என் மலர்tooltip icon

    கோயம்புத்தூர்

    • நகர பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளுவது கிடையாது.
    • அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீ பாபர்வீன் தலைமை வகித்தார்.

    கூட்டத்தில் விவாதங்கள் தொடங்கியபோது சுனில் குமார், தனசேகர், சலீம் (அதிமுக): மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் கடந்த 1½ மாதமாக தூய்மை பணி சரிவர மேற்கொள்வது கிடையாது.

    இதுதொடர்பாக சுகாதார பணியாளர்கள் நடவடிக்கை எடுக்க கண்டுகொள்வது இல்லை. சுகாதார அதிகாரிகளிடம் பேசினால் அவர்கள் முறையாக பதில் அளிப்பது இல்லை.

    மேலும் அதிகாரிகள் இல்லாமல் நகராட்சி கூட்டம் நடத்த கூடாது. அதிகாரிகள், வார்டு உறுப்பினர்கள் அவர்களது வார்டு பணிகளை கூறினால் அவர்கள் அலட்சியமாக பதில் கூறி பணியை புறக்கணிக்கின்றனர். நகர பகுதிகளில் சரிவர குப்பைகள் அள்ளுவது கிடையாது.

    தலைவர்: நகராட்சி பொறியாளர், ஆணையாளர் கூட்டத்தில் பங்கேற்க முடியாமல் மேல் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ளனர்.

    அப்போது தலைவர் மெஹரீபாபர்வீன், துணை த்தலைவர் அருள்வடிவு ஆகியோரிடம் அதிமுக வார்டு உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    சிலர் தலைவர் மெஹரீ பாபர்வீன் அமர்ந்திருந்த நாற்காலி அருகே சென்று குப்பை எடுப்பது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து அங்கு வந்த தி.மு.க வார்டு உறுப்பினர்கள் ரவிக்குமார், ஸ்ரீராம் ஆகியோர் நகராட்சி தலைவர் மெஹரீபாபர்வீனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க கவுன்சிலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அங்கு நின்ற தி.மு.க வார்டு உறுப்பினர் ரவிக்குமார் ஆத்திரமடைந்து கூட்டரங்கில் இருந்த நாற்காலியை எடுத்து அ.தி.மு.க கவுன்சிலர்கள் மீது வீசினார்.

    மேலும் அங்கிருந்த மைக்கை உடைத்து தாக்க முயற்சி செய்தார். இதையடுத்து இரு தரப்பினர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நிலவியது.

    அப்போது அ.தி.மு.க நகர்மன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நகராட்சி கூட்டத்தில் இப்பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரி கூட்டஅரங்கில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து நகராட்சித் தலைவர் மெஹரீபாபர்வீன் கூட்டத்தின் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை முடித்து அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    ஆனால் அ.தி.மு.க வார்டு உறுப்பினர்கள் 9 பேரும் கூட்ட அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அதிமுக வார்டு உறுப்பினர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    • பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது.
    • பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் 15 வது மாநில மாநாடு கோவையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர்கள் முத்துசாமி மற்றும் கயல்விழி ஆகியோர் பேசுகையில், தமிழகத்தில் எப்போதெல்லாம் திமுக ஆட்சி இருக்கிறதோ அப்போதெல்லாம் பத்திரிகையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதாக தெரிவித்தனர்.



    இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், பொதுச் செயலாளர் பிரதீப் குமார், பொருளாளர் ராம்ஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.
    • புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருபவர் பாலமுருகன்(வயது39).

    இவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள சிக்கன் கடையில் மேலாளராக வேலை பார்த்து வருகிறேன்.

    கடந்த 1½ வருடங்களுக்கு முன்பு எங்கள் கடைக்கு சென்னை குறுக்குபேட்டையை சேர்ந்த செந்தில்மோகன் என்பவர் வந்தார்.

    அவர் தான் சென்னையில் சிக்கன் கடை வைத்து நடத்தி வருவதாகவும், எனக்கு மொத்தமாக சிக்கன் சப்ளை செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார். அதற்கான பணத்தை உரிய தவணையில் செலுத்தி விடுவதாகவும் தெரிவித்தார்.

