என் மலர்
கோயம்புத்தூர்
- 50-க்கும் மேற்பட்ட தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தின.
- இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.
மேட்டுப்பாளயைம்,
கோவை மாவட்டம், அன்னூர் தாலுகாவில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் 50-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் புதுப்பாளையம், மத்திரெட்டிபாளையம், காலக்குறிச்சி ஆகிய பகுதிகளுக்கு வந்தன.
அங்கு இருந்த 50-க்கும் மேற்பட்ட தோட்டங்களுக்குள் புகுந்து, அங்கு விவசாயிகள் பயிரிட்டு இருந்த கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தின. இது அந்த பகுதியில் வசிக்கும் விவசாயிகளிடம் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே 5 கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள், புதுப்பாளையம் பாலம் அருகே திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் காட்டுப்பன்றிகளின் அட்டகாசத்துக்கு முடிவுகட்ட வேண்டும் என்று வனத்துறையை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுமுகை வனவர் மாதன், பசுர் ஊராட்சி தலைவர் வித்யாசுகுமார், சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது விவசாயிகள் கூறுகையில், "அன்னூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த 20 கிராமங்களில் 1000-க்கும் மேற்பட்ட காட்டுப்பன்றிகள் அங்குள்ள புதர்களில் பதுங்கி முகாமிட்டு உள்ளன.
அவை பயிர்களை அடிக்கடி சேதப்படுத்துகின்றன. மேலும் பொதுமக்கள், விவசாயிகளை தாக்க முயற்சிக்கின்றன. இதுகுறித்து பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
எனவே வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டுப் பன்றிகளை உடனடியாக சுட்டுக் கொல்ல வேண்டும். இல்லையெனில் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால், விரைவில் அன்னூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் வருகிற அக்டோபர் 2-ந் தேதி கிராம சபை மற்றும் ஊராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்ப டும்" என்றனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் வேணுகோபால் பேசுகையில்,"கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை, பெரியநாயக்கன் பாளையம், அன்னூர் ஆகிய காட்டுப் பகுதியில் காட்டுப்பன்றிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. அவை அடிக்கடி ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
வனப்பகுதியில் இருந்து 10 கி.மீ. தொலைவு வரை மட்டுமே காட்டுப்பன்றி உள்ளிட்ட வனவிலங்குகள் தோட்டங்களுக்கு வந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். ஆனால் தற்போது 30 கி.மீ. தொலைவையும் தாண்டி வந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம் என்றார்.
- முருகாணந்தம் அண்ணாமலையின் கை விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.
- அண்ணாமலையின் இடது கை ஆள்காட்டி விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.
பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில், தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், கடந்த வாரம் வால்பாறையில் அண்ணாமலை யாத்திரை மேற்கொண்டார். அப்போது வாகனத்தில் ஏறும் போது அண்ணாமலையின் வலது கை, கட்டை விரலில் அடிப்பட்டது.
வாகனத்தில் ஏறிய பிறகு, கட்டை விரலை உதறிய படி மைக் பிடித்து பேச ஆரம்பித்தார். கை விரலில் அடிப்பட்டதை அடுத்து, பா.ஜ.க. பொதுச் செயலாளர் முருகாணந்தம் கட்சி தொண்டர்களிடம் பேண்ட் ஏய்ட் வாங்கி வரச் சொன்னார். அடுத்த சில நிமிடங்களில் தொண்டர்கள் பேண்ட் ஏய்ட் வாங்கிவந்தனர்.
இதனிடையே பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தொண்டர்களிடையே உரையாற்ற துவங்கி விட்டார். இருந்த போதிலும், உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே, முருகாணந்தம் அண்ணாமலையின் கை விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார்.
ஆனால், இங்கு தான் டுவிஸ்ட் காத்திருந்தது. அண்ணாமலையின் வலது கை கட்டை விரலில் அடிப்பட்ட நிலையில், முருகாணந்தம் பதட்டத்தில் அண்ணாமலையின் இடது கை ஆள்காட்டி விரலில் பேண்ட் ஏய்ட் ஒட்டினார். இதற்கு அண்ணாமலை எதுவும் சொல்லாமல் அப்படியே இருந்தார். இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- நகராட்சி கமிஷனர் அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டினர்.
- பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
மேட்டுப்பாளையம்,
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்டங்களின் மையப்பகுதியாகவும், தமிழகம், கேரளா, கர்நாடக மாநில எல்லைப்பகுதியாகவும் மேட்டுப்பாளையம் உள்ளது. இங்கு உள்ள பஸ் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், உள்ளூர் பகுதிகளுக்கும் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
எனவே தினமும் ஆயிரக்கணக்கானோர் மேட்டுப்பாளையம் பஸ் நிலையம் வந்து வெளியூருக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
இந்தநிலையில் அந்த பஸ் நிலைய வளாகத்திற்குள் ஒருசிலர் வெளி வாகனங்களை நிறுத்தி சென்றனர். இதற்கு மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.
இருந்தபோதிலும் கோவை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வோரில் ஒரு சிலர், மேட்டுப்பாளையம் பஸ் நிலைய வளாகத்திற்குள் இருசக்கர வாகனத்தை காலையில் நிறுத்தி விட்டு, மாலையோ அல்லது இரவோ வந்து எடுத்து செல்கின்றனர். இதனால் அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள், மாணவ -மாணவிகள் நிற்க இடமின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி கமிஷனர் அமுதாவிற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. எனவே அவர் அதிரடியாக பஸ் நிலையத்திற்கு வந்தார். அவருடன் பொறியாளர் சுகந்தி மற்றும் நகராட்சி ஊழியர்களும் வந்திருந்தனர். அப்போது மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் வாகனங்கள் தடையை மீறி நிறுத்தப்பட்டு இருப்பது தெரியவந்தது. எனவே அவர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அனைத்து மோட்டார் சைக்கிள்களையும் சங்கிலயால் இணைத்து பூட்டு போட்டு பூட்டினார்.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் அமுதா கூறுகையில், பஸ் நிலைய வணிக வளாகங்களில் உள்ள கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு உள்ளே சென்று பொருட்களை வாங்கிவிட்டு மீண்டும் வாகனத்தை எடுத்துச் செல்ல வேண்டும். ஆனால் ஒருசிலர் காலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு, மீண்டும் மாலையோ அல்லது இரவோ வந்து வாகனத்தை எடுத்துச் செல்கின்றனர்.
இதனால் பேருந்து பயணிகளுக்கும், மாணவர்களுக்கும் இடையூறு ஏற்பட்டு உள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் பலமுறை எச்ச ரித்தும் தடையை மீறி வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர்.எனவே பஸ் நிலைய வளாகத்தில் நிறுத்தப்பட்டு உள்ள வாகனங்களுக்கு பூட்டு போட்டு உள்ளோம். சம்பந்தப்பட்டவர்கள் நேரடியாக வந்து உரிய அபராதம் செலுத்திய பின்னரே, வாகனங்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும். மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் பணிகள்தொடரும் என எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
- தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்
- போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை வெள்ளலூரில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு குப்பையை தரம் பிரித்து உரமாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது.இதற்காக ராட்சத எந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.
இங்கு கோண வாய்க்கால் பாளையத்தை சேர்ந்த சத்யா (வயது23) வேலை செய்து வருகிறார். இவர் இன்று காலை குப்பைகளை நசுக்கும் எந்திரத்துக்குள் சுத்தம் செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த மற்றொரு பணியாளர், சத்யா உள்ளே இருப்பதை கவனிக்காமல் எந்திரத்தின் சுவிட்ச்சை ஆன் செய்ததார். கண் இமைக்கும் நேரத்தில் சத்யாவின் இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி நசுங்கியது.
இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார். இதனைக் கேட்டவர்கள் உடனடியாக எந்திரத்தை அணைத்தனர். இதில் அவரது இரண்டு கால்களும் எந்திரத்துக்குள் சிக்கி தொடை வரை நசுங்கி சிதைந்தது.
உடனடியாக அவர்கள் இதுகுறித்து கோவை தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் உயிருக்கு போ ராடிய சத்யாவை கயிறு கட்டி மீட்டனர். பின்னர் அவரை சிகிச்சைக்காக சாய்பாபா காலனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இதுகுறித்து போத்தனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.
- சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோவை,
கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனித -வனவிலங்குகள் மோதல், பயிர் சேதம் தொடர்பான விவசாயிகள், வனத்துறை, மாவட்ட நிர்வாக சார்பில் முத்தரப்பு கூட்டம் கலெக்டர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடந்தது. மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் பழனிசாமி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து, விவசாய பயிர்களை சேதப்படுத்துவதால்' விவசாயிகளின் ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்து பயிர் செய்யும் பரப்பளவு எண்ணிக்கை 50 சதவீதத்துக்கு மேல் குறைந்து விட்டது. குறிப்பாக வனத்தையொட்டிய விளைநிலங்களில் எந்தவித விவசாயமும் கடந்த 6 ஆண்டுகளாக நடக்கவில்லை.
