search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை 182.25 மி.மீ மழை பதிவு
    X

    கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை 182.25 மி.மீ மழை பதிவு

    • லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
    • மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

    கடலூர்:

    தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறு பாடு காரணமாக, நேற்று முதல் வருகிற 29- ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதி களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. இதனை தொடர்ந்து தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவி வருவதோடு 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆகையால் நேற்று முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை யாரும் மீன்பிடிக்க செல்லக்கூடாது என மீனவ துறை அதிகாரி கள் எச்சரிக்கை விடுத்துள்ள னர். இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையிலும், இடையில் 100 டிகிரி சுட்டெரிக்கும் வெயி லும் பதிவானது. இதன் காரணமாக சீதோஷ்ண மாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்ட கார ணத்தினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை களில் ஏராளமான பொது மக்கள் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று மாலை கடலூர் மாவட்டத் தில் வானம் மேகமூட்டத் துடன் காணப்பட்டு வந்த நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாச்சலம் ,சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை, ஸ்ரீ முஷ்ணம், காட்டுமன்னார் கோவில், லால்பேட்டை, சேத்தியாதோப்பு, புவனகிரி, வடலூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவ லாக மழை பெய்து வந்தது. இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. இந்த மழை காரணமாக மாவட்ட முழுவதும் குளிர்ந்த காற்று வீசி வருவதோடு, விவசாய பணிகள் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது. தற்போது கடலூர் மாவட் டத்தில் தொடர் மழை பெய்து வருவதால் ஆங்காங்கே குளங்களில் தண்ணீர் அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவி மில்லி மீட்டரில் வருமாறு:- காட்டுமன்னார்கோவில் - 22.4, பெல்லாந்துறை - 22.2, வேப்பூர் - 22.0, லால்பேட்டை - 22.0,லக்கூர் - 13.4, ஸ்ரீமுஷ்ணம் - 11.3, கீழ்செருவாய் - 11.0, பரங்கிப்பேட்டை - 10.2, தொழுதூர் - 8.0, கலெக்டர் அலுவலகம்-6.2, சேத்தியா தோப்பு - 6.2, புவனகிரி - 6.0, குறிஞ்சிப்பாடி - 4.0, எஸ்.ஆர்.சி.குடிதாங்கி - 3.75, பண்ருட்டி - 3.0, சிதம்பரம்-2.2, அண்ணா மலைநகர் - 2.2, விருத்தா சலம் - 2.0,கடலூர் - 2.0, வானமாதேவி-1.2, கொத்தவாச்சேரி - 1.0 கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 182.25 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×