    இதனை நம்பி நாங்கள் கடந்த 1½ வருடங்களுக்கு மேலாக 23 ஆயிரத்து 500 கிலோ சிக்கன் சப்ளை செய்தோம்.

    இதுவரை சப்ளை செய்த சிக்கனுக்கு ரூ.47 லட்சத்து 37 ஆயிரத்து 999 செந்தில்மோகன் தர வேண்டும். ஆனால் அவர் இதுவரை பணத்தை தரவில்லை.

    இதுகுறித்து அவரிடம் கேட்டால் விரைவில் தருகிறேன் என்றார்.

    இந்நிலையில், கடந்த 10 மாதமாக செந்தில்மோகன் சிக்கன் வாங்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த நான் சென்னைக்கு சென்று அவர் கூறிய இடத்திற்கு சென்றேன்.

    அப்போது அங்கு அவர் சொல்லிய சிக்கன் கடை இல்லை. மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவர் போனை எடுக்கவில்லை. அப்போது தான் அவர் ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்தது.

    எனவே சிக்கன் வாங்கி விட்டு ரூ.47.37 லட்சம் மோசடி செய்த செந்தில்மோகன் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் செந்தில்மோகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022-2023க்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது.
    • மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா அவுட்ரீச் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது.

    ஈஷா அவுட்ரீச் வழிகாட்டுதலுடன் இயங்கும் வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தின் 10 ஆம் ஆண்டு பொதுக் குழு கூட்டம், கோவை ஈஷா யோக மையத்தில் வெகு சிறப்பாக நடைப்பெற்றது.

    வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம், ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலுடன் தொடங்கப்பட்ட முதல் FPO நிறுவனமாகும். சத்குருவின் வழிகாட்டுதலின்படி கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் 2013 இல் தொடங்கப்பட்டது. 5859 ஏக்கர் பரப்பளவில் பயிரிடக்கூடிய நிலத்தை உள்ளடக்கிய இந்த நிறுவனத்தில் 1063 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர், அதில் 404 பேர் பெண் விவசாயிகள் மற்றும் 776 சிறு மற்றும் குறு விவசாயிகள் ஆவர்.

    இந்நிறுவனம் அதனுடடைய சிறந்த செயல்பாட்டிற்காக கடந்த நான்கு ஆண்டுகளாக தேசிய அளவில் பல்வேறு விருதுகளை பெற்று வருகிறது. குறிப்பாக அக்டோபர் 2023 இல் புதுடெல்லியில் நடைபெற்ற CII - FPO எக்ஸலன்ஸ் விருது விழாவில் இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) மூலம் 'மெம்பர்ஷிப் என்கேஜ்மென்ட் ' பிரிவில் சிறந்து விளங்கியதற்காக விருது வழங்கப்பட்டது.

    600க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற 10-ஆம் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் 2022-2023க்கான ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. அதில் இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் அதன் செயல்பாடுகளின் மூலம் ரூ.14.72 கோடி வருவாயை ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

    தேங்காய், மட்டை, காய்கறி, விவசாய இடுபொருள் அங்காடி, விற்பனை அங்காடி, போக்குவரத்து, சொட்டு நீர் பாசனம், தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்கள் என விவசாயிகளின் பல தரப்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து இந்த நிறுவனம் வருவாய் ஈட்டியுள்ளது. குறிப்பிடப்பட்ட இந்த ஆண்டில் இந்த நிறுவனம் அதன் விவசாயிகள் உற்பத்தி செய்த 1.02 கோடி தேங்காய், 156 டன் காய்கறிகள் மற்றும் 10.4 டன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை விற்பனை செய்துள்ளது.

    இந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் இதன் வருங்கால திட்டம் குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் திரு. குமார் பேசுகையில், "மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ஈஷா அவுட்ரீச் மூலம் ரூ. 1 கோடி மதிப்பிலான மண் பரிசோதனை ஆய்வகம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பயிர்களை பாதிக்கும் நோய்களைக் கண்டறியவும் மற்றும் வளர்ச்சி மேம்பாட்டிற்காகவும் பிரத்தியேக மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், "Fair trade certification" சான்றிதழ் பெறுவதற்கான வேலைகள் நடைப்பெற்று வருகிறது" என்றார்.

