என் மலர்
செங்கல்பட்டு
- படுகாயம் அடைந்த 4 பேரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மதுராந்தகம்:
சென்னை, மதுரவால், கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் முத்துதுரை (வயது 50). இவரது மனைவி தங்க மேகலா (40). இவர்களது மகள்கள் முத்து ராதா (16), அக்ஷயா(13). இவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு செல்வதற்காக இன்று அதிகாலை காரில் புறப்பட்டனர். காரை டிரைவர் ஒருவர் ஓட்டினார்.
இன்று அதிகாலை 5.30 மணியளவில் கார் மதுராந்தகம் அருகே அச்சரப்பாக்கம் புறவழிச் சாலையில் சென்று கொண்டு இருந்தது.
அப்போது சாலையோரத்தில் ஒரு வளைவில் நின்று கொண்டிருந்த அரசு பஸ்சின் மீது அதிவேகமாக வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயங்கரமாக மோதியது.
இதில் காரின் முன்பக்கம் நொறுங்கியது. காரில் இருந்த தங்கமேகலா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது கணவர் முத்துதுரை, மகள்கள் முத்துராதா, அக்ஷயா மற்றும் டிரைவர் ஆகிய 4 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அச்சரப்பாக்கம் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து அச்சரப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாணவன பணம் இல்லை என்று கூறியதும் அவனை மிரட்டி அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று சிறைவைத்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு அடுத்த ஒழலூர் கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவன் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். இவர் சம்பவத்தன்று இரவு அருகில் உள்ள கடையில் பொருட்கள் வாங்கிக்கொண்டு வீடு திரும்பினார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகியோர் மாணவரை நிறுத்தி பணம் கேட்டு மிரட்டினர். மாணவன பணம் இல்லை என்று கூறியதும் அவனை மிரட்டி அருகில் உள்ள மற்றொரு இடத்திற்கு அழைத்து சென்று சிறைவைத்தனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவன் அவர்களிடம் இருந்து தப்பித்து வீட்டுக்கு வந்தான். அவன் வாலிபர்கள் பணம்கேட்டு மிரட்டியது குறித்து தந்தையிடம் தெரிவித்தார். இதுகுறித்து மாணவரின் தந்தை செங்கல்பட்டு தாலுக்கா போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து முள்ளு தினேஷ், முகேஷ்,சச்சின் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
- பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
- விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வண்டலூர்:
கள்ளக்குறிச்சி மாவட்டம், திம்மச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்(வயது25). கட்டிட மேஸ்திரி. இவர் இன்று காலை செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சென்றபோது பின்னால் வந்த லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திராவை சேர்ந்த போனு சீனிவாசன்(38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
- பலத்த காயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
சூனாம்பேடு:
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அடுத்த கொளத்துார் கிராமத்தை சேர்ந்தவர் செங்கல்வராயன் (வயது 70). இவர் மோட்டார் சைக்கிளில் கடப்பாக்கம் சென்று விட்டு வீடு திரும்பினார்.
வெண்ணாங்குப்பட்டு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை அருகே சென்றபோது, புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில், செங்கல்வராயனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவரை செய்யூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செங்கல்வராயன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் படுகாயத்துடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகா மேல்நெல்லி கிராமத்தை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 31). இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அசோக்குமார் மோட்டார் சைக்கிளில் உத்திரமேரூர் ஒன்றியம் பெருநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதினார். இதில் பலத்த காயமடைந்த அசோக்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து பெருநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
- கீதா காஞ்சிபுரம் காமாட்சி நகரில் உள்ள தனது தாய் சித்ராவின் வீட்டுக்கு சென்றார்.
