என் மலர்
உள்ளூர் செய்திகள்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு1008 விளக்கு பூஜை நடந்தது.
திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் 1008 திருவிளக்கு பூஜை
- ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
- துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன் சன்னதியில் உலக நன்மைக்காக துர்கா மகளிர் மன்றம்சார்பில் 1008 திரு விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
இதனை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி பயபக்தியுடன் வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தீன்ஷா, தக்கார் ஸ்ரீதேவி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், துர்கா மகளிர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடு களை செய்தனர்.