சேதப்படுத்தப்பட்ட விவசாய பயிர்களை வனத்துறையினரே ஆய்வு செய்து விவசாயிகளை அலை கழிக்காமல் உடனுக்குடன் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.
வனப்பகுதிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் அமைக்கப்பட்ட சேதமடைந்த அகழிகளை தூர்வாரி அதனை ஒட்டி சோலார் மின் வேலி அமைத்து விலங்குகள் விளைநிலங்களுக்குள் வருவதை தடுக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் விவசாயிகளை ஒருங்கிணைத்து அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களை "களிறு" விழிப்புணர்வு கூட்டம் ஏற்படுத்தப்பட்டு வந்தது. இக்கூட்டத்தின் மூலம் அரசுதிட்டங்களை விவசாயிகளுக்கு தெரிவி க்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது. இதுபோன்ற திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.
மனித விலங்கு மோதலை தடுக்க வனத்துறை அதிகாரிகள், வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகளை ஒருங்கிணைத்து பாதுகாப்பு குழு ஒன்றை அரசு சார்பில் உருவாக்க வேண்டும்.
வனவிலங்கு பிரச்சனை சம்பந்தமாக குறைகளை தீர்த்திட வனத்துறை சார்பில் மாதம் ஒரு முறை குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.
வனவிலங்குகளின் நடமாட்டத்தை கண்காணிக்க ரேடியோ காலர் பொருத்தும் திட்டம் நடைமுறையில் இல்லாததால் வனவிலங்கு களை கண்காணிக்க நவீன முறையில் புதிய திட்ட த்தை உருவாக்க அரசு முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும். வனப்பகுதிகளில் ஒட்டியுள்ள பகுதிகளில் வன அலுவலர்கள் வாகனங்கள் ரோந்து செல்வதற்கும் வன விலங்குகளை கண்காணிப்பதற்கும் பாதை வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும்.
வனவிலங்குகளுக்கு கோடைகாலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க பகுதி வாரியாக நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பராமரிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். வனபாதுகாப்பு சட்டத்தில் அதிகப்படியாக வனவிலங்குகளுக்கு கொடு க்கப்படும் முக்கியத்துவத்தை பரிசீலித்து சட்ட திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.
பயிர்களையும் உயிர்களையும் பாதுகாத்திட விவசாய நிலங்களில் சுற்றி அமைக்கப்படும் சோலார் மின் வேலிகளுக்கு 90 சதவீதம் மானியம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இதில் விவசாயிகள், வனத்துறையினர் கலந்து கொண்டனர்.
- சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது விபத்து.
- புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
சரவணம்பட்டி,
கோவை கணபதி மாம ரத்தோட்டத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவர் மாநாகராட்சி மேற்கு மண்டல உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மகன் சஞ்சித்விஷ்ணு(வயது18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
சஞ்சித் விஷ்ணு நேற்று வெளியில் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். கணபதி சத்திரோடு அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனை அருகே வந்த போது, எதிரே வந்த சரக்குலாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் பல த்த காயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சஞ்சித் விஷ்ணுவை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதா பமாக இறந்து விட்டார்.
இதுகுறித்து அவரது தந்தை நாகராஜ் கொடுத்த புகாரின் பேரில் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
விபத்து நடந்த அந்தப்பகுதி போக்குவரத்து நெருக்கடி நிறைந்த பகுதியாகும். இதனால் இங்கு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் அங்கு உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
- ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
- கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டுப்பாளையம்,
அன்னூர் அருகே காட்டம்பட்டி ஊராட்சியில் மொத்தம் 9 வார்டுகள் உள்ளது.
இதில் பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்தும் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.
இதனிடையே ஊராட்சிக்குட்பட்ட வரதயம்பாளையம் செங்காடு, காட்டம்பட்டி குளம், ரோஜா நகர், முதலிபாளையம் பட்டத்தரசி அம்மன் கோயில், கடத்தூர் ஆகிய இடங்களில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்ட இடம், கிணறு ஆகிய பகுதிகளில் மின் மோட்டாகளில் இருந்து காப்பர் வயர்களை மர்ம நபர்கள் வெட்டி திருடி எடுத்து சென்றனர்.
