது.
எனவே, இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்பும் பயனாளிகள் பரங்கிப்பேட்டை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், ரேவு மெயின் ரோடு, கடல் உயிரியல் அண்ணாமலை பல்கலைக்கழகம் எதிரில், பரங்கிப்பேட்டை புவனகிரி (வட்டம்) கடலூர் (மாவட்டம்) அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று உரிய ஆவணங்களுடன் ஆகஸ்ட் 10-ந்தேதி க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
- போக்குவரத்து விதிமுறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது.
- டிரைவர் கண்டு கொள்ளாமல் வேகமாக பஸ்சை ஓட்டி சென்றார்.
கடலூர்:
கடலூர் - விழுப்புரம் சாலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 தனியார் பஸ் வேக மாக செல்லும்போது நேருக்குநேர் மோதி கொண்டதில் 6 பேர் இறந்தனர். இதன் பின் னர் தனியார் பஸ், கண்டக்டர் ஆகியோர்களுக்குகாவல்துறை,வட்டார போக்குவரத்து துறை சார்பில் போக்குவரத்து விதி முறைகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டது. இதில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி செல்லக் கூடாது. மித மான வேகத்தில் செல்ல வேண்டும் என அறிவுரை வழங்கினர்.
இந்நிலையில் பண்ருட்டி யிலிருந்து புறப்பட்டு மேல்மலையனூருக்குபுதுப் பேட்டை, ஓறையூர் வழியாக சென்ற தனியார் பஸ் ஒன்றில் போக்குவரத்து விதிமுறை களை மீறி பள்ளி மாணவர்கள் விபத்து ஏற்படும் வகையில் பஸ் படிக்கெட்டில் தொங்கிய படியும், சிலர் பின்னாடி தொங்கியபடியும் பயணம் செய்தனர். இதை பார்த்த பொதுமக்கள் சிலர் எச்சரிக்கை செய்தும் டிரைவர் கண்டு கொள்ளாமல் வேக மாக பஸ்சை ஓட்டி சென்றார். இதனைத் தொடர்ந்து புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் புதுப்பேட்டையில் அந்த வழியாக செல்லும் பஸ்களில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அறிவுரை கூறிய அனுப்பி வைத்தனர்.






