search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து விதிகளை மீறினால் செல்போனுக்கு குரல்பதிவை அனுப்பி அபராதம் வசூல்
    X

    போக்குவரத்து விதிகளை மீறினால் செல்போனுக்கு குரல்பதிவை அனுப்பி அபராதம் வசூல்

    • கோவை மாநகர போலீசார் புதிய நடவடிக்கை
    • ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.

    கோவை,

    கோவை மாவட்டத்தில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுவோருக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். இதுதவிர சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் மூலமாகவும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கான ரசீதுகள் சம்பந்தப்பட்ட வாகனஓட்டியின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவல் மூலம் அனுப்பப்படுகிறது.

    வாடகைக்கு வண்டி ஓட்டுபவர்கள் ஓராண்டுக்குள் அபராத தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால் சொந்தமாக வாகனம் வைத்திருப்போர் உடனடியாக அபராதம் செலுத்துவது இல்லை. வாகனத்ைத விற்கும்போதும், பெயர்மாற்றம் செய்யும்போது மட்டுமே நிலுவையில் உள்ள அபராத தொகையை செலுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் கோவை மாநகர போலீசார் தற்போது வாகனஓட்டிகளிடம் உடனுக்குடன் அபராதம் வசூலிக்கும் வகையில், புதிய மென்பொருள் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.

    இதில் அபராதம் செலுத்துவோரின் செல்போன் எண், எந்த இடங்களில் விதிகளை மீறியதற்கான அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் நிலுவைத்தொகை பாக்கி விவரம் ஆகிய விவரங்கள் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது.

    கோவையில் அபராத நிலுவைத்தொகை செலுத்த வேண்டிய நபருக்கு மேற்கண்ட சாப்ட்வேர் மூலம் செல்போன் அழைப்பு வரும். இதனை சம்பந்தப்ப ட்டவர் எடுத்தால், மறுமு னையில் பேசும் குரல்பதிவு, நீங்கள் இந்த-இந்த இடங்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி உள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு இவ்வளவு தொகை அபராதம் விதிக்க ப்பட்டு உள்ளது.

    உங்களின் ஒட்டுமொத்த அபராத நிலுவைத்தொகையை உடடியாக கட்ட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியாகும். கோவை மாநகரில் செல்போன் எண்ணுக்கு குரல் பதிவை அனுப்பி அபராதம் வசூலிக்கும் முறையை அடுத்த சில நாட்களில் அமல்படுத்துவதென போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    Next Story
    ×