என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது.
    • நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு பாலாற்று குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிக்குட்பட்ட 9,10-வது வார்டு பகுதி மேடான இடம் ஆகும். அதிக அழுத்தத்தில் தண்ணீர் வரும் போது குடிநீர் குழாய்கள் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வருகிறது. பெரியநத்தம், தட்டான்லை பகுதி, காட்டான் தெரு உள்ளிட்ட பகுதிகளில் குழாய்களில் ஏற்பட்ட உடைப்பால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பும் இந்த பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஆங்காங்கே தண்ணீர் ஆறாக ஓடியது. இதனை சரிசெய்ய நகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடி க்கை எடுப்ப தில்லை என்று பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். உடைந்த குழாயை சரிசெய்ய 3 நாட்கள் வரை ஆவதால் குடிநீருக்கு கஷ்டப்படும் நிலை நீடித்து வருவதாக அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பழைய குழாய்களை அகற்றி விட்டு அனைத்து வார்டுகளிலும் தரமான குடிநீர் குழாய்கள் மற்றும் பழவேலி பாலாற்று பகுதியில் உள்ள நீர் இறைக்கும் எந்திரத்தை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நிர்வாகம் ஊழியர்கள் கவனித்து முறையாக குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் மற்றும் நகராட்சி ஆணையர் ஆகியோருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.
    • குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு நகராட்சி 27-வது வார்டு பகுதியில் உள்ள குண்டூர் ஏரி ரூ.3 கோடி மதிப்பில் தூர்வாரப்பட்டு கரைகள் சீரமைக்கப்பட்டு உள்ளது. 30 ஏக்கராக இருந்த இந்த ஏரி தற்போது 17 ஏக்கராக சுருங்கி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த ஏரிக்கரையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகட்டி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி தொகையை முறையாக செலுத்தி 53 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அவர்களை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் செங்கல்பட்டு நகராட்சி கூட்டம் நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் சவுந்தர் ராஜன் முன்னிலை வகித்தார் கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க.கவுன்சிலர்கள் பானுப்பிரியா, சிந்தியா சுரேஷ், பவித்ரா சிவராஜன் சரிதாகுமார் ஆகியோர் தரையில் அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குண்டூர் ஏரிக்கரையில் வசிப்பவர்களை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கோஷங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    நகர மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன், ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.கவு ன்சிலர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் நகராட்சி கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

    • பிரவீன் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.
    • நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    திருப்போரூர்:

    தாழம்பூர் அருகே உள்ள மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் லோகநாதன் என்கிற பிரவீன் (வயது20). இவர் இன்று காலை தாழம்பூர் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.

    நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் இருந்தார். மேலும் அவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன.

    ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவருடன் கடைசியாக சென்ற நண்பர்கள் குறித்தும் போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த வாலிபர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இன்னொரு வாலிபரும் பலத்த காயம் அடைந்தார்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    செங்கல்பட்டு கோர்ட்டு அருகில் 'ஜூஸ் கோர்ட்' என்ற பெயரில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை உள்ளது. இந்த கடையில் இன்று காலை 10.30 மணி அளவில் கோர்ட்டுக்கு வந்திருப்பவர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் என பலர் குளிர்பானங்களை வாங்கி குடித்துக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு வந்த மர்மகும்பல் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த வாலிபர் ஒருவரை குறிவைத்து திடீர் தாக்குதலில் ஈடுபட்டது. வாலிபரின் மீது சராமரியாக நாட்டு வெடிகுண்டுகளும், பெட்ரோல் குண்டுகளும் வீசப்பட்டன.

    இதில் வாலிபர் அங்கேயே சுருண்டு விழுந்தார். அப்போது மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் கொலை வெறியுடன் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் கீழே விழுந்து கிடந்த வாலிபரை சரமாரியாக வெட்டினர்.

    இதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் இன்னொரு வாலிபரும் பலத்த காயம் அடைந்தார். அவரும் ரத்த வெள்ளத்தில் அருகில் கிடந்தார்.

    பட்டப்பகலில் நடந்த இந்த தாக்குதல் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியது. கடையில் ஜூஸ் குடித்துக்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு நாலாபுறமும் சிதறி ஓடினார்கள்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் செங்கல்பட்டு டவுண் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். ஜூஸ் கடை உடனடியாக மூடப்பட்டது.

    கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காயம் அடைந்த வாலிபர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கொலையுண்ட வாலிபர் யார்? என்பது பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் அவர் யார்? என்பது அடையாளம் தெரிந்தது.

    தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரை சேர்ந்த லோகேஷ் என்பவரை கொலை செய்திருப்பது தெரியவந்தது.

