என் மலர்
கோயம்புத்தூர்
- இளம்பெண் தன்னை தேட வேண்டாம் என பெற்றோரிடம் கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
- இளம்பெண்ணின் பெற்றோர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர்.
கோவை,
கோவை கோவில்பாளையம் அருகே உள்ள கீரநத்தத்தை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு காந்திபுரத்தில் உள்ள அழகு நிலையத்தில் அழகுகலை நிபுணராக பணியாற்றி வந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இளம்பெண்ணுக்கு சூலூர் அருகே உள்ள பட்டணத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்தும் செல்போனில் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.
இந்த காதல் விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரியவரவே அவரது பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சம்பவத்தன்று இளம்பெண் தனது பெற்றோரிடம் வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சென்றார்.
ஆனால் மாலையில் அவர் வீட்டிற்கு திரும்பி செல்லவில்லை. இந்தநிலையில் தனது பெற்றோரை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட இளம்பெண் தன்னை தேட வேண்டாம் எனவும், காதலிக்கும் வாலிபருடன் செல்வதாக கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து இளம்பெண்ணின் பெற்றோர் தகவல் தெரிவித்து விட்டு வாலிபருடன் ஓட்டம் பிடித்த தங்களது மகளை கண்டுபிடித்து தரும்படி கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
- தீபக் ஈஸ்வரன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.
- போலீசார் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
குனியமுத்தூர்,
கோவை காரமடையை சேர்ந்தவர் தீபக் ஈஸ்வரன்(25).
இவர் பி.கே.புதூர் பகுதியில் தங்கி குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இவரது அறையின் அருகே கடலூர் திட்டக்குடியை சேர்ந்த 18 வயது மாணவர், சேலம் கே.கே.பாளையத்தை சேர்ந்த ஷெல்டன் (20), மதுரை சிம்மக்கல்லை சேர்ந்த ஹரி (20) ஆகியோர் தங்கி இருந்தனர்.
இவர்களது அறைக்கு இவர்களுடன் படித்து வரும் குனியமுத்தூர் சாய்கார்டனை சேர்ந்த சதாம் உசேன் என்பவர் அடிக்கடி வந்து செல்வார்.
இவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அறையில் இருந்து கஞ்சா புகைத்து வந்தனர். மேலும் கஞ்சாவை வாங்கி வந்து, தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக தெரிகிறது.
இதனை அறிந்த தீபக் ஈஸ்வரன் இதுபோன்று செய்யக்கூடாது. இது தவறு என சொல்லி அவர்களிடம் தட்டி கேட்டார்.
இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து தீபக் ஈஸ்வரனிடம் நீ எங்கள் விவகாரத்தில் தலையிடாதே உனக்கு நல்லது இல்லை என கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதனால் பயந்து போன அவர் சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கல்லூரி மாணவர்களுக்கு குனியமுத்தூரை சேர்ந்த பிரனாய், ஷ்யாம் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்து வந்ததும், இதனை கல்லூரி மாணவர்கள் 4 பேரும் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் கல்லூரி மாணவர்களான சதாம் உசேன், ஷெல்டன், ஹரி உள்பட 4 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.
- சமீபத்தில் பாரதியார் உயராய்வு மையம் கட்டிடம் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது.
- மணிக்கூண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியாரின் பாடல்களை ஒலியாக எழுப்பும்.
வடவள்ளி:
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழத்துறை காணி நிலம் பாரதியார் உயராய்வு மையம் மற்றும் பாரதி பாசறை அறக்கட்டளை சார்பில் கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முகப்பு பகுதியில் 21 அடி உயரத்தில் கவிக்குரல் மணிக்கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் பாரதியார் நினைவு நூற்றாண்டை முன்னிட்டு பல்வேறு ஆராய்ச்சி, திட்டபணிகள் காணிநிலம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பாரதியார் உயராய்வு மையம் கட்டிடம் பல்கலைக்கழகத்தில் திறக்கப்பட்டது. தொடர்ந்து பாரதியார் கவிக்குரல் மணிக்கூண்டு இன்று மாலை திறக்கப்பட உள்ளது.
