மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது. குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கு
மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Published on

கடலூர்:

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப் பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய பொரு ளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் குரு, நீதி வள்ளல், தன்ராஜ், ஜோதி பாசு, கண்ணன், வெங்கட், ராஜி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலி யல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்ற செயலை தடுக்க இயலாத மணிப்பூர் அரசை உட னடியாக டிஸ்மிஸ் செய்து, முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com