என் மலர்tooltip icon

    கடலூர்

    • ராமு நேற்று காலை மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.
    • கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே தி.மு.க.பிரமுகர் தந்தை கொலை யில் பஞ்சாயத்து தலைவியின் கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலை யைசேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன்மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர். புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதிநிதியாக இருந்து வருகிறார் .வழக்கம்போல நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு நேற்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    இது பற்றி பண்ருட்டிபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன்,காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை க்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் எல்.என்.புரம் பஞ்சாயத்து தலைவியின் கணவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். நேற்று இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

    ராமு வீடு குட்டை புறம் போக்கு நிலத்தில் உள்ளது. எனவே ராமுவிற்கும் பஞ்சாயத்து தலைவரின் கணவருக்கும் இது தொடர்பாக முன் விரோதம் இருந்து அதன் காரணமாக ராமு கொலை செய்யப்பட்டாரா என்ற கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். கொலை நடைபெற்ற பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்து அதில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்த முடிவு செய்தனர். ஆனால் அப் பகுதியில் உள்ள பெரும்பாலான கண்காணிப்பு கேமிராக்கள் செயல்படாமல் உள்ளது தெரிய வந்தது. இதனால் போலீசார் கொலையாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். 

    • முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார்.
    • கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி கும்பகோணம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பூங்குணம் கிராமம் உள்ளது. இங்கு சோடா கம்பெனி நடத்தி வருபவர் முத்துகுமாரசாமி (வயது 40). கடந்த சில தினங்களுக்கு முன்பாக இவரது தாயார் இறந்துவிட்டார். இதனால் தினமும் இரவு குடும்பத்துடன் அங்கு சென்று தங்கிவிட்டு, காலையில் எழுந்து வீட்டிற்கு வந்து விடுவார்கள். 

    அதன்படி, இன்று காலை வீட்டிற்கு வந்த முத்துகுமாரசாமி, வீட்டின் கதவை திறந்து குடும்பத்துடன் உள்ளே சென்றார். அப்போது வீட்டின் பின்பக்க கதவை உடைக்கப்பட்டு திறந்திருந்தது. வீட்டிலிருந்த பீரோவை பார்த்தபோது அதுவும் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 3 பவுன் நகை மற்றும் ரூ.40 ஆயிரம் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாருக்கு முத்துகுமாரசாமி தகவல் கொடுத்தார். பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். 

    அப்போது முத்துகுமா ரசாமியின் எதிர்வீட்டின் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் ராமலிங்கம், ஓய்வு பெற்ற மின் வாரிய ஊழியர். இவருக்கு உடல் நிலை சரியில்லாததால் புதுவையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போலீசார், சம்பவத்தை கூறி உடனடியாக பூங்குணம் வருமாறு கூறினார்கள். அவர்கள் வந்த பிறகே அந்த வீட்டில் எந்தெந்த பொருட்கள் திருடு போயுள்ளது என்பது தெரியவரும். இதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் சிறிது தூரம் ஓடியது யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் கொள்ளை நடந்த வீட்டில் தடயங்களை சேகரித்து வருகின்றனர். ஒரே நாளில் எதிரெதிர் வீட்டில் திருட்டு சம்பவம் நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    பண்ருட்டி காந்திரோட்டில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியர் அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் பூவாராகமூர்த்தி, பள்ளிக்கு விரைந்து வந்தார். அறையில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், மின் விசிறி மற்றும் கல்வி உபகரணங்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக பண்ருட்டி போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார். பண்ருட்டி நகரில் எப்போதும் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் உள்ள காந்தி ரோட்டில் இருந்த அரசுப் பள்ளியில் கொள்ளை நடந்த சம்பவம் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை.
    • சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    கடலூர்:

    குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாள் அன்று நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு வீடு வீடாக கொடுக்கும் பணி கடந்த 20-ந்தேதி முதல் நடைபெற்று வந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாம்கள் இன்று முதல் செயல்பட தொடங்கியுள்ளன.

    இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பதிவு செய்யும் முகாம்களில் சர்வர் முடங்கியதால் கடலூர் மாவட்டம் முழுவதும் விண்ணப்பம் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டது. கைரேகை வைத்து பதிவு செய்யும் முறை முற்றிலும் இயங்கவில்லை. சாதாரணமாக பதிவு செய்வதால் ஒவ்வொரு நபருக்கும் அரை மணி நேரம் வரை ஆனது.

