என் மலர்
கோயம்புத்தூர்
- இன்று 2-வது நாளாக தொடர்கிறது
- நகராட்சி கமிஷனர் பேச்சுவார்த்தை
மேட்டுப்பாளையம்,
மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் மெஹரீபாபர்வீன் தலைமை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும், அ.தி.மு.க. கவுன்சிலர் தனசேகரன் எழுந்து, இந்த கூட்டத்தை யார் நடத்துவது. மாத கடைசியில் கூட்டம் நடத்துகிறீர்கள். ஆனால் நகராட்சி ஆணையர், நகராட்சி பொறியாளர்கள் வரவில்லை. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார். எனவே கூட்டத்தை நடத்தக்கூடாது என்றார்.
இதேபோல் மற்றொரு அ.தி.மு.க கவுன்சிலர், தனது வார்டில் 2 மாதமாக குப்பைகள் அகற்றப்படவில்லை என தெரிவித்தார். இதற்கும் யார் பதில் அளிப்பார் என கேட்டு, கூட்டத்தை நடத்தக்கூடாது என்றனர்.
தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துங்கள் என தெரிவித்தனர். இதனால் தி.மு.க., அ.தி.மு.க கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி ஒருவருக்கொருவர் தாக்கி கொள்ளவும் முற்பட்டனர்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நகராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது, தி.மு.க. கவுன்சிலர் ரவிக்குமார் அங்கிருந்த நாற்காலியை தூக்கி அ.தி.மு.க கவுன்சிலர்களை நோக்கி வீசினார். இதனால் இருதரப்புக்கும் கைகலப்பு ஏற்படும் நிலை உருவானது.
இதையடுத்து நகராட்சி தலைவர் மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து சென்றனர்.
இந்த நிலையில் அ.தி.மு.க கவுன்சிலர்கள், நாற்காலியை தூக்கி வீசிய ரவிக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகரமன்ற கூட்ட மைய அரங்கில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதற்கிடையே இதுபற்றிய தகவல் அறிந்ததும் ஏ.கே.செல்வராஜ் எம்.எல்.ஏ விரைந்து வந்து, அ.தி.மு.க கவுன்சிலர்களிடம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார். தொடர்ந்து இது தொடர்பாக போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
அ.தி.மு.க கவுன்சிலர்களின் உள்ளிருப்பு போராட்டம் இரவிலும் தொடர்ந்தது. இரவில் அவர்களுடன் நகராட்சி ஆணையாளர், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தொடர்ந்து கவுன்சிலர்கள் இரவு முழுவதும் விடிய, விடிய உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலக கூட்டரங்கிலேயே இரவில் ஓய்வெடுத்தனர். இன்று காலை 2-வது நாளாக அ.தி.மு.க கவுன்சி லர்களின் போராட்டம் நடந்தது. இதன் காரணமாக மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.
- கணவருடன் கருத்து வேறுபாடு எதிரொலி
- அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள எஸ்.ஆர்.எம்.வீதியை சேர்ந்தவர் முரளி.
இவரது மனைவி செல்வி (வயது42). இவர்களுக்கு சஞ்சய்ராம் (14) என்ற மகனும், ஆத்மிகா(5) என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில் செல்வி, தனது கணவரிடம், நம் குழந்தைகளுடன் நாம் தனிக்குடித்தனம் செல்லலாம் என கூறியுள்ளார்.
அதற்கு முரளி, தனது தாயை தனியாக விட்டு, நான் வர முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
வீட்டில் உள்ள பெரியவர்கள் அவர்களை சமாதானம் செய்து வந்தனர். இந்த நிலையில் சம்பவத்தன்றும் கணவன், மனைவிக்கு இடையே இது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த முரளி, தனிக்குடித்தனம் வர மறுப்பு தெரிவித்து விட்டு வெளியில் சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது குழந்தைகளுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.
அதன்படி வீட்டில் இருந்த எலி மருந்தை எடுத்து, டீயில் கலந்து தனது குழந்தைகளுக்கு கொடுத்தார். அதன்பின்னர் தானும் அதனை அருந்தினார். சிறிது நேரத்தில் 3 பேரும் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.
சிறிது நேரம் கழித்து வீட்டிற்கு வந்த முரளி, மனைவி மற்றும் குழந்தைகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தார்.
அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
- மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி பெற்றோர் புகார் அளித்தனர்.
- விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
மேட்டுப்பாளையம் எல்.எஸ்.புரத்தை சேர்ந்தவர் விக்னேஷ்(வயது24). கூலித்தொழிலாளி. இவர் வேலைக்கு செல்லும் சமயங்களில் பஸ் நிலையத்தில் வைத்து சிறுமியை பார்த்ததாக தெரிகிறது.
அடிக்கடி பார்த்ததால், சிறுமியுடன் நட்பை ஏற்படுத்தி கொண்டார். அதனை தொடர்ந்து அவருடன் நட்பாக பழகி வந்தார். ஒரு நாள், சிறுமியிடம், காதலிப்பதாக கூறியுள்ளார். ஆனால் சிறுமி எதுவும் கூறவில்லை. இருந்தபோதிலும் அவர் சிறுமியிடம் காதலிக்க கூறி வந்தார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று, விக்னேஷ் சிறுமியை சந்தித்து நான் உன்னை காதலிக்கிறேன். நாம் எங்காவது சென்று விடலாம் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார்.
அதன்படி கடந்த 1½ மாதங்களுக்கு முன்பு வீட்டில் இருந்த சிறுமி பள்ளி செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அக்கம்பக்கம் தேடி பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து அவர்கள் மேட்டுப்பாளையம் போலீசில் மகளை கண்டுபிடித்து தரும்படி புகார் அளித்தனர்.
போலீசார் சிறுமி மாயம் என வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சிறுமியை கண்டுபிடிப்பதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமியை, விக்னேஷ் காதலிப்பதாக கூறி கடத்தி சென்றது தெரியவந்தது.
ஆனால் அவர்கள் எங்கு இருக்கின்றனர் என்பது தெரியாமல் இருந்தது.
விக்னேஷின் செல்போன் எண்ணை வைத்து, தேடி வந்தனர். அவரது செல்போன் சிக்னல் ஒவ்வொரு நேரமும் பல்வேறு இடங்களை காட்டியதால் போலீசாருக்கு குழப்பம் ஏற்பட்டது.
இந்த நிலையில் விக்னேஷ் சிறுமியுடன், திருப்பூரில் பதுங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வ நாயகம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு ஒரு வீட்டில் பதுங்கி இருந்த விக்னேஷ் மற்றும் சிறுமியை மீட்டனர்.
பின்னர் அவர்களை மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.
அப்போது, விக்னேஷ் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை சிறுமியும் நம்பியுள்ளார்.
இதை தனக்கு சாதமாக பயன்படுத்தி, விக்னேஷ், சிறுமியிடம் வெளியில் செல்லலாம் என்று கூறி வீட்டை விட்டு அழைத்து சென்றுள்ளார்.
அவர் ஒரே இடத்தில் இருக்காமல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற இடங்களுக்கு சிறுமியை அழைத்து சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை கைது செய்து, ஜெயிலில் அடைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் சிறுமியை மீட்டு, அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.
- கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர்.
- வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோட்டூர் அடுத்த கரியாஞ் செட்டிபாளையத்தை சேர்ந்தவர் நாராயணன்(வயது47). இவரது மனைவி ஈஸ்வரி(44).
இவர்களுக்கு கீர்த்தனா என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் முடிந்து, தனது கணவர் மற்றும் குழந்தையுடன் கோவில்பாளையத்தில் வசித்து வருகிறார்.
நாராயணனும், அவரது மனைவி ஈஸ்வரியும் இந்த பகுதியில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி 2 பேரும் தனியார் வங்கி ஒன்றில் வீடு கட்ட லோன் வாங்கினர். அந்த பணத்தை வைத்து அந்த பகுதியில் சொந்தமாக வீடு ஒன்றையும் கட்டியுள்ளனர்.
இதுதவிர மேலும் 2 தனியார் வங்கிகளிலும் இவர்கள் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது.
முதலில் இவர்கள் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி பணத்தை முறையாக செலுத்தி வந்தனர். ஆனால் நாட்கள் செல்ல, செல்ல இவர்களால் வங்கியில் வாங்கிய கடனுக்கான வட்டி தொகையை திருப்பி செலுத்த முடியவில்லை என தெரிகிறது.
இதையடுத்து வங்கியில் இருந்தும் இவர்களை தொடர்பு கொண்டு பணத்திற்கு வட்டி கட்டுமாறு கூறியதாக தெரிகிறது. பணத்தை கட்ட முடியாததால் கணவன், மனைவி 2 பேரும் கடந்த சில நாட்களாகவே மனவேதனையுடன் காணப்பட்டனர்.