    மத்திய அரசின் 10,000 FPO க்களை உருவாக்கி ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் ஈஷா அவுட்ரீச் தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் 24 FPOக்களை ஆதரித்து ஊக்கப்படுத்தி வருகிறது. அந்த 24 FPO க்களுக்கும் முன்மாதிரி நிறுவனமாக வெள்ளியங்கிரி உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் செயல்படுகிறது.

    • கடந்த பல மாதங்களாகவே விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
    • உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன.

    மங்கலம்:

    கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய, பெரிய ஸ்பின்னிங் மில்கள் செயல்படுகின்றன. இத்தொழில்களை நம்பி பல லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

    கடந்த பல மாதங்களாகவே விசைத்தறி ஜவுளித்தொழில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. நிலையில்லாத பஞ்சு விலை, நூல் விலையால் ஸ்பின்னிங் மில்களை முறையாக இயக்க முடியாமல் உரிமையாளர்கள் தவிக்கின்றனர். உற்பத்தியையும் குறைத்து விட்டனர். சில மில்கள் இழுத்து மூடப்பட்டுள்ளன. அதேபோல் கூலி உயர்வு கிடைக்காதது, மின் கட்டண உயர்வு, பாவு நூல் சப்ளை இல்லாதது உட்பட பல காரணங்களால் 90 சதவீத விசைத்தறிகள் முடங்கியுள்ளன.

    கருமத்தம்பட்டி, சோமனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள மில்களில் உற்பத்தி செய்யப்படும் நூல் ரகங்கள், வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. இயல்பாக இருந்த நூல் ரகங்களின் விலை கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து வருகிறது. கடந்த மாதத்தில் இருந்த விலையை விட 20 சதவீதம் வரை குறைந்துள்ளது. நூல் ரகங்களின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால் மில் உரிமையாளர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

    இது குறித்து மில் உரிமையாளர் சந்திரன் கூறுகையில், தொடர்ந்து நூல் விலை சரிந்து வருவதால் உற்பத்தியை குறைந்துள்ளோம். ஒரு ஷிப்ட் மட்டுமே இயக்குகிறோம். ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட நூல் ரகங்களுக்கு உரிய விலை கிடைக்காமல் தேங்கியுள்ளது. தற்போதைய விலைக்கு விற்றால் நஷ்டம் தான் ஏற்படும். இதேபோல் விலை வீழ்ச்சி அடைந்தால் மில்லை இயக்க முடியாது என்றார்.

    கடந்த பல மாதங்களாக, துணி ரகங்களுக்கும் உரிய விலை கிடைக்காததால் பல கோடி மீட்டர் துணிகள் குடோன்களில் தேங்கியுள்ளன. ஜவுளி உற்பத்தியாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

    இது குறித்து ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், வெளிநாட்டு ஆர்டர்கள் கிடைத்தால் தான் இங்கு உற்பத்தியாகும் காடா துணிகள் விற்பனையாகும். ஆனால் வெளிநாட்டு ஆர்டர்கள் தற்போது சுத்தமாக இல்லை. வடநாட்டில் கேட்டாலும் ஆர்டர் இல்லை என்றுதான் கூறுகின்றனர். அதன் காரணமாக பல கோடி மீட்டர் துணி ரகங்கள் தேங்கி கிடக்கின்றன.

    வேறு வழியில்லாமல், பாவு நூல் சப்ளையை நிறுத்தி விட்டோம். தொழிலாளர்களிடம் தீபாவளி பண்டிகை முடிந்து வேலைக்கு வந்தால் போதும் என அனுப்பி விட்டோம். நஷ்டம் ஏற்படாமல் உரிய விலை கிடைக்கும் போது தான் துணிகளை விற்கும் நிலையில் உள்ளோம் என்றனர். விசைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள் முழுமையாக இயக்கப்படாததால், பல ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குடும்பத்தை நடத்த, கட்டட தொழில் உட்பட மாற்றுப் பணிகளை தேடி சென்றுவிட்டனர்.

