வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி

வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலியானார்.புருஷோத்தமன் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
வேப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி வாலிபர் பலி
Published on

கடலூர்:

வேப்பூர் அடுத்த தொண்டாங்குறிச்சி கிரா மத்தை சேர்ந்தவர் புரு ஷோத்தமன் (வயது 33). இவர் மோட்டார் சைக்கி ளில் வேப்பூருக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியி லிருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு லாரி புருஷோத்தமன் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தார். இவர் ஆம்புலன்ஸ் மூலம் வேப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்லும் வழியிலேயே புருஷோத்தமன் பரிதாப மாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com