என் மலர்
சென்னை
- சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
- வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:
சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் வீட்டிற்கு மர்மநபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விஜய் வீட்டில் இன்று அதிகாலை வெடிகுண்டு வெடிக்கப்போவதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த மிரட்டலை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் விஜய் வீட்டில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்துள்ளது.
இதையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீப காலமாக அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் சம்பவம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
- 41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார்.
- பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக போலீசார் பொதுச்செயலாளர் என்.ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது வழக்குப்திவு செய்துள்ளனர்.
இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
41 பேர் பலியான சம்பவத்தைத் தொடர்ந்து கடந்த வாரம் விஜய் உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் நிதி உதவியும் அறிவித்தார். பலியானோர் குடும்பத்தை விரைவில் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வருவதாகவும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் விரைவில் நேரில் சந்திக்க இருக்கும் நிலையில் கடந்த 6-ந்தேதி மாலை 4.30 மணியளவில் பலியானோர் குடும்பத்தினருடன் விஜய் வீடியோ காலில் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
கூட்ட நெரிசலில் பலியான தனுஷ்குமார் அம்மா, தங்கை ஹர்ஷினியுடன் வீடியோ காலில் பேசிய விஜய், "நடக்க கூடாத நிகழ்வு நடந்து விட்டது. எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாத இழப்பு. எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு துணை நிற்பேன். விரைவில் உங்களை சந்திப்பேன்" என தனுஷ்குமார் தாயார் மற்றும் உறவினர்களிடம் சுமார் 20 நிமிடங்கள் விஜய் பேசியுள்ளார்.
தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பலியானோர் குடும்பத்துடன் வீடியோ காலில் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் 2-வது நாளாக தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் பேசியுள்ளார்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடுபத்தினர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறிய விஜய், விரைவில் நேரில் வந்து சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க காவல்துறை அனுமதி கிடைத்ததும் விரைவில் நேரில் சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
- 12-வது புரோ கபடி லீக் போட்டி சென்னையில் நடந்து வருகிறது.
- இன்று நடந்த ஆட்டத்தில் புனேரி பல்தான் அணி வெற்றி பெற்றது.
சென்னை:
12 அணிகள் பங்கேற்றுள்ள 12-வது புரோ கபடி லீக் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.
இன்று நடந்த போட்டியில் புனேரி பல்தான், யு மும்பா அணிகள் மோதின.
இதில் சிறப்பாக ஆடிய புனேரி பல்தான் 37-27 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் புனேரி பல்தான் அணி 2வது இடத்தில் நீடிக்கிறது. தபாங் டெல்லி முதல் இடத்தில் உள்ளது.
மற்றொரு போட்டியில் தெலுகு டைட்டன்ஸ் அணி 46-29 என்ற புள்ளிக் கணக்கில் அரியானா ஸ்டீலர்ஸ் அணியை வீழ்த்தியது.
- “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நாளை 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
- உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை சென்னையில் நடைபெறும் இடங்கள் குறித்து பார்க்கலாம்..
