97 வயது மூதாட்டியிடம் சில்மிஷம்:

காரமடை வாலிபர் கைது உடல்நலகுறைவுடன் வீட்டில் இருந்தவரிடம் பாலியல் அத்துமீறல்
97 வயது மூதாட்டியிடம் சில்மிஷம்:
Published on

மேட்டுப்பாளையம்,

கோவை காரமடையை சேர்ந்தவர் 97 வயது மூதாட்டி. இவர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 38 வயது வாலிபர், மூதாட்டியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடவே, வாலிபர் ஓடி விட்டார். இதுகுறித்து மூதாட்டி காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com