search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக கோவையில் 4 மாதத்தில் 123 வாகனங்கள் பறிமுதல்
    X

    கேரளாவுக்கு அதிக பாரம் ஏற்றிச்சென்றதாக கோவையில் 4 மாதத்தில் 123 வாகனங்கள் பறிமுதல்

    • ரூ.49.36 லட்சம் அபராதம்- வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
    • சோதனைச்சாவடி எல்லையில் தீவிர கண்காணிப்பு

    கோவை,

    கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனிம வளங்கள் கடத்தி செல்லப்படுவதாகவும், நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் பாரம் ஏற்றிச் செல்லப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

    இதையடுத்து, கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி உத்தரவுப்படி, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் மற்றும் க.க.சாவடி சோதனைச் சாவடி அதிகாரிகள், எல்லைப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    உரிய ஆவணங்கள் இன்றி செல்லும் வாகனங்களை அதிரடியாக பறிமுதல் செய்கின்றனர். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு, மோட்டார் வாகன சட்டப்படி, உரிய அபராதம் விதித்து வருகின்றனர்.

    எவ்வித நெருக்கடிக்கும் ஆட்படாமல், தயவுதாட்சன்யமன்றி இந்த அதிரடி நடவடிக்கைகயை எடுத்து வருகின்றனர்.

    நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட, அதிக பாரம் ஏற்றிச் சென்றதாக கடந்த ஜூலை மாதம் 64 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ.26.14 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    ஆகஸ்ட் மாதம் 30 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.11.60 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. செப்டம்பர் மாதம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.7.76 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நடப்பு மாதம் இதுவரை 9 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.3.86 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 மாதங்களில் 123 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.49.36 லட்சம் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. இதுபற்றி வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறிய தாவது:- கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் விவரம், கனிம வளத்துறை அதிகாரிகளால் க.க.சாவடி சோதனைச் சாவடிக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்படுகிறது.

    அதனை பார்வையிட்டு, கனிம வளங்கள், வாகனங்களில் ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. இச்சோதனைச் சாவடியை பொறுத்தவரை, சரக்கு வாகனங்கள், கனிம வளங்களை ஏற்றிச்செல்வது தொடர்பாக எவ்வித வாகன பைலட்களும் இங்கு வருவதில்லை.

    அதுபோன்ற நபர்களால் எவ்வித தொந்தரவும் இச்சோதனைச் சாவடிக்கு ஏற்படவில்லை. இங்குள்ள அதிகாரிகள், எவ்வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல், அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி வருகின்றனர்.

    கூடுதல் எடை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், முறையாக எடை போடப்பட்டு, அவ்வாகனங்களுக்கு பி.ஓ.எஸ் எந்திரம் வழியாக இணக்க கட்டணம் (அபராதம்) விதிக்கப்படுகிறது. தொடர்ந்து கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×