இந்த மணிக்கூண்டு அமைப்பதற்கான கட்டுமான பணி கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. தற்போது பணிகள் அனைத்தும் முடிந்ததை தொடர்ந்து இன்று முதல் மணிக்கூண்டு பயன்பாட்டிற்கு வர உள்ளதாக பல்லைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்த்துறை தலைவர் சித்ரா கூறியதாவது:-
மணிக்கூண்டு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை பாரதியாரின் பாடல்களை ஒலியாக எழுப்பும். பாரதியார் நினைவு நூற்றாண்டையொட்டி இது கட்டப்பட் டுள்ளது.
சுற்றுவட்டார பகுதிகளில் பாரதியார் பற்றி படிக்கவும், பாரதியார் கவிதைகளை வாசிப்பதற்கான வசதிகளை பாரதியார் உயராய்வு மையம் வாயிலாக திறப்பு விழாவிற்கு பிறகு ஏற்படுத்தப்படும்.
பாரதியார் பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெருமைக்கு ஒர் அடையாளத்தை உருவாக்கியதில் பெருமிதம் கொள்கிறோம். இதற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் ஒப்புதல் அளித்து ஊக்குவித்தது.
இங்கு அமைக்கப்பட்டுள்ள மணிக்கூண்டு ரூ.30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு திறக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் இளம்பெண் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே நின்றிருந்தார்.
- அதிர்ச்சியான இளம்பெண், தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் தகவலை தெரிவித்து வாலிபரை மடக்கி பிடித்தார்.
கோவை:
கோவை சுந்தராபுரம் அழகுநகரை சேர்ந்தவர் 32 வயது இளம்பெண்.
இவர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு கடந்த 2015-ல் திருமணமானது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மனைவி தனது மகனுடன் பெற்றோர் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் இருந்து மொபட்டில் சாய்பாபா காலனியில் உள்ள நிறுவனத்திற்கு சென்றார்.
அப்போது சாலையில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின்தொடர்ந்து வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்தார்.
அதனை கண்டு கொள்ளாமல் இளம்பெண் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று விட்டார். நிறுவனத்திற்கு உள்ளே சென்று விட்டு, சிறிது நேரம் கழித்து வெளியில் வந்தார்.
அப்போது அவரை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த வாலிபர் இளம்பெண் வேலை பார்க்கும் நிறுவனம் அருகே நின்றிருந்தார்.
இதனால் அதிர்ச்சியான இளம்பெண், தன்னுடன் வேலை பார்ப்பவர்களிடம் தகவலை தெரிவித்து, அந்த வாலிபரை மடக்கி பிடித்தார்.
பின்னர் அவரிடம் யார், எதற்காக இளம்பெண்ணை தொடர்ந்து வந்தாய் என அங்கிருந்தவர்கள் வாலிபரிடம் விசாரித்தனர்.
அதற்கு அவர், தான் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாகவும், தன்னுடைய முதலாளி உங்களை கண்காணிக்க சொன்னதாக கூறினார்.
இதையடுத்து அந்த வாலிபரை அழைத்து கொண்டு இளம்பெண், துப்பறியும் நிறுவனத்திற்கு சென்றார். அங்கு இருந்த துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் நீங்கள் ஏன் என்னை கண்காணிக்க சொன்னீர்கள் என விசாரித்தார்.
அதற்கு அவர், உங்கள் கணவர் தான் உங்களை கண்காணிக்க சொல்லி, உங்கள் குறித்த தகவல்களை சேகரிக்க சொன்னார். அதன் காரணமாகவே நாங்கள் கண்காணித்தோம் என்றனர்.
