search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "oil palm"

    • தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது.

    கடலூர்:

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் நடைபெற்று வரும் முகாமினை நெல்லி க்குப்பம் நகராட்சிக்குட்பட்ட திருக்கண்டேஸ்வரம் நகராட்சி தொடக்கப்பள்ளி முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தோட்டக்கலை மற்றும் மலைபயிர்கள் துறையின் மூலம் சமையல் எண்ணெய் பயிர்களின் பரப்பு மற்றும் உற்பத்தியினை அதிகரித்திட 2022-23 ஆம் ஆண்டு முதல் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய்ப்பனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    விவசாயிகளுக்கு தரமான கன்றுகளை நடவு செய்யும் பொருட்டு எண்ணெய்ப்பனை சார்ந்த தனியார் நிறுவனங்கள் மூலம் எண்ணெய்ப்பனை கன்றுகளை 100 சதவீத மானியத்தில் வயல்வெளிக்கே சென்று வழங்கப்படுகிறது. இத்தி ட்டத்தினை திருக்க ண்டேஸ்வரம் பகுதியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் விவசாய நிலத்தில் எண்ணெய்ப்பனைக் கன்றை நட்டு தொடங்கி வைத்தார்.

    கடலூர் செம்மண்டலம் பகுதியில் சமூக பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகள் தங்கும் அறைகள், கழிப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் பராமரிப்புகள் குறித்தும் மற்றும் குழந்தைகளுக்கு தயார் செய்யப்பட்டிருந்த மதிய உணவினை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்தார். மேலும் அவ்வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி வகுப்பில் குழந்தைகளுடன் கலந்துரையாடினார். இந்நிகழ்வில் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) திட்ட இயக்குநர் மதுபாலன், நெல்லிக்குப்பம் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகி ருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி , துணை இயக்குநர் தோட்டக்கலைத்துறை அருண், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் அரவிந்த் ஆகியோர் உள்ளனர்.

    ×