சம்பவத்தன்று வாழ்க்கையில் விரக்தியடைந்த கணவன், மனைவி 2 பேரும் தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தனர். அதன்படி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து 2 பேரும் குடித்தனர். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விட்டனர்.
இதற்கிடையே தாய், தந்தையை பார்ப்பதற்காக கீர்த்தனா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் தாய், தந்தை 2 பேரும் மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியானார். அவர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு அவர்களை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
வங்கியில் வாங்கிய கடனை கட்டமுடியாததால், கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலைக்கு முயற்சி செய்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் புறப்பட தயாராகி இருந்தது.
- 2 ரெயில்களும் சென்ற பிறகு, ரெயில்வே ஊழியர்கள் உடைந்த ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பத்தை சரி செய்யும் பணியை தொடங்கினர்.
கவுண்டம்பாளையம்:
கோவை-மேட்டுப்பாளையம் ரெயில்வே வழித்தடத்தில் துடியலூர் வெள்ளகிணர் பிரிவில் இருந்து உருமாண்டம்பாளையம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது.
இந்த வழியாக நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில், மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில்கள், நெல்லை-மேட்டுப்பாளையம் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் நேற்று இரவு உருமாண்டம்பாளையம் ரெயில்வே கேட் மூடப்பட்டிருந்தது. அப்போது மேட்டுப்பாளையத்தில் இருந்து சரவணம்பட்டிக்கு ஒரு லாரி வந்தது. லாரி, வெள்ளக்கிணறு ரெயில்வே கேட்டை கடக்கும் போது எதிர்பாராதவிதமாக கேட்டின் மீது மோதியது.
இதில் ரெயில்வே கேட்டின் சிக்னல் கம்பம் உடைந்தது, அத்துடன் ரெயில்வே கேட்டும் பாதி உடைந்து, அதில் இருந்து தீப்பொறிகள் கிளம்பியது. இதை அங்கிருந்த ரெயில்வே ஊழியர்கள் பார்த்து, அதிர்ச்சியாகினர்.
உடனடியாக அந்த கேட்டுக்கான அனைத்து லைன்களையும் துண்டித்தனர். மேலும் இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு பயணிகள் ரெயில் புறப்பட தயாராகி இருந்தது.
ரெயில்வே கேட் உடைந்த சம்பவம் குறித்து அங்கு தெரிவிக்கப்பட்டதால், உடனடியாக ரெயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
இதையடுத்து ரெயில்வே போலீசார் மற்றும் ஊழியர்கள் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் தற்காலிகமாக உடைந்த ரெயில்வே கேட் பகுதியில் உடைந்த கம்பங்களை எடுத்து வைத்து வாகனங்கள் ரெயில்வே கேட்டை கடந்துவிடாத வண்ணம் பாதுகாப்பு பணியிலும் ஈடுபட்டனர்.
அதன்பிறகு அங்கிருந்து மேட்டுப்பாளையம் ரெயில் நிலையத்திற்கு தகவல் கொடுத்து, ரெயிலை இயக்கி வரும்படி அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஒரு மணி நேரம் தாமதமாக மேட்டுப்பாளையம்-கோவை பயணிகள் ரெயில் புறப்பட்டு கோவை வந்தது. சம்பவ இடமான வெள்ளக்கிணர் பிரிவின் அருகே வந்த போது ரெயிலை மெதுவாக இயக்கி வந்தனர். இதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து 10 மணிக்கு நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயிலும் புறப்பட்டு சென்றது.
2 ரெயில்களும் சென்ற பிறகு, ரெயில்வே ஊழியர்கள் உடைந்த ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பத்தை சரி செய்யும் பணியை தொடங்கினர். இரவோடு, இரவாக பணிகளை துரிதப்படுத்தி, ரெயில்வே கேட் மற்றும் சிக்னல் கம்பம் சரி செய்யப்பட்டது.