இதனை பார்த்த அப்பகுதியினர் ஊராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன், வார்டு உறுப்பி னர் லட்சுமிகாந்த் மற்றும் அன்னூர் போலீசார் நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
அப்போது ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் ஒயர்கள் திருடு போனது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஊராட்சி தலைவர் காயத்திரி பாலகிருஷ்ணன் அன்னூர் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து அன்னூர் போலீசார் இப்பகுதியி லுள்ள சி.சி.டி.வி கண்கா ணிப்பு காமிராக்கள் மூலம் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த 1 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் காப்பர் ஒயர்கள் திருடி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
சூலூர்,
பீடம் பள்ளி பகுதியில் குடிநீர் தேவைக்காக கீழ்நிலைத் தொட்டி வேண்டுமென சூலூர் எம்.எல்.ஏ.விடம் பொது மக்கள் மற்றும் ஊராட்சி தலைவர் குமரவேல் கோரிக்கை வைத்தனர்.
இதை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் நிதியில் இருந்து ரூ. 15 லட்சம் நிதியை சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி ஒதுக்கீடு செய்தார்.
இந்த கீழ்நிலை தொட்டிக்கான பணிகள் தொடக்க விழா நேற்று நடந்தது. அதோடு கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன் மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதியை பீடம் பள்ளி மயானம் செல்லும் பாதையை தார் சாலையாக மாற்ற ஒதுக்கீடு செய்துள்ளார் அதற்கான துவக்க பணிகள் இதொடக்க நிகழ்ச்சியும் நடந்தது.
நிகழ்ச்சியில் சூலூர் எம்.எல்.ஏ. வி.பி. கந்தசாமி, கோவை மாவட்ட ஊராட்சி தலைவர் சாந்திமதி அசோகன், அ.தி.மு.க. அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் தோப்பு அசோகன், பீடம் பள்ளி ஊராட்சித் தலைவர் குமரவேல், ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலட்சுமி, முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் குட்டியப்பன், இடம் பள்ளி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- கோவை மாநகர போலீசார் புதிய நடவடிக்கை
- ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.
கோவை,
கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.
வாடகைக்கு வண்டி ஓட்டுபவர்கள் ஓராண்டுக்குள் அபராத தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உடனடியாக அபராதம் செலுத்துவது இல்லை. வாகனத்ைத விற்கும்போதும், பெயர்மாற்றம் செய்யும்போது மட்டுமே நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் தற்போது வாகனஓட்டிகளிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
இதில் அபராதம் செலுத்துவோரின் செல்போன் எண், எந்த இடங்களில் விதிகளை மீறியதற்கான அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் நிலுவைத்தொகை பாக்கி விவரம் ஆகிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.
கோவையில் அபராத நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய நபருக்கு மேற்கண்ட சாப்ட்வேர் மூலம் செல்போன் அழைப்பு வரும். இதனை சம்பந்தப்ப ட்டவர் எடுத்தால், மறுமு னையில் பேசும் குரல்பதிவு, நீங்கள் இந்த-இந்த இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதம் விதிக்க ப்பட்டு உள்ளது.
உங்களின் ஒட்டுமொத்த அபராத நிலுவைத்தொகையை உடடியாக கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும். கோவை மாநகரில் செல்போன் எண்ணுக்கு குரல் பதிவை அனுப்பி அபராதம் வசூலிக்கும் முறையை அடுத்த சில நாட்களில் அமல்படுத்துவதென போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
- வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார்.
- சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் 45 வயது பெண். இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அவரது 14 வயது மகளுடன் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு வந்தார்.
பின்னர் அவர் குரும்பனூரில் தங்கி இருந்து பாக்கு உறிக்கும் வேலை செய்து வந்தார்.
இந்தநிலையில் 14 வயது சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த 20 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடை வில் காதலாக மாறியது.சம்பவத்தன்று சிறுமி அந்த பகுதியில் உள்ள மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கடத்தி சென்றார். நீண்ட நேரம் ஆகியும் கடைக்கு சென்ற மகள் திரும்பி வராததால் அவரை அவரது தாய் அக்கம் பக்கத்தில் தேடினார். ஆனால் சிறுமியை கண்டு பிடிக்க முடியவில்லை.
இது குறித்து சிறுமியின் தாய் தனது மகளை கண்டுபிடித்து தரும்படி மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது 14 வயது சிறுமியை வாலிபர் கடத்தி சென்றது தெரிய வந்தது. தற்போது போலீசார் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- இந்திய நூற்பாலை உரிமையாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
- பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்.
