என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீன் வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் கைது
    X

    மீன் வியாபாரியிடம் வழிப்பறி செய்த 2 சிறுவர்கள் கைது

    • மென்பொருள் நிறுவன ஊழியரிடம் செல்போன் பறிப்பு

    கோவை,

    கோவை உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 31). இவர் அந்த பகுதியில் மீன் கடை நடத்தி வருகிறார். அவர் நேற்று மதியம் வியாபாரம் நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் சிண்ணியம்பாளையம் பகுதிக்கு சென்றார்.

    அப்போது அங்கு இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி, ரூ.5 ஆயிரம் பறித்து சென்றனர். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்த 2 சிறுவர்கள் பிரகாசிடம் வழிப்பறி செய்தது தெரியவந்தது. அவர்களை பீளமேடு போலீசார் கைது செய்தனர்.

    கோவை சின்னியம் பாளையம் வீரப்பன் (22), காளப்பட்டி மென் பொருள் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று இரவு வேலை முடித்து இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றார்.

    அப்போது வீரியம்பாளையம் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் வாகனத்தை வழிமறித்து வீரப்பனிடம் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள செல் போனை பறித்து தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக பீளமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×