ரெயில்வே கேட் மீது லாரி மோதிய விவகாரத்தில் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
- கலெக்டர் பங்கேற்காததால் எம்.எல்.ஏ.க்கள் ஆதங்கம்
- கோவை எம்.பி.யிடம் நேரடியாக குற்றம்சாட்டினர்
கோவை,
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
இதில் பி.ஆர் நடராஜன் எம்.பி., மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கோவை மாவட்ட எம்.எல்.ஏ.க்கள்,மேயர் மற்றும் துணை மேயர் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கோவை மாந கராட்சி மற்றும் மாவட்ட அளவில் நடைபெற்றுள்ள வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் இனி மேற்கொள்ளப்பட உள்ள பணிகள் குறித்தும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
வழக்கமாக இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆனைமலை பகுதியில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொள்வதற்காக சென்றிருப்பதால் இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
இதனால் கோவை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் ஆகியோர் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாதது குறித்து முகம் சுழித்து கொண்டனர்.
முக்கியமான கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொள்ளாதது கண்டனத்திற்குரியது என்பது போல் பேசினர். அவர்களிடம் நாடாளுமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே ஆனைமலை பகுதியில் நடைபெறும் முக்கியமான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்கு சென்றதால், அவர் இதில் கலந்து கொள்ள வில்லை என தெரிவித்தார்.
இருப்பினும் கோவை சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளாததால் தங்களுடைய கேள்விகளுக்கு யார் பதில் அளிப்பார்கள் எனவும் தங்களது தேவைகளை யாரிடம் கூறுவது எனவும் கோபித்துக் கொண்டனர்
- வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
- சோலையார் அணையில் 95 அடி உயரம் தண்ணீர் உள்ளது
வால்பாறை,
கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அங்கு கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. எனவே அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் சிரமப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் வால் பாறை, சோலையார்அணை, சோலையார், கவர்கல், நல்லகாத்து, பன்னிமேடு, கருமலை, அக்காமலை, ஊசிமலை, நடுமலை, புது தோட்டம், ரொட்டிக்கடை, ஆகிய எஸ்டேட் பகுதிகளில் லேசாக மழை பெய்யத் தொடங்கியது.
பின்னர் கனமழையாக வெளுத்து வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான காலநிலை நிலவுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் பலத்த மழையால் ஆறுகளில் தண்ணீர்வரத்து அதிகரித்து வருகிறது.
வால்பாறையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியான சோலையார் அணையில் தற்போது நீர்வரத்து உயர்ந்து காணப்படுகிறது. 165 அடி உயர அணையில் தற்போது 95 அடி உயரம் தண்ணீர் உள்ளது.அணையின் நீர் இருப்பு 2446.31 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான தண்ணீர் வெளியேற்றம் 418. 69 கன அடியாக உள்ளது.
வால்பாறை சுற்று வட்டார பகுதியில் பதிவான மழை அளவு விவரம்:
வால்பாறை: 7 மி.மீ, சின்கோனா- 6 மி.மீ, சோலையார் அணை- 9 மி.மீ. வால்பாறை பகுதியில் அதிகபட்சமாக சின்ன கல்லார் பகுதியில் 17 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகத்தில் அதிசயம்
- 45-வது நாளில் வடமாநில சாமியார்கள் பங்கேற்பு
சூலூர்,
சூலூர் அருகே தென்னம்பாளையத்தில் ஜெய்ஹிந்த் பாரத பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளை சார்பில் உலக நன்மைக்காக 45 நாள் மகா சகஷ்ர சண்டி யாகம் நடைபெற்று வருகிறது. இந்த யாகத்தின் ஒரு பகுதியாக தென்னம்பாளையத்தை சேர்ந்த முருகேசன் என்ற பக்தர் இலந்தை முள் படுக்கையில் தினமும் ஒரு மணி நேரம் படுத்து யாகத்தினை நடத்தி வருகிறார்.
விழாவின் நிறைவில் பசு, குதிரை ஆகியவை யாக குண்டத்தினை வலம் வர மேள, தாளங்களுடன் பூர்ணாகுதி நடைபெற்றது. 45-வது நாளில் வட நாட்டில் இருந்து சாமியார்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த யாகத்தின் மூலம் எதிரிகள் அழிந்து உலக மக்கள் நலமுடன் வாழ்வர் என தெரிவிக்கப்பட்டது. இந்த யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- விரும்பிய படிப்பை படிக்க முடியாததால் வேதனை
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவை,
திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் ரம்யா(வயது17).
இவர் பொள்ளாச்சியில் உள்ள தனியார் என்ஜினீ யரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
ரம்யா விவசாயம் தொடர்பான படிப்பை படிக்க விரும்பினார். ஆனால் அவரை அவரது பெற்றோர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து விட்டனர்.
