என் மலர்
கடலூர்
- ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
- போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.
கடலூர் :
10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.
இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.
இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.
இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.
இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.
ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.
இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.
தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.
- இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர்.
- 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை எடப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 19 வயது இளம் பெண். இவர் கடந்த 21 -ந் தேதி வீட்டில் இருந்த வர் திடீரென காணாமல் போனார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் இது பற்றி பண்ருட்டி போலீ சில் இவரது பெற்றோர்கள் புகார் கொடுத்தனர். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காணாமல் போன இளம்பெண்ணை தேடி வந்தனர். அந்த இளம் பெண் பனங்காட்டுத் தெருவை சேர்ந்த வாலிபர் விஜயபாஸ்கர் (25)காதல் வலையில் சிக்கிஅவரது ஆசை வார்த்தைகளால் மயங்கி 21-ந் தேதி இரவு 8 மணிக்கு வீட்டில் இருந்த வர் விஜய் பாஸ்கருடன் விழுப்புரம் சென்று திரு மணம் செய்து கொண்டு நேற்று பண்ருட்டி போலீஸ் நிலையம் வந்து ஆஜரானார்கள். அவர்களை பண்ருட்டி இன்ஸ்பெக்டர் க ண்ணன், பண்ருட்டி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் விசாரித்தனர். அவர்களிடம் பெண்ணின் உறவினர் மற்றும் பெற்றோர்களுடன் பேசிப் பார்த்தனர்.
நான் திருமணம் செய்து கொண்டேன். விஜய பாஸ்கருடன் தான் செல்வேன் என்று எழுதிக் கொடுத்து விட்டு சென்றார்கள். உறவினர் மற்றும் பெற்றோர்கள் பெண்ணை வாலிபருடன் செல்ல விடா மல்விடாமல் தடுத்த போது போலீசார் விலக்கி விட்டு 2பேர்களை யும் அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் வேண்டும் என்று என் மகளை அனுப்பி வைத்து விட்டார்கள். நாங்கள் இன்னும் ஒரு மணி நேரம் எங்கள் மகளுடன் பேசி இருந்தால் எங்கள் மகள் எங்களுடன் வந்திருப்பார் என்று என்று கூறி பண்ருட்டி4 முனை சந்திப்பில் பெண்ணின் பெற்றோர்கள் தலைமை யில் 75 பேர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர்.தகவல் அறிந்ததும் பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா பேச்சு வார்த்தை நடத்தினார்.நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பின் சாலை மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
- வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.
- புருஷோத்தமன் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் புரு ஷோத்தமன் (வயது 33). இவர் மோட்டார் சைக்கி ளில் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியி லிருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு லாரி புருஷோத்தமன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இவர் ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே புருஷோத்தமன் பரிதாப மாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.
- மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
கடலூர்:
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்க வீடு தேடி கொடுக்கப்படும் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து முகாம் நடக்கும் நாளில் கொண்டு சென்று விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், மின் கட்டண அட்டை ஆகியவற்றின் அசல் எடுத்துச் செல்ல வேண்டும்.
கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை எதுவும் இல்லாமல் ஜீரோ பேலன்ஸ் என்ற அடிப்படையில் சேமிப்பு கணக்கு உடனுக்குடன் தொட ங்கப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 32 கிளைகளில் இந்த சேமிப்பு கணக்குகள் தொடங்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சேமிப்பு கணக்கு தொடங்குவதற்கு 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், ஆதார் அட்டை, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் நகல் மற்றும் அசல் ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். கட்டணமும் குறைந்தபட்ச இருப்புத் தொகையோ செலுத்தாமல் சேமிப்பு கணக்கு தொடங்கலாம் பொது மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என கடலூர் மாவட்டம மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
கடலூர்:
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 3 மாதங்களாக நடைபெற்று வரும் இனக் கலவரத்தில், 2 பழங்குடியின சமுதாயப் பெண்களை நிர்வாண மாக்கி, கற்பழித்ததை கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்தும், மணிப்பூர் மாநில அரசை உடனடியாக கலைத்திட வேண்டுமென வலியுறுத்தியும், மங்கலம்பேட்டை நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்துக் கட்சிகள் சார்பில், மங்கலம்பேட்டை தேரடி வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கடசி நகர செயலாளர் அம்பேத் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில், இந்திய குடியரசு கட்சியின் மாநில முன்னாள் இணைப் பொதுச்செயலாளர் மங்காபிள்ளை,விடுதலை சிறுத்தைகள் சமூக ஊடக மாநில துணைச் செயலாளர் ராஜ்குமார், தி.மு.க.நகர அவைத் தலைவர் முஹம்மது யூசுப், மாவட்ட தி.மு.க.பிரதிநிதி குழந்தை சுதந்திரன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், தமிழக வாழ்வுரிமை கட்சி ஒன்றிய செயலாளர் வெங்கடாச்சலம், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் இக்பால், விடுதலை சிறுத்தைகள் கட்சி ந கர துணைச் செயலாளர் தனக்குமார், ம.தி.மு.க.பிரமுகர் விக்னேஷ், விடுதலை சிறுத்தைகள் பிரமுகர் அறிவழகன், மக்கள் அதிகாரம் அமைப்பு பிரமுகர் மணிவாசகன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் மணிகண்டன், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிவக்குமார், வக்கீல் கிருஷ்ண மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டு, மத்திய மற்றும் மணிப்பூர் மாநில அரசுகளைக் கண்டித்து, கண்டனக் கோஷங்களை எழுப்பினர்.
- நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார்.
- கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடலூர்:
கடலூர் மாநகரா ட்சிக்குட்பட்ட திருப்பாதி ரிப்புலியூர் சரவணா நகர், கடலூர் முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைக்க ரூ 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மண்டல அலுவலகம் கட்டுவதற்கு இடத்தை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகரமைப்பு அலுவலர் முரளி தலைமை தாங்கினார். பகுதி செயலாளர் சலீம், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், இளையராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சாய்துனிஷா சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகராட்சி மேயர் சுந்தரி, துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் திருப்பா திரிப்புலியூர் சரவணா நகர், முதுநகர் சோனகர் தெரு ஆகிய இடங்களில் மண்டல குழு அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை பார்வையிட்டு தேர்வு செய்தனர். இதில் தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, மாநகராட்சி கவுன்சிலர் சரஸ்வதி வேலுச்சாமி, மாநகராட்சி பொறியாளர் மாலதி, தி.மு.க. மாணவர் அணி துணை அமைப்பாளர் பாலாஜி, பகுதி துணை செயலாளர்கள் கார் வெங்கடேசன், லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலூர்:
கடலூர் செம்மண்டலம் அருகே சாலை ஓரமாக 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு கடந்த 17-ந் தேதி சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இறந்து போன நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.
- மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
- முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப் பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களான காந்தி, ஜவகர்லால் நேரு, அம்பேத்கர், தந்தை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்தநாளன்று மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கவேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பெற்றுள்ளது.
கடலூர் மாவட்டத்தி லுள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடை பெற உள்ளன. அப்போட்டி களில் கலந்துகொண்டு வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முறையே முதல் பரிசு ரூ.5000, 2-ம் பரிசு ரூ.3000, 3-ம் பரிசு ரூ.2000 என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன. மேலும், பள்ளி மாண வர்களுக்கென நடத்தப் பெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொண்ட மாணவர் களுள் அரசுப் பள்ளி மாண வர்கள் 2 பேரைத் தனியாகத் தேர்வு செய்து ஒவ்வொரு வருக்கும் சிறப்புப் பரிசுத் தொகை ரூ.2000 வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவர்தம் பள்ளி மாணவர்களிடையே முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப்போட்டிகள் நடத்தி மாணவர்களைத் தேர்வு செய்து மாவட்ட அளவி லான போட்டியில் பங்கேற்க முதன்மைக் கல்வி அலுவலர் வழியாகவும், கல்லூரிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களின் பெயர்ப்பட்டியல் கல்லூரிகளின் முதல்வர்கள் வழியாகவும் பின்வரும் முகவரியில் நேரில், அஞ்சலில் அல்லது tdadcuddalore@gmail.com என்ற மின்னஞ்சலில் 24-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
பள்ளி களுக்கான பேச்சுப் போட்டி தலைப்பு கள் கலைத் தாயின் தவப்புதல்வன், முத்தமிழறி ஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி. கல்லூரி களுக்கான பேச்சு ப்போட்டி தலைப்பு கள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோ வியம், கலைஞரின் எழுது கோல், அரசியல் வித் தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர்.பள்ளிப் போட்டி காலை 9.30 மணிக்கும் கல்லூரிப் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கும் தொடங்கும். இப்போ ட்டிகளில் கட லூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி , கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவி கள் கலந்து கொண்டு பயன்பெ றலாம். இவ்வாறு அதில் கூறி யுள்ளார்.
- ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
- துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையில் அமைந்துள்ளது வீரட்டானேஸ்வரர் கோவில். இது மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஆண்டுதோறும் ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன் சன்னதியில் உலக நன்மைக்காக துர்கா மகளிர் மன்றம்சார்பில் 1008 திரு விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம். அதேபோல ஆடி முதல் வெள்ளிக்கிழமை 1008 திருவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது.
இதனை முன்னிட்டு துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை, சந்தன காப்பு அலங்காரம் ஆகியவை நடந்தது. தொடர்ந்து வேத மந்திரம் முழங்க விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும், நேர்த்தி கடனுக்காகவும் விளக்கேற்றி பயபக்தியுடன் வழிபாடு செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு அருள் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் செயல் அலுவலர் தீன்ஷா, தக்கார் ஸ்ரீதேவி மற்றும் கோவில் நிர்வாகத்தினர், துர்கா மகளிர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு இதற்கான ஏற்பாடு களை செய்தனர்.
- ”வாங்குவேர் விற்பனையாளர்” ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும்.
- தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியி ட்டு உள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
சுய உதவிக்குழுக்களில் உற்பத்தி பொருட்களின் விற்பனையை மேம்படுத்து வதற்கும், சந்தைபடு த்திடவும், "வாங்குவேர் விற்பனையாளர்" ஒருங்கி ணைப்பு கூட்டம் நடத்திட வேண்டும். வாங்குவோர் மற்றும் விற்பனையாளர் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்து கொள்பவர்கள், சுய உதவிக்குழுவின் தனிப்பட்ட உற்பத்தியாளராகவும் இருக்கலாம் மற்றும் தனிநபர் தொழில் முனைவோர்க ளாகவும், அன்றாடம் பொருள் உற்பத்தியாளர் களாகவும், சுய உதவிக்குழு உறுப்பினராகவும் இருக்க வேண்டும்.
விற்பனையாளர்கள் தங்கள் பெயர், உற்பத்தி பொருட்களின் விபரம் மற்றும் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி பொருட்களை வாங்குபவர்களும் (வர்த்த கர்கள்) மாவட்டத்திலுள்ள மேலாண்மை அலகு, மகளிர் திட்ட அலுவலகத்தில் வருகிற 24.07.2023-க்குள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை.
- பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்.
கடலூர்:
கடலூரில் அரசு தலைமை மருத்துவமனை உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் நேரில் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர் மேலும் கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்ட ஏராளமான மக்கள் அறுவை சிகிச்சை மற்றும் நீண்ட நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.கடந்த சில நாட்களுக்கு முன்பு கடலூர் அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் ஒரு பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த பெண்ணுடன் அவரது தாயார் இருந்து வருகிறார். நேற்று நள்ளிரவு அந்தப் பெண் தனது குழந்தையை பார்த்தபோது காணவில்லை. மேலும் அவருடன் தங்கி இருந்த அவரது தாயாரையும் 2 வயது குழந்தையையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் குழந்தையை காணவில்லை என்று கூச்சலிட்டார்.அப்போது அந்தப் பகுதியில் ஒரு பெண் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்துள்ளார். இதை பார்த்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அந்த பெண்தான் குழந்தையை கடத்தி இருப்பார் என்று எண்ணி கொண்டு விசாரித்தனர்.ஆனால் அவர் தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். மேலும் அந்தப் பெண்ணை சிலர் தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அந்த நேரத்தில் அந்த பெண்ணின் தாயார் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் அந்த குழந்தைகளை அழைத்து சென்றது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை பொதுமக்களிடமிருந்து இருந்து விடுவித்து அனுப்பி வைத்தனர். இதனால் கடலூர் அரசு மருத்துவமனையில் நேற்று நள்ளிரவு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, அனைத்து துறைகளிலும் ஊழல் தலையீட்டை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து கடலூரில் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் சொரத்தூர் ராஜேந்திரன், எம்.எல்.ஏ.க்கள் அருண்மொழி தேவன், பாண்டியன், அமைப்பு செயலாளர் முருகுமாறன் உள்பட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பினார்கள். இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் உட்பட 1500 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.