    இதனால் பெண்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    • ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்று வரு கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு அறிவித்த ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பெறும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பெறப் பட்டு பதிவு செய்யப்படு கிறதா? என்பதை பார்வை யிட்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் அரசு நிபந்தனைக் குட்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து இத்திட்டம் மூலம் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் யாரும் விடுபடாமல் சரியான முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, பார்வதி, சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
    • மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, நேற்று முதல் வருகிற 29- ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதோடு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகையால் நேற்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவ துறை அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையிலும், இடையில் 100 டிகிரி சுட்டெரிக்கும் வெயி லும் பதிவானது. இதன் காரணமாக சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட கார ணத்தினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் ஏராளமான பொது மக்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத் தில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம் ,சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீ முஷ்ணம், காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, சேத்தியாதோப்பு, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. தற்போது கடலூர் மாவட் டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவி மில்லி மீட்டரில் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 22.4, பெல்லாந்துறை - 22.2, வேப்பூர் - 22.0, லால்பேட்டை - 22.0,லக்கூர் - 13.4, ஸ்ரீமுஷ்ணம் - 11.3, கீழ்செருவாய் - 11.0, பரங்கிப்பேட்டை - 10.2, தொழுதூர் - 8.0, கலெக்டர் அலுவலகம்-6.2, சேத்தியா தோப்பு - 6.2, புவனகிரி - 6.0, குறிஞ்சிப்பாடி - 4.0, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 3.75, பண்ருட்டி - 3.0, சிதம்பரம்-2.2, அண்ணா மலைநகர் - 2.2, விருத்தா சலம் - 2.0,கடலூர் - 2.0, வானமாதேவி-1.2, கொத்தவாச்சேரி - 1.0 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 182.25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதியடைந்தனர்.
    • ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் காவல் துறை சார்பில் நடைபாதை ஆக்கிர மிப்புகளை அகற்றும் பணி நடைபெற்றது. சிதம்பரம் நகரில் 4 வீதிகள் மற்றும் சன்னதிகளில் நடை பாதைகள் வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள தால் பொதுமக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் அவதி யடைந்தனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு, அடிக்கடி விபத்தும் ஏற்படுகிறது.

    இந்நிலையில் சிதம்பரம் கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன், சட்டம்-ஒழுங்கு சப்-இன்ஸ்பெக்டர் பரணிதரன் மற்றும் போலீசார் மேலரத வீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி னர். ஜவுளிக்கடை ஒன்றின் முன்பு வைக்கப் பட்டிருந்த மெகா ஜென ரேட்டரை அப்புறப்படுத்தி னர். அதே போன்று நடராஜர் கோயில் பிரதான வாயிலான கீழசன்னதியில் சாலையில் உள்ள ஆக்கிர மிப்புகளையும் அகற்றினர். மேலும் நடைபாதையை ஆக்கிரமித்தால், அபராதம் விதிக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    • கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார்.
    • எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கோபிநாத் (வயது) 27 என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் அவர் முத்தாண்டிக் குப்பத்தில் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேராசிரியர் கோபிநாத்தை எச்சரிக்கை செய்து அறிவுரை வழங்கி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாரை அழைத்து பேராசிரியர் கோபிநாத்தை பாதுகாப்பாக தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது.
    • உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது.

    கடலூர்:

    குறிஞ்சிப்பாடி நகரில்5-க்கும் மேற்பட்ட இடங்களில் பழமையான மயானங்கள் உள்ளன.அவற்றில் அந்தந்த பகுதி மக்கள் இறந்தவர்களின் உடல்களை புதைத்தும் எரித்தும் வருகின்றனர். மக்கள் தொகை பெருக்கத் தால் இவற்றில் இடப்பற் றாக்குறை ஏற்பட்டு வருகிறது. அதனை அடுத்து குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சார்பில் மின் மயானம்அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகளும் தொடங்கி நடந்து வருகின்றன.

