கடலூரில் சாலை ஓரத்தில் மயங்கி கிடந்த அடையாளம் தெரியாத நபர் சாவு

108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூரில் சாலை ஓரத்தில் மயங்கி  கிடந்த  அடையாளம் தெரியாத நபர் சாவு
Published on

கடலூர்: 

கடலூர் செம்மண்டலம் அருகே சாலை ஓரமாக 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 17-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்து போன நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com