சூலூர்,
சூலூர் அருகே பாப்பம்பட்டி பிரிவில் இந்திய நூற்பாலை உரிமையாளர்கள் சங்கத்தின் 16-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
சங்கத்தின் தலைவர் ஜி சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் சண்முகம், கோபால்சாமி வேலுச்சாமி பாலகிருஷ்ணன், பிரபு முன்னிலை வகித்தனர்.செயலாளர் கே.ஆர்.சண்முகசுந்தரம் அனை வரையும் வரவேற்றார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
உயர்த்தப்பட்ட வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக பழைய வட்டி வீதமான 7.5 சதவீத அளவிற்கு குறைக்க வேண்டும்.
குறுகிய கால கடனான நிலவை தொகையை மீட்டெ டுத்து கொண்டு அக்கடனை ஏற்கனவே வழங்கியது போல் முழுவதுமாக மீண்டும் புதிய கடனாக வழங்க வேண்டும். இக்கட னுக்கு விடுமுறை காலமாக ஆறு மாதமும் அக்கடனை திருப்பி செலுத்த ஏழு வருடங்களும் மிகக் குறைந்த வட்டியில் வழங்க வேண்டும்.
நூற்பாலைத் தொழிலின் மந்தநிலையை கருத்தில் கொண்டு தற்போதுள்ள காலக்கடனை மறு சீரமைத்து 2 ஆண்டு கால அவகாசம் நீட்டித்து மத்திய அரசு வழங்க வேண்டும்.
நூல் மற்றும் துணி வகைகளை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு ஊக்குவிக்க தக்க நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அந்நிய நூல் மற்றும் துணிவகைகள் கட்டுப்பாடு இன்றி இறக்குமதியாவதை கண்காணித்து தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பஞ்சுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரியான 11 சதவீதத்தை மத்திய அரசு சூழ்நிலை கருதி முழுமையாக நீக்க வேண்டும்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் எம்.டி கட்டணம் 90 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.
நூற்பாலை தொழிலின் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உபயோ கப்படுத்தும் மின்சாரத்துக்கு ஏற்ப எம்டி கட்டணத்தை வசூலிக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.நூற்பாலைத் தொழில் 24 மணி நேரமும் மின்சாரம் நகரப்படும் தொழில் என்பதால் மாநில அரசு பசுமை எரிசக்தியை ஊக்குவித்து அதற்கு 15 சதவீத மூலதன மானியம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற்பட்டன. இதில் துணை செயலாளர்கள் சென்னியப்பன் பார்த்திபன் சவுந்தர், துணைத் தலைவர் பிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- இன்று அதிகாலை வனத்தை விட்டு ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வெளியேறியது.
- யானை பள்ளி சுற்றுச்சுவரை இடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வடவள்ளி,
ஆலாந்துறை அடுத்து முட்டத்து வயல் கிராமம் உள்ளது. இங்கு மலைவாழ் பழங்குடியினர் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
அங்கு மலைவாழ் பழங்குடியினர் மக்களின் குழந்தைகள் பயிலும் அரசு உண்டு உறைவிட பள்ளிக் கூடம் அமைந்துள்ளது.
இதுவனத்ைதயொட்டி பகுதி என்பதால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி இங்கு புகுந்து வருகின்றன. குறிப்பாக யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்த நிலையில் இன்று அதிகாலை வனத்தை விட்டு ஒற்றை ஆண் காட்டு யானை ஒன்று வெளியேறியது.
இந்த யானை ஊருக்குள் புகுந்து சுற்றி திரிந்தது. பின்னர் அங்குள்ள உண்டு உறைவிடப்பள்ளியின் அருகே சென்றது.
அங்கு பள்ளியின் 15 அடி உயர சுற்றுச்சுவரை உடைத்து தள்ளிவிட்டு பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது.
பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த யானை அங்கு இருந்த பொருட்கள் வைக்க கூடிய இடத்திற்கு சென்றது. பின்னர் கதவை உடைத்து உள்ளே இருந்த அரிசி, பருப்பு போன்ற பொருட்களை எடுத்து ருசித்து சாப்பிட்டது.
இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து காட்டு யானையை வனத்திற்குள் அனுப்பும் பணியில் ஈடுபட்டனர்.
யானை பள்ளி சுற்றுச்சுவரை இடித்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.