இதை கேட்டதும் இளம்பெண் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தார். உடனே அவர் நேராக சாய்பாபா போலீஸ் நிலையம் சென்று புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது பணியாளர் மற்றும் இளம்பெண்ணின் கணவர் ஆகியோரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரித்தனர்.
விசாரணையின் முடிவில் இளம்பெண்ணை பின்தொடர்ந்து கண்காணித்ததாக துப்பறியும் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 2 பேரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். கணவரை கண்டித்து அனுப்பி வைத்தனர்.
- கொடுக்கல் வாங்கல் தகராறு படுகொலையில் முடிந்தது
- ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் மாமியார் வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி திப்பம்பட்டி அருகே உள்ள கொள்ளு பாளையத்தை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி ராதா (வயது 30). இவர்க ளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் பாண்டியின் தாய் வசந்தா (60) என்பவர் வசித்து வருகிறார்.
கடந்த 14-ந் தேதி இவர்கள் அனைவரும் குழந்தைகளுடன் மொபட்டில் மாசாணியம்மன் கோவிலுக்கு ஊசி, பாசி விற்பதற்காக சென்றனர். பின்னர் இரவு 7 மணியளவில் வீட்டிற்கு புறப்பட்டனர். ஆனை மலை- கோட்டூர் ரோட்டில் அய்யாமடை பிரிவு அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே சென்ற போது பணம் கொடுக்கல் வாங்கலில் ராதாவிற்கும், வசந்தாவிற்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த வசந்தா, ராதாவின் வயிற்றில் காலால் மிதித்தார். கையில் குழந்தை இருந்ததால் அவரால் தடுக்க முடியவில்லை. வலி தாங்க முடியாமல் தவித்த ராதா மறுநாள் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்து ஸ்கேன் எடுக்கு மாறு கூறி உள்ளனர். ஆனால் அவர் ஸ்கேன் எடுக்காமல் மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றார். நேற்று மாலை மீண்டும் ராதாவிற்கு வயி ற்று வலி ஏற்பட்டு மயங்கி னார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை ஆம்பு லன்சு மூலமாக பொள்ளா ச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ராதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்ட தாக தெரிவித்தனர். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவின் மாமியார் வசந்தாவை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- காதலி பேசாததால் வாழ்க்கையில் விரக்தி:
- காதலியை நினைத்து மருகி தூக்கில் தொங்கினார்
கருமத்தம்பட்டி,
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ரோசன்குமார் (வயது 21). இவர் கரும த்தம்பட்டி தண்ணீர் பந்தல் பகுதியில் தங்கி இருந்து அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு ரோசன்கு மாருக்கு உத்தர பிரதேசத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவ ருடன் பழ க்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே செல்போனில் கருத்து வேறுபாடு ஏற்ப ட்டது. இதனால் கடந்த 5 நாட்களாக இளம்பெண் ரோசன்கு மாரிடம் பேசவி ல்லை. இதன் காரணமாக அவர் மிகுந்த மனவேதனை அடை ந்து காணப்பட்டார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த ரோச ன்குமார் காதலி பேசாததால் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொ ண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து கருமத்தம்பட்டி போலீ சாருக்கு தகவல் தெரிவித்த னர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசார ணை நடத்தினர்.
பின்னர் தற்கொலை செய்து கொண்ட ரோசன்கு மாரின் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்கு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனு ப்பி வைத்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- இரும்பு கம்பெனி அதிபர் மகன் கைது
- காதலிப்பதாக கூறி வரம்பு மீறியதால் போலீசார் நடவடிக்கை
கோவை
கோவை சரவணம்பட்டி அடுத்த காளப்பட்டியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண்.
இவர் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனி யில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இள ம்பெண், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு நான் வேலை பார்க்கும் கம்பெனியின் உரிமை யாளரின் மகனான ரோகித் (26) என்பவரும் தந்தைக்கு உதவியாக நிறுவனத்திற்கு வந்து செல்கிறார்.