    மொத்தத்தில் விசைத்தறி ஜவுளி தொழில், தற்போதைய நிலையில் கடும் நெருக்கடிகளில் சிக்கி தவிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொழிலில் ஏற்படும் வீழ்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றனர்.

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கத்தினர், மத்திய இணையமைச்சர் முருகனுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    விசைத்தறிகள் வாயிலாக கிராமப்புறங்களில் உள்ள பல லட்சம் ஏழை, எளிய குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். இந்திய அளவில் 40 சதவீத கிரே காடா துணி, கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் உற்பத்தியாகிறது. சாதா விசைத்தறியாளர்கள், மூன்றாண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வுக்காகவும், மின் கட்டணம் உயர்வு ஏற்படும்போதெல்லாம் மின்கட்டண குறைப்புக்காகவும் போராடி வருகின்றனர்.

    வட மாநிலங்களில் மட்டுமே இங்கு தயாராகும் காடா துணிகள் மதிப்பு கூட்டப்படுகின்றன. சிறு, குறு விசைத்தறியாளர்கள், உற்பத்தி செய்யும் குறைந்தளவு துணிகளை, வட மாநிலங்களில் நேரடியாக கொண்டு சென்று விற்க முடியாது. இடைத்தரகர்கள் வாயிலாக விற்கும் போது, குறைந்த விலைக்கே விற்க வேண்டியுள்ளது.ஏற்றுமதி தரம் வாய்ந்த துணிகளை உற்பத்தி செய்யவும், உற்பத்தியை அதிகரிக்கவும், சாதாரண விசைத்தறிகள் நவீனப்படுத்தப்பட வேண்டும்.

    சோமனூர் கிளஸ்டர் பகுதியில் ஜவுளிச்சந்தை அமைக்க வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதியும், மானியமும் வழங்க வேண்டும். அதன் வாயிலாக சாதாரண விசைத்தறிகளை நவீனப்படுத்தி கொள்ள முடியும். வருமானம் பெருகும். வாழ்வாதாரம் உயரும் என தெரிவித்துள்ளனர்.

    • தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.
    • கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் அருகே தென்பொன்முடியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    இப்பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி கல்வி முடித்து பட்ட படிப்புக்கு சென்று வருகின்றனர்.

    கடந்த 2003-ம் ஆண்டு இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

    இதில் இந்த பள்ளியில் 2003-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்து பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவ, மாணவிகள் பலரும் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் நண்பர்கள் சந்தித்துக் கொண்டதால் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் அந்த காலகட்டத்தில் தங்களுக்கு பாடம் எடுத்த ஆசிரியர், ஆசிரியைகளையும் வரவழைத்து அவர்களையும் கவுரப்படுத்தி, அவர்களிடம் வாழ்த்தும் பெற்று கொண்டனர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவர்கள், மாணவிகள் தங்கள் நண்பர்களிடம் பேசி தங்கள் மலரும் நினைவுகளை பகிர்ந்தனர்.

    அத்துடன் தங்கள் காலகட்டமான 90 காலகட்டத்தில் இருந்த அப்போதைய திண்பண்டங்களான ஆரஞ்சு மிட்டாய், பொரி உருண்டை, ஜவ்வு மிட்டாய், ஹார்லிக்ஸ் மிட்டாய், புளி மிட்டாய் என பல்வேறு விதமான மிட்டாய்களை ஒருவருக்கொருவர் ஊட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    மேலும் இந்த மிட்டாய்களின் சிறப்பினையும், தாங்கள் படித்த காலகட்டத்தில் நடந்த நிகழ்வுகளையும் தங்களது மனைவி மற்றும் பிள்ளைகளிடமும் பகிர்ந்து கொண்டனர்.

    அதனை தொடர்ந்து முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுடன் குழுப்புகைப்படமும் எடுத்தனர்.

    இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்கள், தங்கள் பள்ளியில் படித்து வரும் மாணவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் பொருட்டு ரூ.1½ லட்சம் மதிப்பிலான 3 வாட்டர் பில்டர் மெஷின்களையும் வழங்கினர்.

    அத்துடன் பள்ளி மைதானத்தை சீரமைத்து, விளையாட்டு உபகரணங்களும் வழங்கினர்.