- ஆறுமுகத்திற்கும் மாமியார் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
மடிப்பாக்கம்:
செங்கல்பட்டு மாவட்டம் மடிப்பாக்கம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு கீதா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். ஆறுமுகம் நாள்தோறும் மது குடித்துவிட்டு தனது மனைவி கீதாவிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மது குடித்துவிட்டு வந்த ஆறுமுகம் கீதாவிடம் தகராறில் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த கீதா காஞ்சிபுரம் காமாட்சி நகரில் உள்ள தனது தாய் சித்ராவின் வீட்டுக்கு சென்றார்.
அதைத்தொடர்ந்து அங்கு வந்த ஆறுமுகம் கீதாவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார். அப்போது ஆறுமுகத்திற்கும் மாமியார் சித்ராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாமியார் சித்ராவின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். தடுக்க முயன்ற மைத்துனர் உதயகுமாரை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றார்.
இது தொடர்பாக மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கின் மீதான விசாரணை செங்கல்பட்டு மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது.
இதில் குற்றம் சாட்டப்பட்ட ஆறுமுகத்தின் மீது அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதியானதால் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் செங்கல்பட்டு மகிளா கோர்ட்டு நீதிபதி எழிலரசி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜரானார்.
- போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
- வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.
செங்கல்பட்டு:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி. நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல் பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது. லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.
எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் லோகேஷ் கொலையில் தேடப்பட்ட விக்கி என்கிற விக்னேஷ் உள்பட 7 பேர் இன்று காலை திண்டிவனம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர். இதன் பின்னரே கொலைக்கான காரணம் என்ன? என்பது தெரிய வரும்.
- மனவேதனை அடைந்த ஜெகதீஷ், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லாவரம் அடுத்த ஜமீன் பல்லாவரத்தை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது மகன் ஜெகதீஷ் (வயது16). தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்த நிலையில், மாணவன் ஜெகதீஷ் ஒழுங்காக படிக்காமல் எப்போதும் விளையாடிக் கொண்டு இருந்தார். இதனை அவரது தாய் கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த ஜெகதீஷ், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
செங்கல்பட்டு:
தாம்பரம் அடுத்த இரும்புலியூர் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (வயது32). ரவுடி.
நேற்று காலை இவர் ஒரு வழக்கு சம்பந்தமாக செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜராக வந்தார். அப்போது லோகேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கோர்ட்டு அருகே உள்ள டீக்கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டு இருந்தார்.
அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் திடீரென நாட்டு வெடி குண்டை டீக்கடையில் வீசினர். இதில் டீக்கடை ஒட்டி இருந்த சுற்றுச்சுவரில் பட்டு பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த லோகேஷ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனால் மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றுவிட்டனர். கோர்ட்டு அருகே நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து உயிருக்கு போராடிய ரவுடி லோகேசை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி லோகேஷ் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருப்பது தெரிந்தது.
லோகேசின் அண்ணன் ஏற்கனவே கொலை செய்யப்பட்டு உள்ளார். இந்த கொலைக்கு பழி தீர்க்க ஒருவரை கடந்த 2018-ம் ஆண்டு லோகேஷ் தீர்த்துக்கட்டி உள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக லோகேஷ் வந்த போதுதான் மர்மகும்பல் வெடிகுண்டு வீசி அவரை கொலை செய்து உள்ளது.
எனவே பழிக்கு பழியாக இந்த கொலை நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. பரத் மேற் பார்வையில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
- வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது.
- வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
வண்டலூர்:
வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்காவில் வெள்ளைப் புலிகள் வங்க புலிகள், சிங்கங்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் ஏராளமான பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
வண்ணத்துப்பூச்சி பூங்கா, மீன் கண்காட்சியகம், குழந்தைகள் பூங்கா, பாம்புகள் இருப்பிடம் என தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளது.
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2019-ம் ஆண்டு சிங்கம் சபாரி நிறுத்தப்பட்டது. இதன் பின்னர் கொரோனா கட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றால் சிங்கம் சபாரி திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து பூங்காவில் சிங்கம் சபாரி, மான் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பார்வையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத்தொடர்ந்து வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை மீண்டும் தொடங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இதற்கிடையே சிங்கம், மான் சபாரி விரைவில் திறக்கப்படும் நடவடிக்கைக்காக இதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டுள்ளது. இவை இந்த மாத இறுதியில் பூங்காவுக்கு வர உள்ளது.