அவர் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாக கூறினார். முதலில் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அவர் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வருவது, அலுவலகத்தில் நான் தனியாக இருக்கும் நேர ங்களில் வந்து என்னிடம் காதலிப்பதாக கூறுவதை தொடர்ந்து வந்தார்.
நான் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டேன். இருந்தாலும் அவர் தொடர்ந்து என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார். நான் மறுத்தால் எனக்கு மிரட்டலும் விடுக்கிறார்.
சம்பவத்தன்று நான் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். அப்போது ரோகித் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மீண்டும் என்னிடம் உன்னை நான் காதலிக்கிறேன். நீயும் காதலிக்க வேண்டும் என்றார்.
நான் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து நகர முற்பட்டேன். ஆனால் அவர், என்னை தரதரவென அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து சென்றார். நான் சத்தம் போட்டு, அதனை கண்டு கொள்ளாமல் இழுத்து சென்றார்.
அங்கு வைத்து, அவர் என்னை தகாத உறவுக்கு அழைத்தார். நான் வர மறுப்பு தெரிவித்ததால் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரோகித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜ ர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- ஜன்னலை உடைத்து கடைக்குள் இருந்த அரிசியை ருசித்து தின்றது
- ஊருக்குள் யானை நடமாட்டம் பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது
கோவை,
கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதிகளில் காட்டு யானைகள் உள்பட பல்வேறு வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
வனவிலங்குகள் தண்ணீர், உணவு தேடி அடிக்கடி மலையடிவார த்தையொட்டி குடியி ருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வருவதை வாடி க்கையாக வைத்துள்ளது.
அவ்வாறு வரும் யானை கள், குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடு மற்றும் விவசாய நிலங்களில் உள்ள பயிர்க ளை சேதப்படுத்து வதோடு, பொருட்களையும் சூறை யாடி செல்கிறது.
தொடர்ந்து யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிறுமுகை அடுத்த சம்பூரவள்ளிபுதூர் பகுதியில் ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது. இன்று காலை வனத்தை விட்டு வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சம்பூரவள்ளி புதூருக்குள் நுழைந்தது.
அந்த பகுதியில் வெகு நேரமாக சுற்றி திரிந்த ஒற்றை காட்டு யானை, ரேஷன் கடை அருகே சென்றது. பின்னர் ரேஷன் கடையின் ஜன்னலை உடை த்து, துதிக்கையை உள்ளே விட்டு அரிசியை எடுத்து ருசித்து சாப்பிட்டது.
தொடர்ந்து அங்கிருந்து காட்டு யானை சென்று விட்டது. இன்று காலை அந்த வழியாக வந்த பொதுமக்கள், ரேஷன் கடையின் ஜன்னல் உடைக்க ப்பட்டு இருந்ததை பார்த்து பணியாளர்களுக்கு தெரிவித்தனர்.
அவர்களும் வந்து பார்த்தனர்.அப்போது அதிகாலை நேரத்தில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை, ஜன்னலை உடைத்து அரிசியை சாப்பிட்டு சென்றது தெரியவந்தது.
யானை நடமாட்டம் இருப்பது பற்றிய தகவல் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படு த்தி உள்ளது. யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.
- நடைபயிற்சிக்கு சென்றவர் மாயமானது கண்டு அதிர்ச்சி
- கடத்தல் கும்பல் கைவரிசையா? போலீசார் விசாரணை
வடவள்ளி.
கோவை குறிச்சி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பேஸ்-1 பகுதியில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்கு 15 ஆண்டுகள் பழமையான 2 சந்தனமரங்கள் வளர்க்கப்பட்டு வந்தன.இந்த நிலையில் அந்த பகுதியில் வசிப்பவர்கள் இன்று காலை நடைபயிற்சிக்கு வந்தனர். அப்போது மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்கள் மாயமானது தெரியவந்தது.