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (09.10.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-14ல் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, சிஎஸ்ஐ சர்ச் அருகில் உள்ள விளையாட்டு மைதானம், மாதவரம் மண்டலம் (மண்டலம்-3), வார்டு-30ல் ரெட்டேரி, ஜவஹர்லால் நேரு 200 அடி சாலையில் உள்ள உமாயா மஹால், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-37ல் வியாசர்பாடி, எம்.கே.பி நகர் 3வது பிரதான சாலையில் உள்ள அரசினர் மேல்நிலை பள்ளி, அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-86ல் அயப்பாக்கம், ஐ.சி.எப். காலனியில் உள்ள ஶ்ரீ வாரு பார்த்தசாரதி பேலஸ், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம்-8), வார்டு-101ல் கீழ்பாக்கம், விளையாட்டு திடல் தெருவில் உள்ள ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்-9), வார்டு-123ல் கே.பி.தாசன் தெருவில் உள்ள எஸ்.ஐ.ஈ.டி. திருமண மண்டபம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம்–10) வார்டு-131ல் டாக்டர் அம்பேத்கர் சாலையில் உள்ள சமுதாய கூடம், வளசரவாக்கம் மண்டலம் (மண்டலம்-11), வார்டு-152ல் ஆற்காடு சாலையில் உள்ள மண்டல அலுவலகம், ஆலந்தூர் மண்டலம் (மண்டலம்-12), வார்டு-167ல் நங்கநல்லூர், 100 அடி சாலையில் உள்ள ஸ்கேட்டிங் மையம், அடையாறு மண்டலம் (மண்டலம்-13), வார்டு-179ல் பெசன்ட் நகர், மீன் சந்தை அருகில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம்-14), வார்டு-188ல் மடிப்பாக்கம், பாலையா கார்டன், பஜனை கோயில் தெருவில் உள்ள ருக்மணி மஹால் ஆகிய 11 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
- சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
- மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சென்னை மாநகரப் பேருந்துகளில் 10.40 கோடி பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளதாக மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதில், சராசரியாக நாளொன்றுக்கு 34.70 லட்சம் பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
பண பரிவர்த்தனை மூலம் 3,57,52,241 பேர் பயணம் செய்துள்ளனர்,
மகளிர் விடியல் பயணம் மூலம் 3,97,16,550 பேர் பயணம், டெபிட்கிரெடிட் வாயிலாக 3,996 பேர், UPI வாயிலாக 21,31,351 பேர் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
சிங்கார சென்னை பயண அட்டை மூலம் 6,71,431 பேர், சென்னை ஒன் மொபைல் செயலி மூலம் 37,993 பேர்,
மாணவர்கள் கட்டாமில்லா பேருந்து பயண அட்டை மூலம் 1,19,28,220 , மாதாந்திர சலுகைப் பயணச்சீட்டுகள் மூலம் 1,38,54,947 பேர் பயணித்துள்ளனர்.
- சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன.
- மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர்.
நோயாளிகளை மருத்துவ பயனாளிகள் என அழைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணைக்கு நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஆட்டோ கண்ணாடியைத் திருப்பினால் ஆட்டோ எப்படி ஓடும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே?
தமிழகத்தின் அரசு மருத்துவமனைகளில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகள் இல்லை, முறையான லேப் வசதிகளும் மருந்துகளும் கிடைப்பதில்லை, சிறு மழை பெய்தாலும் மேற்கூரை ஒழுகுகிறது நோயாளிகளை வெள்ளம் சூழ்கிறது, சில மருத்துவமனைகளில் தெரு நாய்கள் சாவகாசமாக சுற்றித் திரிகின்றன, டார்ச் வெளிச்சத்தில் வைத்தியம் பார்க்கப்படுகிறது, மருத்துவர் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர், தரமற்ற சிகிச்சைகளால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன, இதற்கெல்லாம் என்ன தீர்வு என்று கேட்டால், நோயாளிகளை இனி "மருத்துவப் பயனாளிகள்" என அழையுங்கள் என்று அரசாணை வெளியிட்டு தனது வழக்கமான மடைமாற்று அரசியலைக் கையிலெடுத்துள்ளது இந்த திமுக அரசு. இதெல்லாம் என்ன பிழைப்பு?
ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் அரசின் அனைத்துத் துறைகளையும் அங்குலம் அங்குலமாக சிதைத்து சீரழித்துவிட்டு, தேர்தல் நெருங்கும் சமயத்தில் கவர்ச்சிகரமாகப் பெயர்களை மாற்றி "பேச் ஒர்க்" செய்யும் உங்களை மக்கள் அத்தனை எளிதாக மன்னித்துவிடுவார்களா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.
- சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் உத்தரவு.
முதலமைச்சர் அறிவிப்பின்படி தமிழ்நாட்டில் குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள சாதிப் பெயர்களை நீக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதி திராவிடர் காலனி, ஹரிஜன் குடியிருப்பு, வண்ணான்குளம் போன்ற பெயர்களை தவிகர்க்கப்பட வேண்டும்.
பறையர் தெரு, சக்கிலியர் சாலை போன்ற பெயர்களை நீக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தெருக்கள் மற்றும் சாலைகளுக்கு திருவள்ளூவர், கபிலர், பாரதியார், பாரதிதாசன், தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் பெயர்களையும், குளம் மற்றும் நீர் நிலைகளுக்கு ரோஜா, மல்லி, முல்லை ஆகிய பூக்களின் பெயர்களை வைக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
- முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
- இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட நீதிபதி நியமனம்.
