search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "10 rupees coin"

    • திருப்பத்தூர் எஸ்.பி.யிடம் புகார் மனு
    • உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தலைமையில் நடைபெற்றது.

    இதில், திருப்பத்தூரைச் சேர்ந்த புரட்சி என்பவர் அளித்த மனுவில், "திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசுப் பஸ்கள், கடைகள், வணிக வளாகங்களில் 10 ரூபாய்

    நாணயங்களை வாங்க மறுக் கின்றனர். எனவே, 10 ரூபாய் நாணயங்களை அனைத்து இடங்களிலும் வாங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இக்கூட்டத்தில், கூடுதல் எஸ்.பி. புஷ்பராஜ், துணை காவல் கண்காணிப்பாளர்கள் செந்தில் (திருப்பத்தூர்), சரவணன் (ஆம்பூர்), தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ரஜினி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    • ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர்.
    • போலீசார் கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    கடலூர் :

    10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்கிற வதந்தி மக்களிடையே இன்றும் பல இடங்களில் பரவி நிற்கிறது. குறிப்பாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும், 10 ரூபாய் நாணயங்கள் கடலூர், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. இதனால் மக்கள் இந்த நாணயத்தை வாங்குவதற்கே தயக்கம் காட்டுகிறார்கள்.

    இந்த வதந்தியை மக்களிடம் இருந்து நீக்குவதற்கு, இந்த நாணயத்தை வெளியிட்ட ரிசர்வ் வங்கி, அரசு மற்றும் சில வணிகர்களும் விழிப்புணர்வு பிரசாரங்களை அவ்வப்போது முன்னெடுத்து வருகிறார்கள்.

    இருப்பினும் 10 ரூபாய் நாணயங்கள் கடலூர் மாவட்டத்தில் இன்னும் முழுமையான பயன்பாட்டுக்கு வரவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

    இந்த நிலையில், கடலூர் மாவட்ட மக்களிடையே 10 ரூபாய் நாணயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராமநத்தம் அடுத்துள்ள புதுக்குளத்தை சேர்ந்த ரமேஷ் என்பவர், நேற்று புதிதாக திறந்த பிரியாணி கடையில் 10 ரூபாய் நாணயத்துக்கு சிக்கன் பிரியாணி விற்பனை செய்தார்.

    இதுபற்றி அறிந்தவுடன், அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தங்களது வீட்டில் இத்தனை நாட்களாக தூங்கி கொண்டு கிடந்த 10 ரூபாய் நாணயங்களை எடுத்துக் கொண்டு பிரியாணி கடையை நோக்கி விரைந்தனர்.

    ஒரே நேரத்தில் அங்கு 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்து, பிரியாணியை வாங்கி சென்றதை பார்க்க முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் அங்கு விரைந்து வந்து, கூட்ட நெரிசலை ஒழுங்குப்படுத்தினர்.

    இதுகுறித்து ரமேஷ் கூறுகையில், நான் சென்னையில் பிரபல நட்சத்திர ஓட்டலில் வேலை பார்த்தேன். அங்கிருந்து சொந்த ஊர் வந்த நான், இங்கு புதிதாக பிரியாணி கடையை திறந்தேன்.

    தற்போது 10 ரூபாய் நாணயம் ஒரு சில கடைகளில் வாங்க மறுத்துவருவதால், அதுபற்றி பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். அதன்படி, கடை திறந்து முதல்நாளான நேற்று, 10 ரூபாய் நாணயத்துக்கு பிரியாணி வழங்கினேன். மக்களும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர் என்றார்.

    • ராணிப்பேட்டை கலெக்டர் எச்சரிக்கை
    • பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்தனைகளிலும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப் பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் ரூ.10 நாணயம் வாங்க மறுத்தால் நடவடிக்கை எடுக் கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ரூ.10 நாணயங்களின் உண்மைத் தன்மை குறித்த சந்தேகம் காரண மாக பல இடங்களில் வர்த்தகர்கள், பொதுமக்கள் அவற்றைப் பெற தயக்கம் காட்டுவது கவனத்துக்கு வந்துள்ளது.

    இந்திய ரிசர்வ் வங்கி இந்த நாணயங்களை அச்சிட்டு புழக்கத்தில் விடுகிறது. இந்த நாணயங்களை வாங்க மறுப்பது தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

    ரூ.10 நாணயங்கள் பொருளாதார, சமூக, பண்பாட்டு விழுமியங்களின் பல்வேறு கருப்பொருள் களை பிரதிபலிக்கும் தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளன.

    இந்த நாணயங்களின் நீண்ட கால பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு, வெவ்வேறு வடிவங்களில் ஒரே நேரத்தில் சந்தையில் புழக்கத்தில் உள்ளன.

    இதுவரை ரிசர்வ் வங்கி 14 விதமான ரூ.10 நாணயங்களை வெளி யிட்டுள்ளது. பொதுமக்கள், வர்த்தகர்கள் தங்கள் அனைத்து பரிவர்த்த னைகளி லும் ரூ.10 நாணயங்களை எந்தவிதத் தயக்கமுமின்றி வாங்க வேண்டும். வங்கிகளும் பரிவர்த்தனை மற்றும் பரிமாற்றத்து க்காக ரூ.10 நாணயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். ரூ.10 நாணயங்களை ஏற்க மறுக்கும் பொதுமக்கள், வர்த்தகர்கள், பஸ் கண்டக்டர்கள், வங்கிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    ×