எனவே அதிர்ச்சி அடைந்தவர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது யாரோ சிலர் மைதானத்தில் இருந்த 2 சந்தனமரங்களை வெட்டி கடத்தி சென்றது தெரிய வந்தது.கோவை சுந்தராபுரம் பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் சந்தனமரங்கள் வெட்டி கடத்தப்பட்டு உள்ளன. எனவே அந்த குற்றவாளிகள் தான் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டனரா என்று தெரியவில்லை.இதுகுறித்து சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தம்பி மனைவியுடன் வாலிபர் தலைமறைவு
- குடும்பத்தினர் எச்சரித்ததால் வீட்டை விட்டு ஓட்டம்
கோவை,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 44 வயது மெக்கா னிக். இவருக்கு திருமண மாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் மெக்கானிக்கிற்கு அவரது தம்பி மனைவியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாள டைவில் இது கள்ளகாதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்தனர். இந்த கள்ளகாதல் விவ காரம் குடும்பத்தி னருக்கு தெரிய வரவே அவர்கள் 2 பேரையும் கண்டித்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண்ணை அவரது 14 வயது பெண் குழந்தையுடன் மெக்கானிக் அழைத்து சென்றார். இது குறித்து இளம்பெண்ணின் கணவர் மற்றும் மெக்கா னிக்கின் மனைவி ஆகியோர் மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்த னர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தம்பி மனைவியுடன் ஓட்டம் பிடித்த மெக்கா னிக்கை தேடி வருகின்றனர்.
- புறநகர் போலீஸ் நிலையங்கள் மாநகர கட்டுப்பாட்டில் வருவதால், சிட்டி பகுதியில் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
- வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர்
வடவள்ளி,
கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.
கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதட்ட சூழ்நிலை நிலவிய போது மாநகரப் பகுதியில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் தொடங்க வேண்டும் என மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து கோவை சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்ட போலீஸ் எல்லைக்குள் வரும் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகர போலீசுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.
அதன்படி நேற்று முதல் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் துறை வசம் சென்றது. இந்த போலீஸ் நிலையங்கள் இனி மாநகர போலீசுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.
வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர். வடவள்ளி இன்ஸ்பெக்டர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இருப்பார். மாநகர போலீசார் வசம் வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றுள்ளதால், அவர்கள் வருகிற திங்கட்கிழமைக்குள் தங்கள் பணியை முழு வீச்சில் தொடங்குவார்கள் என தெரிகிறது.சட்டம் ஒழுங்குக்கு ஒரு இன்ஸ்பெக்டர், குற்ற சம்பவங்களுக்கு ஒரு இன்ஸ்ெபக்டர் என 2 பேர் விரைவில் பணியை தொடங்க உள்ளனர். இதனால் வடவள்ளி பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமற்றப்பட்டு மாநகர காவல் வசம் வர உள்ளது. இதனால் குற்றசம்பங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை வடவள்ளி போலீஸ் நிலைய பகுதிக்குளு இருந்த வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது.
இதுதவிர வடவள்ளி பகுதி வார்டு எண் 36,37,38,39,40 வார்டுகளுடன் சோமை யம்பாளையம், மருதமலை, வீரகேரளம், பேரூர அருகே உள்ள ஆண்டிபாளையம் ஆகியவவை தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு செல்கிறது.
இதேபோல், துடியலூர் போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாநகர் போலீசில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி துடியலூர் போக்குவரத்து போலீசார் ஆர்.எஸ் புரம் போக்குவரத்து போலீஸ் பிரிவுடனும், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துடனும் இணைந்து செயல்பட உள்ளது. புறநகர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதால் மாநகரின் எல்லை மற்றும் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
- காரமடை வாலிபர் கைது
- உடல்நலகுறைவுடன் வீட்டில் இருந்தவரிடம் பாலியல் அத்துமீறல்
மேட்டுப்பாளையம்,
கோவை காரமடையை சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 38 வயது வாலிபர், மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வாலிபர் ஓடி விட்டார். இதுகுறித்து மூதாட்டி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.