காவலர்கள் பணிக்கு தேர்வானவர்கள் குறித்த இறுதிப்பட்டியலை 30 நாளில் வெளியிட தமிழ்நாடு சீருடை பணியாளர் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
121 எஸ்ஐ பணியிடம், 129 தீயணைப்புத்துறை அதிகாரிகள் காலி பணியிடங்களுக்கு தேர்வானர்கள் பட்டியலை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் அறிவிப்பு வெளியிட்டு தேர்வு நடத்தப்பட்டு 2024 ஜனவரியில் தற்காலிக தேர்வு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது.
காவலர்கள் பணித்தேர்வில் இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவிலலை என புகார் எழுந்தால் திருத்தி முறையாக வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட பட்டியல் 2024 அக்டோபரில் வெளியிடப்பட்ட நிலையில் முதல் பட்டியலில் இருந்த பல பெயர்கள் இல்லாததால் வழக்கு தொடரப்பட்டது.
இடஒதுக்கீட்டை முறையாக பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஜம்மு ஐகோர்ட் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி நியமிக்கப்பட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி தயாரித்த பட்டியல் முறையாக இல்லை; மீண்டும் தேர்வு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆணையம் முறையிட்டது.
இந்நிலையில், தமிழில் தேர்வெழுதியோருக்கு முன்னுரிமை, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றியுள்ளதால் நீதிபதி தயாரித்த பட்டியலை வெளியட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திண்டுக்கல், தேனி, திருச்சி, கரூர், திருப்பூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் நாளை மறுநாள் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதன்படி, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 11-ந்தேதி 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதன்படி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டையில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
வரும் 12-ந்தேதி 18 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. அதன்படி, கோவை, நீலகிரி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது.
- அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ராஜ் மோகன் கூறியிருப்பதாவது:-
வேதனையில் இருந்து மீள முடியவில்லை.. முடியாது என்றே தோன்றுகிறது. அதே சமயம் உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து, அவர்களின் வலியில் பங்கெடுத்துக் கொள்வதாலேயே இந்த அமைதி.
இந்த அமைதியை பயன்படுத்தி என் மீது பரப்பப்படும் அரசியல் அவதூறுகளை, வதந்திகளை, வன்மங்களை, வெறுப்பை நம்ப வேண்டாம். அத்தனை கல்லடிகளையும் நான் தாங்க தான் வேண்டும்.
நீதிக்கான முன்னெடுப்புகள் நெடியது. பாதிக்கப்பட்டவர்களோடு வாழ்நாள் முழுக்க பயணிப்பதும் அவர்களுக்கு நீதி பெற்றுதருவதுமே 41 உயிர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி. அதில் கவனம் செலுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு சவரன் தங்கம் விலை காலையில் ரூ.800 உயர்ந்தது.
- தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
தங்கத்தின் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து உள்ளது. நேற்று முன்தினம் ரூ.89 ஆயிரத்துக்கு விற்பனையான ஒரு சவரன் தங்கம் நேற்று ஒரே நாளில் ரூ.600 உயர்ந்து ரூ.89 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. அதன்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.11 ஆயிரத்து 125-ல் இருந்து ரூ.75 உயர்ந்து கிராம் ரூ.11 ஆயிரத்து 200-க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்ந்து ரூ.90 ஆயிரத்து 400-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.11,300-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று 2-வது முறையாக விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் விலை காலையில் ரூ.800 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.680 உயர்ந்துள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 உயர்ந்து ரூ.91 ஆயிரத்து 080-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.11 ஆயிரத்து 385-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார்.
- அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
சென்னை:
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ளன. இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'உடன் பிறப்பே வா' என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த சந்திப்பின்போது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு முக்கிய ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார்.
நேற்று அவர் மதுரை தெற்கு மற்றும் சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கட்சி நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என கேட்டறிந்தார். தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றும், அரசின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த நிலையில், 'உடன் பிறப்பே வா' நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் தென்காசி தொகுதி தி.மு.க. நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றது. தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு ஆகியவை தொடர்பாக அவர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.






