search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேப்பூரில் தெருக்களை ஆக்கிரமித்து கட்டிய  வீடுகளின்  ஆக்கிரமிப்புகள்  அகற்றம்
    X

    வேப்பூரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

    வேப்பூரில் தெருக்களை ஆக்கிரமித்து கட்டிய வீடுகளின் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

    • Removal of encroachments on houses built encroaching on streets in Veypur
    • ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சியில் கிராம தெரு என்பது கடந்த காலங்களில் மிகவும் அகலமானதாக இருந்துள்ளது. நாளைடைவில் வீடு கட்டியவர்கள் தங்களது வீடுகளை தங்களது பட்டா இடத்தை தாண்டி தெருக்களை ஆக்கிரமித்து பலர் வீடு கட்டியிருந்தனர்.

    இதனால் மழைக்காலங்களில் மழைநீர் தெருவில் தேங்கி நின்றது. அப்படி தேங்கி நிற்கும் தண்ணீர் வெளியேறவும் வழியில்லை . இக்குறைகளை போக்க ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி திருஞானம், துணை தலைவர் மஞ்சுளா செல்வராஜ், ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மூலம் தீர்மானம் நிறைவேற்றி வேப்பூர் கிராம தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அதில் வடிகால் வாய்க்கால் கட்ட தீர்மானம் நிறைவேற்றினார்கள். அதன் படி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு ஊராட்சி சார்பில் நோட்டீஸ் கொடுத்தும் அவர்கள் அகற்றாததால் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற பட்டன.இதனால் வேப்பூரில் சிறிது நேரம் பரபரப்பு எற்பட்டது.

    Next Story
    ×