இதன் காரணமாக ரம்யா கடந்த சில நாட்களாக படிப்பில் நாட்டம் இல்லாமல் மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று கல்லூரியில் இருந்த அவர் கழிவறைக்கு சென்றார். அங்கு வைத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்து எலி மருந்தை சாப்பிட்டார்.
பின்னர் வகுப்பறையில் வந்து அமர்ந்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த பேராசிரியர்கள் உடனடியாக ரம்யாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு டாக்டர்கள் ரம்யாவை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ரூ.49.36 லட்சம் அபராதம்- வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
- சோதனைச்சாவடி எல்லையில் தீவிர கண்காணிப்பு
கோவை,
கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவுப்படி, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் க.க.சாவடி சோதனைச் சாவடி அதிகாரிகள், எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இன்றி செல்லும் வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்கின்றனர். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி, உரிய அபராதம் விதித்து வருகின்றனர்.
எவ்வித நெருக்கடிக்கும் ஆட்படாமல், தயவுதாட்சன்யமன்றி இந்த அதிரடி நடவடிக்கைகயை எடுத்து வருகின்றனர்.
நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக கடந்த ஜூலை மாதம் 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.26.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
நடப்பு மாதம் இதுவரை 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 123 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.49.36 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதுபற்றி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் விவரம், கனிம வளத்துறை அதிகாரிகளால் க.க.சாவடி சோதனைச் சாவடிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.
அதனை பார்வையிட்டு, கனிம வளங்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இச்சோதனைச் சாவடியை பொறுத்தவரை, சரக்கு வாகனங்கள், கனிம வளங்களை ஏற்றிச்செல்வது தொடர்பாக எவ்வித வாகன பைலட்களும் இங்கு வருவதில்லை.
அதுபோன்ற நபர்களால் எவ்வித தொந்தரவும் இச்சோதனைச் சாவடிக்கு ஏற்படவில்லை. இங்குள்ள அதிகாரிகள், எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.
கூடுதல் எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், முறையாக எடை போடப்பட்டு, அவ்வாகனங்களுக்கு பி.ஓ.எஸ் எந்திரம் வழியாக இணக்க கட்டணம் (அபராதம்) விதிக்கப்படுகிறது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- என்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு சென்றதால் பரபரப்பு
- வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வடக்கிப்பாளையத்தை சேர்ந்த 17 வயது சிறுமி.
இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நேரில் சந்தித்தும் காதலை வளர்த்து வந்தனர்.
சம்பவத்தன்று வீட்டில் சிறுமி தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் சிறுமியிடம் திரு மணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவரை கேரளாவுக்கு கடத்தி சென்றார். வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் சிறுமி இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தும் எந்த பலனும் இல்லை.
அப்போது சிறுமி அவரது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு தான் கேரள மாநிலம் வடக்கஞ்சேரிக்கு வாலிபருடன் வந்து விட்டதாகவும், தன்னை யாரும் தேட வேண்டாம் என கூறி விட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆசை வார்த்தை கூறி சிறுமியை கேரள மாநிலத்துக்கு கடத்தி சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.
- கணவன்-மனைவி இடையே தகராறு எதிரொலி
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
கோவை,
கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரத்தை சேர்ந்தவர் சந்தோஷ். கட்டிட தொழிலாளி.
இவரது மனைவி தமிழ ரசி(வயது26). இவர்களுக்கு டெசிகா(4), பூமிகா(2) என 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
சந்ேதாஷ் தினசரி மது குடித்து விட்டு தான் வீட்டி ற்கு வருவார். அவர் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து கொண்டு இருந்தார்.
இதனை அவரது மனைவி கண்டித்தார். அப்போது கணவன்-மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் மனைவியிடம் அப்படிதான் குடிப்பேன் என கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்றார்.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தமிழரசி 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்வது என முடிவு செய்தார். அதன்படி சாணிப்பவுரை கரைத்து முதலில் தனது 2 குழ ந்தைகளுக்கும் கொடுத்தார். பின்னர் அவரும் குடித்தார். சிறிது நேரத்தில் 3 பேரும் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர்.
இரவு வீட்டிற்கு வந்த சந்தோஷ் குழந்தைகள் மற்றும் மனைவி ஆகியோர் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் 3 பேரையும் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.
அங்கு 3 பேரையும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.






