search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை மாநகர காவல் எல்லைக்குள்போலீஸ் நிலையங்கள் இணைப்பு
    X

    கோவை மாநகர காவல் எல்லைக்குள்போலீஸ் நிலையங்கள் இணைப்பு

    • புறநகர் போலீஸ் நிலையங்கள் மாநகர கட்டுப்பாட்டில் வருவதால், சிட்டி பகுதியில் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    • வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர்

    வடவள்ளி,

    கோவை மாவட்ட போலீஸ் எல்லைக்குள் துடியலூர், வடவள்ளி போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வந்தன.

    கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து பதட்ட சூழ்நிலை நிலவிய போது மாநகரப் பகுதியில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் தொடங்க வேண்டும் என மக்கள் உள்பட பல்வேறு அமைப்பினரிடம் இருந்து கோரிக்கை எழுந்தது.

    இதையடுத்து கோவை சுந்தராபுரம், கரும்புக்கடை, கவுண்டம்பாளையம் பகுதிகளில் புதிதாக போலீஸ் நிலையங்கள் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் நிர்வாக வசதிக்காக மாவட்ட போலீஸ் எல்லைக்குள் வரும் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்கள் மாநகர போலீசுடன் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வந்தது.

    அதன்படி நேற்று முதல் வடவள்ளி, துடியலூர், கவுண்டம்பாளையம் ஆகிய போலீஸ் நிலையங்களும் மாநகர போலீஸ் துறை வசம் சென்றது. இந்த போலீஸ் நிலையங்கள் இனி மாநகர போலீசுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை நேற்று வெளியானது.

    வடவள்ளி போலீஸ் நிலையத்தில் 2 எஸ்.ஐ. உள்பட 20 காவலர்கள் உள்ளனர். வடவள்ளி இன்ஸ்பெக்டர் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் இருப்பார். மாநகர போலீசார் வசம் வடவள்ளி போலீஸ் நிலையம் சென்றுள்ளதால், அவர்கள் வருகிற திங்கட்கிழமைக்குள் தங்கள் பணியை முழு வீச்சில் தொடங்குவார்கள் என தெரிகிறது.சட்டம் ஒழுங்குக்கு ஒரு இன்ஸ்பெக்டர், குற்ற சம்பவங்களுக்கு ஒரு இன்ஸ்ெபக்டர் என 2 பேர் விரைவில் பணியை தொடங்க உள்ளனர். இதனால் வடவள்ளி பகுதியில் கூடுதல் காவலர்கள் பணியமற்றப்பட்டு மாநகர காவல் வசம் வர உள்ளது. இதனால் குற்றசம்பங்கள் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் இதுவரை வடவள்ளி போலீஸ் நிலைய பகுதிக்குளு இருந்த வேடபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்துடன் இணைக்கப்படுகிறது.

    இதுதவிர வடவள்ளி பகுதி வார்டு எண் 36,37,38,39,40 வார்டுகளுடன் சோமை யம்பாளையம், மருதமலை, வீரகேரளம், பேரூர அருகே உள்ள ஆண்டிபாளையம் ஆகியவவை தொண்டாமுத்தூர் காவல்நிலைய எல்லைக்கு செல்கிறது.

    இதேபோல், துடியலூர் போக்குவரத்து போலீஸ் மற்றும் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் மாநகர் போலீசில் உடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி துடியலூர் போக்குவரத்து போலீசார் ஆர்.எஸ் புரம் போக்குவரத்து போலீஸ் பிரிவுடனும், துடியலூர் அனைத்து மகளிர் போலீசார், கோவை மேற்கு பகுதி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துடனும் இணைந்து செயல்பட உள்ளது. புறநகர் போலீஸ் நிலையங்கள் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டில் இணைக்கப்பட்டதால் மாநகரின் எல்லை மற்றும் போலீஸ் பலம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×