    கடந்தாண்டு 11, 12-ம் வகுப்புகளில் பொது தேர்வில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டும் தெரிவிக்கபட்டது. 

    • மென்பொருள் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

    கோவை, 

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). இவர் அந்த பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று மதியம் வியாபாரம் நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சிண்ணியம்பாளையம் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.5 ஆயிரம் பறித்து சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் பிரகாசிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

    கோவை சின்னியம் பாளையம் வீரப்பன் (22), காளப்பட்டி மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீரியம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் வாகனத்தை வழிமறித்து வீரப்பனிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல் போனை பறித்து தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்த பொதுமக்கள்
    • வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடத்திலும் பட்டா வழங்க கோரிக்கை

    கோவை,

    அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவையினர் புஷ்பானந்தம் தலைமையில் பொதுமக்கள் வாயில் கருப்பு துணி கட்டி மனு அளிக்க வந்தனர்.

    அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

    கோவை தடாகம் ரோட்டில் உள்ள வேலாண்டிபாளையம், கே.என்.ஜி.புதூர், துடியலூர், பன்னிமடை, கணுவாய், சின்ன தடாகம், ஆனைகட்டி, சிவாஜி காலனி போன்ற பகுதியை சேர்ந்த பொது மக்கள் 100 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மனு அளித்தோம். ஆனால் 10 பேருக்கு மட்டுமே பட்டா வழங்கப்பட்டது.

    மீதமுள்ளவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும், தற்போது வரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே கோவை வடக்கு வட்டம் 24 . வீரபாண்டி கிராமத்தில் புறம்போக்கு இடங்கள் உள்ளன. எனவே இடங்களை தேர்வு செய்து மீதமுள்ளவர்களுக்கு இலவச பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.
    • மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    கோவை.

    கோவை உக்கடத்தில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இந்த மார்க்கெட்டிற்கு தமிழகத்தில் உள்ள தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. தினமும் காலை 4 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விற்பனை நடைபெற்று வருகிறது.

    இங்கு கோவை மாநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு வந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கி செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்களில் மீன் மார்க்கெட்டில் வழக்கத்தை விட கூட்டம் அலைமோதும்.

    இந்த மீன் மார்க்கெட் அருகே புதர் மண்டிய பகுதி காணப்படுகிறது. இந்த பகுதியில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

    அங்குள்ள பகுதிகளில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. இதை அங்கு மீன் கடை நடத்தி வருபவர்கள் பார்த்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. அங்கு மாநகராட்சி அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    • 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாக புகார் தெரிவித்தார்.
    • சொத்துகளை மீட்டு தரக்கோரி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    கோவை,

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாயகி. இவருக்கு 2 மகன்கள், 5 மகள்கள் உள்ளனர். இவரது சொத்துகளை தனது 2 மகன்களும் அபகரித்துக்கொண்டு தன்னை கவனிக்காமலும், 5 மகள்களுக்கு பங்கு கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், சொத்துகளை மீட்டு தரக்கோரி ரங்கநாயகி கலெக்டரிடம் கண்ணீர் மல்க மனு அளித்தார்.

    இதேபோல் மோப்பரிபாளையம் பேரூராட்சி எம் பாப்பம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் இன்று அளிக்க வந்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நாங்கள் இந்த பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். பேரூராட்சியால் எங்கள் பகுதிக்கு கடந்த 2013 ம் ஆண்டு தார் சாலை அமைக்கப்பட்டது. தனிநபர் ஒருவர் இதனை ஆக்கிரமித்து கற்களை கொட்டி வைத்து செல்ல வழி இல்லாமல் செய்துள்ளார். இது குறித்து அதிகாரிகளை சந்தித்து பலமுறை மனு அளித்தோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலை ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர்.

    • கஸ்தூரி தனது குடும்பத்தினருடன் மதுரைக்கு சென்றார்.
    • கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டது.

    கவுண்டம்பாளையம்,

    கோவை துடியலூர் தொப்பம்பட்டி ஆனந்தா கார்டன், நியூ எக்ஸ்டென்ஸ் பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி(வயது65). ஓய்வு பெற்ற ஆசிரியை.