    அதில் பேரூராட்சிக்கு பின்புறத்தில் உள்ள மயா னத்தை தேர்வு செய்தனர்.அதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரி வித்து வருகின்றனர். தொடக் கத்தில் விளைநிலங்களுக்கு நடுவே இந்த மயானம் இருந்தது. தற்பொழுது அப்பகுதி முழுவதும் வீடு களாக மாறிவிட்டன. உடல்களை எரிக்கும் பொழுது சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. எனவே பொதுமக்களை பாதிக்காத வகையில் வேறு இடத்தில்உள்ள மயா னங்களை தேர்வு செய்து அங்கு மின் மயானத்தை அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ள னர். இது குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் மனு அளித்துள்ளனர்.

    • அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது.
    • குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கு

    கடலூர்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மணிப் பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட அவலத்தை கண்டித்து கண்டன ஆர்ப் பாட்டம் கம்மாபுரத்தில் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு ஒன்றிய பொரு ளாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன், மாவட்ட செயலாளர் பால.அறவாழி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். இதில் நிர்வாகிகள் குரு, நீதி வள்ளல், தன்ராஜ், ஜோதி பாசு, கண்ணன், வெங்கட், ராஜி, குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் பெண்களை நிர்வாணப்படுத்தி பாலி யல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு உடனடி யாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும். குற்ற செயலை தடுக்க இயலாத மணிப்பூர் அரசை உட னடியாக டிஸ்மிஸ் செய்து, முதலமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.

    • கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி எல்.என்புரம் சென்னை சாலையை சேர்ந்தவர் கவர்னர் என்ற ராமு (69).,இவர் அதே பகுதியில் சைக்கிள் பழுது பார்க்கும் கடைவைத்திருந்தார். இவருக்கு புருஷோத்தமன், பிரபாகரன், மகாலிங்கம் ஆகிய 3 மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இவருடன் இவரது மகன் புருஷோத்தமன், மருமகள் ஆகியோர் வசித்து வந்தனர்.

    புருஷோத்தமன் தி.மு.க ஒன்றிய பிரதநிதியாக இருந்து வருகிறார். வழக்கம்போல நேற்று இரவு வீட்டின் முன்பு படுத்திருந்த ராமு இன்று காலை இவரது வீட்டின் பின்புறம் தோட்டத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    தோட்டத்திற்கு சென்ற ராமு மருமகள் இதனை கண்டுஅலறினார். இவரது அலறல் சத்தத்தை கேட்டுவெளியே ஓடிவந்த இவரது கணவர் புருஷோத்தமன் தனது தந்தை கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து கதறி அழுதார். தகவல் அறிந்ததும் உறவினர்கள், கிராம பொதுமக்கள் தி.மு.க.வினர் அங்குதிரண்டனர்.

    இதனால் அங்கு பதட்டம் நிலவியது.இது பற்றி பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர்கள் பண்ருட்டி கண்ணன், காடாம்புலியூர் ராஜ தாமரை பாண்டியன், நெல்லிக்குப்பம் சீனிவாசன், புதுப்பேட்டை நந்தகுமார், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பரமேஸ்வர பத்மநாபன் மற்றும் ஏராளமான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலையான ராமுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடலூரில் இருந்து போலீஸ் மோப்பநாய் கூப்பர் வரவழைக்கப்பட்டது. போலீஸ் மோப்பநாய் சம்பவ இடத்திலிருந்து மோப்பம் பிடித்துக்கொண்டு சிறிதுதூரம் ஓடியது. யாரையும் கவ்விபிடிக்கவில்லை. இந்த கொலை சம்பவம் இடப்பிரச்சனை காரணமாக நடந்திருக்குமா அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்குமா?என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
    • கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.

    காட்டுமன்னார்கோவில்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.

    ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர்.
    • செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    காட்டுமன்னார் கோவில்:

    கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே மேல்புளியங்குடி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு போடப்பட்ட புதிய சாலை ஓரளவுக்கு தரமாக இருந்து வந்தாலும் சாலையை சுற்றி பார்த்த கிராம மக்கள் ஒரு பகுதிக்கு வந்த போது அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் புதிய மாடலில் சாலை அமைக்கும் திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் புளியங்குடி கிராமத்திலும் இப்படி நடைபெற்றுள்ளதை கண்டு அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

    அதாவது புளியங்குடி கிராமத்தில் சாலையின் ஓரமாக போட்டு வைக்கப்பட்டுள்ள புதிய மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் அதன் மேல் தார்ச்சாலை போட்டுள்ளனர். இதனை செல்போனில் படம் எடுத்த பொதுமக்கள் சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×