search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Superintendent Inquiry"

    • கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார்.
    • எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்தாண்டிக்குப்பம் பகுதியில் வாலிபர் ஒருவர் நேற்று நள்ளிரவு சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை மற்றும் கற்களை கொண்டு எந்த வாகனமும் செல்லாத வகையில் மறித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் வாகன ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உடனடியாக அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார்.அவர் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த கோபிநாத் (வயது) 27 என்பது தெரியவந்தது. தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வரும் அவர் முத்தாண்டிக் குப்பத்தில் தனது நண்பரின் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளார். பின்னர் தனது ஊருக்கு செல்வதற்காக இந்த பகுதியில் நின்று கொண்டிருந்தபோது எந்த பஸ்சும் நிற்கவில்லை என்பதால் குடிபோதையில் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் பேராசிரியர் கோபிநாத்தை எச்சரிக்கை செய்து அறிவுரை வழங்கி இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என தெரிவித்தார். பின்னர் சப் இன்ஸ்பெக்டர் மாசிலாமணி மற்றும் போலீசாரை அழைத்து பேராசிரியர் கோபிநாத்தை பாதுகாப்பாக தஞ்சாவூர் செல்லும் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    ×