    இவரது கணவர் இறந்து விட்டார். இதையடுத்து, இவர் தனது மகன் மற்றும் மருமகளுடன் அந்த பகுதி யில் வசித்து வருகிறார்.

    கடந்த 26-ந் தேதி கஸ்தூரி தனது மகன் மற்றும் மருமகளுடன் தங்க ளது சொந்த ஊரான மதுரை கே.கே.நகரில் நடந்த உறவினர் ஒருவரின் வீட்டு சுப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார்.

    அங்கு நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நேற்றிரவு தங்கள் வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சியான கஸ்தூரி மற்றும் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ திறந்து கிடந்ததுடன் அதில் இருந்த துணிகள் ஆங்காங்கே சிதறி கிடந்தன.

    இதையடுத்து பீரோவில் வைத்துள்ள நகைகள் இருக்கிறதா என கஸ்தூரி தேடி பார்த்தார். அப்போது பீரோவில் வைத்திருந்த 14 பவுன் வைர நெக்லஸ், 7½ பவுன் தங்க நெக்லஸ், கம்மல், வளையல் உள்பட மொத்தம் 28½ பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது.

    இவர்கள் ஊருக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் அதன்பின்னர் உள்ளே நுழைந்து, நகையை கொள்ளையடித்து சென் றது தெரியவந்தது.

    இதுகுறித்து கஸ்தூரி துடியலூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரை ந்து வநது விசாரணை நடத்தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த தடயங்களும் சேகரி க்கப்பட்டது. மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடிய நாய் யாரையும் கவ்விபிடிக்கவில்லை.

    இதுகுறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகையை கொள்ளையடித்து சென்ற வர்களை தேடி வருகின்ற னர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • பலவீனத்தை பலமாக்குவதே நமது இலக்கு
    • பிரம்மகுமாரிகள் அமைப்பை சேர்ந்த ஷிவாணி பேச்சு

    கோவை,

    கோவையில் உள்ள தனியார் ஓட்டலில், பிக்கி புளோ கோயம்புத்தூர் சார்பில் ஆன்மிக கலந்துரை யாடல் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு ஆன்மிக தலைவர்கள் கலந்து கொண்டு பேசினர்.

    பிரம்மகுமாரிகள் அமைப்பை சேர்ந்த சகோ தரி கோதை பேசுகையில், சூரிய ஒளி முன்னால் உள்ள மெழுகுவர்த்தியாக நான் உணர்கிறேன். சகோதரி ஷிவாணி நொடிப்பொ ழுதில் முடிவை எடுக்கும் திறன் கொண்டவர். இந்த அரங்கில் அவர் நுழைந்த தும், அமைதியும் தெய்வீக மும் நிரம்பியது. அவருடன் நடந்த ஒவ்வொரு உரையா டலும் புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

    பிரம்மகுமாரிகள் அமை ப்பை சேர்ந்த சகோதரி பி.கே ஷிவாணி பேசியதா வது:- எனது மனதின் அரசன் நான். ஒவ்வொரு எண்ணமும் எனது விருப்ப த்தின் பேரிலேயே உருவாக வேண்டும். அமைதியும், நிலைத்தன்மையையும் கொண்டுள்ளேன். செல் போனின் ஓசை என்னை எவ்விதத்திலும் சிரமப்ப டுத்தாது. நான் ஒரு ஒளி மிகுந்த வலிமையான இல்லம். மக்களை வலிமை ப்படுத்தும் வலிமை என க்குள் உண்டு. இது தான் எனது ஆளுமை.

    வெற்றி பெற்ற மாணவர்கள், தோல்வியுற்ற மாணவர்கள் என முத்திரை குத்துகிறோம். நாம், வெற்றி பெறும் மக்களின் திறனை வைத்து முன்னுரிமை அளிக்கிறோம். பலவீ னத்தை பற்றி கவலைப்படு வதில்லை. பலவீனத்தை பலமாக்குவது தான் நமது இலக்காக இருக்க வேண் டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இதில் எப்.ஐ.ஓ., கோவை யின் தலைவர் மற்றும் கங்கா ஸ்பைன் மருத்துவ மனையின் தலைவர் ரமா ராஜசேகர் மற்றும் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×