எனவே விரைவில் வண்டலூர் பூங்காவில் சிங்கம், மான் சபாரியில் பார்வையாளர்கள் செல்லலாம். மேலும் பூங்காவுக்கு கூடுதலாக 10 பேட்டரி வாகனங்களும் வாங்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, 'வண்டலூர் பூங்காவில் சிங்கம் சபாரியை விரைவில் தொடங்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் எதிர்பார்ப்பில் உள்ளனர். இதற்கான பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. சபாரி செல்வதற்காக 2 ஏ.சி. சொகுசு பஸ்கள் வாங்கப்பட்டு உள்ளன. விரைவில் பூங்காவில் சிங்கம் சபாரி தொடங்கப்படும்' என்றார்.
- பீரோவில் இருந்த ரூ. 55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது.
- பால் கொள்முதல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று உள்ளனர்.
மதுராந்தகம்:
மதுராந்தகம் அடுத்த சூனாம்பேடு அருகே உள்ள வேலூர் கிராமத்தில் கிளை தபால் நிலையம் உள்ளது. நேற்று மாலை வழக்கம்போல் பணி செய்து விட்டு தபால் நிலையத்தை பூட்டிவிட்டு ஊழியர்கள் சென்றனர். இன்று காலை அவ்வழியே பொதுமக்கள் சென்றபோது தபால் நிலையத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து தபால் நிலைய அதிகாரி ஜெயப்பிரியாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 55 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஆவணங்கள் கொள்ளை போய் இருப்பது தெரியவந்தது. இதேபோல் அருகே உள்ள பால் கொள்முதல் நிலையத்தில் புகுந்த கொள்ளையர்கள் அங்கு பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் சென்று உள்ளனர். இதுகுறித்து சூனாம்பேடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீனவர்கள் படகுளை வழக்கமாக நிறுத்தி வைக்கும் பகுதியில் கடல்நீர் சூழ்ந்து வருகிறது.
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் மற்றும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம்:
தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து செங்கல்பட்டு மாவட்ட மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் மீன்வளத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
மாமல்லபுரம், தேவநேரி, வெண்புருஷம், சதுரங்கபட்டிணம், புதுப்பட்டினம், உய்யாலிகுப்பம் உள்ளிட்ட கடலோர பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாமல்லபுரம் கடற்கரை கோயில் வடக்கே மீனவர் பகுதியில் தொடர் கடல் சீற்றத்தால், மீனவர்கள் படகுளை வழக்கமாக நிறுத்தி வைக்கும் பகுதியில் கடல்நீர் சூழ்ந்து வருகிறது.
இதனால் அப்பகுதி மீனவர்கள் கடற்கரை கோயில் சுற்றுச்சுவர் அருகே உள்ள உயரமான இடத்தில் படகுகளை நிறுத்தி வைத்துள்ளனர்.
மிஷின், வலைகளை வீடுகளுக்கு எடுத்து சென்றனர். மறு உத்தரவு வந்ததும், இந்த பகுதியில் இருந்து தற்காலிகமாக மீன்பிடிக்க செல்வதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்தனர்.
- ஆயிரக்கணக்கானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகாம்பாள் சமேத ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் கோவிலில் 21 ஆண்டுகளுக்கு பிறகு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி ஏழு நாட்கள் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அபி ஷேக அலங்கார ஆராதனை, அன்னதானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், எஸ்.ஆர்.ராஜா எம். எல். ஏ. , தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், தாம்பரம் கிழக்கு பகுதி செயலாளர் மாடம்பாக்கம் லயன் ஆ. நடராஜன், மண்டல குழு தலைவர்கள் காமராஜ், இந்திரன் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் விழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