    கொலையுண்ட லோகேஷ் அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவர் மீது 2 கொலை வழக்குகளும், 4 வழிப்பறி வழக்குகளும் உள்ளன. இதனால் பழிக்கு பழி வாங்கும் வகையில் அவரது எதிரிகள் கூலிப்படையை வைத்து தீர்த்துக் கட்டி இருப்பதாக கூறப்படுகிறது.

    காயம் அடைந்த நபர் யார் என்பது தெரியவில்லை. வழக்கு விசாரணைக்காக கோர்ட்டுக்கு வந்த போது லோகேஷ் தீர்த்துக்கட்டப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    அவரை கொலை செய்த கும்பல் திட்டம் போட்டு கோர்ட்டு அருகில் வைத்தே இந்த துணிகர கொலை சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். அவர்கள் யார்? என்பது பற்றிய விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் புதுச்சேரியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பலே கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கும் தகவல் மட்டும் தெரியவந்துள்ளது. அவர்கள் எதற்காக லோகேசை கொலை செய்தார்கள்? என்பது தெரியவில்லை.

    இதுதொடர்பாக செங்கல்பட்டு டி.எஸ்.பி. பரத், டவுண் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தனிப்படைகள் அமைத்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டுப்பார்த்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.
    • வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.

    மாமல்லபுரம்:

    சர்வதேச காற்றாடி திருவிழா ஆகஸ்டு மாதம் 12ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இரண்டாவது ஆண்டாக இந்த திருவிழா மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

    காற்றாடித் திருவிழாவில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.

    தாய்லாந்து, அமெரிக்கா, மலேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.

    வெளிநாடுகளில் நடப்பதைப் போல ராட்சத உருவங்களில் பாராசூட்களுக்கு பயன்படுத்தும் நைலான் மெட்டிரியலில் இந்தக் காற்றாடிகள் பறக்கவிடப்பட உள்ளன.

    வெளிநாடுகளில் டிராகன், யானை, குதிரை போன்ற உருவங்கள், கார்ட்டூன் கேரக்டர்கள் உள்ளிட்ட காற்றாடிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் வகையில் பல வண்ணங்களில் 4 நாட்கள் காற்றாடி திருவிழா நடைபெற உள்ளது.

    3 அடி முதல் சுமார் 20 அடி வரையிலான காற்றாடிகள் மாமல்லபுரத்தில் பறக்கவிடப்படும் என சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஆனந்த கிருஷ்ணன் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.
    • ஆனந்த கிருஷ்ணன் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தற்கொலை செய்து கொண்டார்.

    செங்கல்பட்டு:

    மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் நகை கடை மற்றும் திருமண மண்டபம் வைத்துள்ளார்.

    தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தனக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது தொடர்பாக மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
    • திட்டப்பணி ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    தாம்பரம்:

    சென்னையில் கடந்த 2015-ம் ஆண்டு பலத்த மழை பெய்த போது தாம்பரம், முடிச்சூர், பெருங்களத்தூர் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஏரிகளில் இருந்து வெளியேறிய தண்ணீர் குடியிருப்புகளை சூழ்ந்து நின்றது.

    இதைத் தொடர்ந்து புறநகர் பகுதிகளில் மழை வெள்ள தடுப்பு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தனர். மேலும் அடயாறு ஆற்றின் கரையை அகலப்படுத்தி உயர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த நிலையில் இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளில் இருந்து வெளியே றும் உபரி நீரை அடையாறு ஆற்றுக்கு திருப்பி விடும் வகையில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனால் தாம்பரம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ஏரிகளில் இருந்து வெளியேறும் உபரி நீரை கால்வாய் அமைத்து முடிச்சூர் சந்திப்பு வரை கொண்டு சென்று அடையாறு ஆற்றில் கலக்க முடிவு செய்து உள்ளனர். இதற்காக முடிச்சூர் சந்திப்பு வரை சுமார் 2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்க நீர் வளத்துறை திட்டமிட்டு உள்ளது.

    இதற்கான திட்டப்பணி ரூ.80 கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் இந்த பணிகளை தொடங்க அரசிடம் அனுமதி கோரப்பட்டு உள்ளது. அரசின் அனுமதி கிடைத்ததும் பணிகள் உடனடியாக தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இரும்புலியூர், பீர்க்கன்கரணை ஏரிகளின் உபரி நீரை அடையாறு ஆற்றில் இணைக்கும் வகையில் முடிச்சூர் சந்திப்பு வரை சுமார்2 கி.மீட்டர் தூரத்துக்கு கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. தர்காஸ் சாலை அருகே அடையாறு ஆற்றில் இந்த உபரி நீர் சேரும். 1,200 கன அடி தண்ணீர் செல்லும் வகையில் இது அமைக்கப்படும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை வெள்ளப் பேரிடர் தடுப்பு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதன் மூலம் தாம்பரம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளப் பெருக்கு குறையும் என்று எதிர் பார்க்கிறோம். மேலும் வெள்ளப் பெருக்கை தடுக்கும் வகையில் கால்வாயின் சில பகுதிகளில் வெள்ள தடுப்பு சுவர்கள் கட்டவும் திட்ட மிடப்பட்டு இருக்கிறது.

