என் மலர்
உள்ளூர் செய்திகள்

தனியார் நிறுவன ஊழியைக்கு பாலியல் தொல்லை:
- இரும்பு கம்பெனி அதிபர் மகன் கைது
- காதலிப்பதாக கூறி வரம்பு மீறியதால் போலீசார் நடவடிக்கை
கோவை
கோவை சரவணம்பட்டி அடுத்த காளப்பட்டியை சேர்ந்தவர் 28 வயது இளம்பெண்.
இவர் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனி யில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் இள ம்பெண், சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது:-
நான் சரவணம்பட்டியில் உள்ள மெட்டல் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறேன். அங்கு நான் வேலை பார்க்கும் கம்பெனியின் உரிமை யாளரின் மகனான ரோகித் (26) என்பவரும் தந்தைக்கு உதவியாக நிறுவனத்திற்கு வந்து செல்கிறார்.
அவர் என்னிடம் வந்து என்னை காதலிப்பதாக கூறினார். முதலில் நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஆனால் அவர் தொடர்ந்து என்னை பின் தொடர்ந்து வருவது, அலுவலகத்தில் நான் தனியாக இருக்கும் நேர ங்களில் வந்து என்னிடம் காதலிப்பதாக கூறுவதை தொடர்ந்து வந்தார்.
நான் அவரது காதலை ஏற்க மறுத்து விட்டேன். இருந்தாலும் அவர் தொடர்ந்து என்னை காதலிக்க வேண்டும் என வற்புறுத்தி வந்தார். நான் மறுத்தால் எனக்கு மிரட்டலும் விடுக்கிறார்.
சம்பவத்தன்று நான் அலுவலகத்தில் தனியாக இருந்தேன். அப்போது ரோகித் அலுவலகத்திற்கு வந்தார். அவர் மீண்டும் என்னிடம் உன்னை நான் காதலிக்கிறேன். நீயும் காதலிக்க வேண்டும் என்றார்.
நான் அதற்கு மறுப்பு தெரிவித்து அங்கிருந்து நகர முற்பட்டேன். ஆனால் அவர், என்னை தரதரவென அருகே உள்ள கார் பார்க்கிங் பகுதிக்கு இழுத்து சென்றார். நான் சத்தம் போட்டு, அதனை கண்டு கொள்ளாமல் இழுத்து சென்றார்.
அங்கு வைத்து, அவர் என்னை தகாத உறவுக்கு அழைத்தார். நான் வர மறுப்பு தெரிவித்ததால் எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்தார்.
தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் ரோகித் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.
இளம்பெண் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜ ர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.