    வடகிழக்கு பருவ மழைக்கு முன்னர் அவசர கால பணியாக இந்த திட்டத்துக்கு அரசின் அனுமதி கோரப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.
    • படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே நெல்லையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சின் பின்னால் குறுகிய இடைவெளியில் திருவண்ணாமலையில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. முன்னால் சென்று கொண்டிருந்த பஸ்சின் டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.

    அப்போது திருவண்ணாமலையில் இருந்து வந்த பஸ் முன்னால் சென்ற பஸ் மீது மோதியது.

    இதில் பஸ்சின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த அசோக்குமார் (45) படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பஸ்களில் பயணம் செய்த 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த படாளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியவாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • பழக்கடைகளின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • கடையின் பூட்டை உடைத்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    கூடுவாஞ்சேரி:

    செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே ஏராளமான பழக்கடைகள் உள்ளன. இந்த நிலையில் நேற்று முன்தினம் பழக்கடைகளை பூட்டிக்கொண்டு வழக்கம் போல் கடைக்காரர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர்.

    மறுநாள் கடையை திறப்பதற்காக வந்தபோது அடுத்தடுத்து இருந்த பழக்கடைகளின் இரும்பு ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் கல்லாப்பெட்டியில் பணம் இல்லாததால் கடையில் இருந்த ஆப்பிள், ஆரஞ்சு உள்ளிட்ட பழங்களை திருடி சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பழக்கடைக்காரர்களிடம் நடந்த சம்பவத்தை பற்றி விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள காட்சியின் அடிப்படையில் கடையின் பூட்டை உடைத்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.
    • 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    மதுராந்தகம்:

    செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு வி.வி. சாய் பிரணீத் உத்தரவிட்டதன் பேரில் மதுராந்தகம் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சிவசக்தி மேற்பார்வையில் மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் தனிப்படை அமைத்து மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் தொடர்ந்து வழிபறியில் ஈடுபட்ட நபர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யனார் கோவில் ஜங்ஷன் அருகே இரவு நேரங்களில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சேதுபதி (வயது 23), மதுரை மாவட்டத்தை சேரிந்த அபிஷேக்(20), மதுராந்தகத்தை சேர்ந்த லோகேஸ்வரன் (23), சின்னா என்ற சரண் (22) ஆகியோரை மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மோகன்ராஜ். இளங்கோவன், குப்புசாமி மற்றும் போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். பின்பு அவர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். இதைதொடர்ந்து அவர்களிடம் இருந்து 4 பட்டாகத்தி, 6 செல்போன்கள், 5 இருசக்கர வாகனங்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • செவ்வாய் சந்தை செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது.
    • வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றம் எம்.என்.குப்பம் பகுதியில் 50 ஆண்டிற்கு முன்பு துவங்கப்பட்ட பாரம்பரிய "செவ்வாய் சந்தை", செங்கல்பட்டு மாவட்ட சுற்று வட்டார பகுதி மக்களிடம் பெயர் பெற்று வந்தது. இன்று அது பெயரளவில் மட்டுமே இயங்கி வருகிறது.

    முன்பு போல் மாடுகள் ஏலம், கோழி விற்பனை, கிராமத்து விளையாட்டு பொருட்கள், மளிகை, காய்கறி, பழங்கள், தின்பண்டங்கள் என பலவகை பொருட்கள் வருவதில்லை., தற்போது இங்கு மீன் கருவாடுகள், மாடுகள் மட்டுமே குறைந்த அளவில் விற்கப்படுகிறது. அதுவும் போதிய அளவில் லாபத்தை தருவதில்லை என வெளியூர்களில் இருந்து வரும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இந்த பாரம்பரிய சந்தை மீண்டும் பிரபலமாக, அதை விரிவாக்கம் செய்து, வியாபாரிகள் வெயில், மழையில் பொருட்களை பாதுகாக்க கூறை, கழிப்பறை, வாகனம் நிறுத்தும் இடம், உள்ளிட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி கொடுத்தால் இங்கு இன்னும் கூடுதலாக வெளியூர் வியாபாரிகளும், பொதுமக்களும் வருவார்கள் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

    • விபத்தில் தயாளன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    விழுப்புரம் மாவட்டம் தொரப்பி கிராமத்தைச் சேர்ந்த தயாளன் (வயது 24) என்பவர் சென்னை கிண்டியில் உள்ள கூரியர் அலுவலகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஓட்டுனராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இவர் தனது சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னைக்கு செல்ல, மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வந்தார்.

    அப்போது செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றம்பள்ளி பஸ் நிலையம் அருகே வந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் தயாளன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×