என் மலர்tooltip icon

    செங்கல்பட்டு

    • வெளி மாவட்ட விசைப்படகு, நாட்டுப் படகு மீனவர்களின் வலைகளை அறுத்துவிட்டு வேகமாக சென்றது.
    • சட்டத்தை மீறி வெளிமாவட்ட விசைப்படகு மீனவர்கள் கரையோரம் மீன் பிடிப்பதாக குற்றச்சாட்டு.

    மாமல்லபுரம்:

    கல்பாக்கம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் வடக்கு, சதுரங்கப்பட்டினம் தெற்கு மற்றும் மெய்யூர் மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் சுமார் 250 படகுகளில் கரையோரம் சென்று மீன் பிடித்து வருவது வழக்கம். நேற்று இரவு மீன் பிடிக்க நாட்டுப் படகில் 9 பேர் சென்றுள்ளனர். அவர்கள் நண்டு வலைகளை கட்டிவிட்டு கடலில் ஆங்கர் போட்டு நின்று கொண்டிருந்தபோது கரையோரமாக வந்த வெளி மாவட்ட விசைப்படகு ஒன்று வலைகளை அறுத்துவிட்டு வேகமாக சென்றது. அப்போது நண்டு வலை போட்டிருந்த மீனவர்களின் படகு இஞ்சினில் விசைப்படகின் வலைக்கயிறு சிக்கியது. இதனால் படகு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர்.

    இதையடுத்து மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். விசைப்படகுகளில் மீன் பிடிக்கும் மீனவர்கள் கடற்கரையில் இருந்து 5 முதல் 7 நாட்டிக்கல் மைல் தூரத்தில்தான் மீன் பிடிக்க வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை மீறி கடலூர், நாகை, காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் தொடர்ந்து கரையோரம் மீன் பிடிப்பதால் அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதை உடனடியாக தடுக்க வேண்டும் என மீனவ பஞ்சாயத்தார் மற்றும் மீனவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் தீர்மானம் நிறைவேற்றி காவல்துறைக்கும், மீன்வளத்துறைக்கும் புகார் மனு அளித்தனர். விசைப்படகு மீனவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று மீன்பிடிக்க செல்லவில்லை.

    • இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர்.
    • விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது.

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்.பா.ம.க. நகர செயலாளராக இருந்த அவர் கடந்த 9-ந்தேதி இரவு வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக அஜய் என்பவரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். மேலும் சூர்யா, காவூர் விஜி, கார்த்திக் உள்பட 4 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களில் சூர்யா, காவூர் விஜி ஆகியோரை தனிப்படை போலீசார் மாமண்டூர் பாலாற்று பாலத்தில் வைத்து சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அப்போது அவர்கள் இருவரும் போலீசாரிடம் இருந்து தப்பிக்க பாலத்தில் இருந்து கீழே குதித்தனர். இதில் விஜிக்கு இடதுகை, கால் முறிந்தது. சூர்யாவுக்கு வலது கால் முறிந்து போனது. அவர்களை போலீசார் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து உள்ளனர். அவர்களுக்கு மாவு கட்டு போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • கன்னிவாக்கம், காயரம்பேடு, தங்கப்பாபுரம், பெருமாட்டுநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    மறைமலைநகர் மின்வாரிய உட்கோட்டத்திற்கு உட்பட்ட பொத்தேரி துணை மின் நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை எஸ்.ஆர்.எம். வளாகம், தைலாவரம் ஜி.எஸ்.டி. சாலை, அண்ணாமலை மண்டபம், மேற்கு பொத்தேரி, கிழக்கு பொத்தேரி, எஸ்டேன்சியா, ஜோகோ, வல்லாஞ்சேரி, வள்ளலார் நகர், தாய்மூகாம்பிகை நகர், சாமுண்டீஸ்வரி நகர், மாடாம்பாக்கம் ஒரு பகுதி, குத்தனூர், மாணிக்கபுரம், திருத்தவேளி, குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி, மீனாட்சி நகர், கே.கே. நகர், சீனிவாசபுரம், டிபன்ஸ் காலனி, ரெயில்வே ஸ்டேஷன் ரோடு, அம்பேத்கர் நகர். நடராஜபுரம் ஜி.எஸ்.டி. சாலை ஒரு பகுதி, சதுரப்பந்தாங்கல், கூடுவாஞ்சேரி அடுத்த கன்னிவாக்கம், காயரம்பேடு, தங்கப்பாபுரம், பெருமாட்டுநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

    இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • பயிற்சி கூடங்களை பார்வையிட்டு, கட்டிட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, விடுதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த பையனூரில் 99 ஏக்கர் நிலத்தில் திரைப்பட நகரம் உருவாக உள்ளது., அங்கு ஏற்கனவே இரண்டு பிரமாண்ட படப்பிடிப்பு தளம் தயாராகி, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. தொடர்ந்து சினிமா, சின்னத்திரை நடிகர்கள், தொழிலாளர்களுக்கு குடியிருப்பு கட்டப்பட உள்ளதால் அந்த பகுதிகளை தமிழக கலை, பண்பாடு மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்துடன் சென்று பார்வையிட்டார்.

    முன்னதாக மாமல்லபுரம் அரசு கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலைக் கல்லூரியில், அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அங்குள்ள கல்,உலோகம், சுதை, மரம், மெழுகு, பெயிண்டிங் உள்ளிட்ட பிரிவுகளின் பயிற்சி கூடங்களை பார்வையிட்டு, கட்டிட வசதி, ஆசிரியர் பற்றாக்குறை, விடுதி வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, கலை, பண்பாட்டுத்துறை ஆணையர் சுகந்தி, திருப்போரூர் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.பாலாஜி, கல்லூரி முதல்வர் ராமன், திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஸ்வரி, மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், திருப்போரூர் தெற்கு ஒன்றிய தி.மு.க செயலாளர் பையனூர் சேகர், காஞ்சிபுரம் வடக்கு தி.மு.க மாவட்ட பொருளாளர் விசுவநாதன், திருப்போரூர் பேரூராட்சி தலைவர் தேவராஜ், மாமல்லபுரம் பேரூராட்சி கவுன்சிலர் மோகன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • மதுராந்தகம் பகுதியில் சாரலாக நீடித்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது.
    • மழை பெய்து ரம்மியமான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மதுராந்தகம்:

    மதுராந்தகம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக வெயில் வாட்டி வந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்ய தொடங்கியது.

    மதுராந்தகம் பகுதியில் சாரலாக நீடித்த மழை சிறிது நேரத்தில் கனமழையாக மாறியது. சுமார் 2 மணி நேரம் பலத்த மழை கொட்டித்தீ ர்த்தது. இதேபோல், கருங்குழி, அச்சிறுப்பாக்கம், மேல்மருவத்தூர், சோத்துப்பாக்கம், சித்தாமூர், செய்யூர் உள்ளிட்ட சுற்றி உள்ள கிராமங்களிலும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் கன மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் கடுமையான கோடை வெயில் இருந்த நிலை மாறி இந்த மாதம் தொடக்கத்திலேயே மழை பெய்து ரம்மியமான சூழல் நிலவுவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இன்று காலையிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    • பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீன்வளம் சார்ந்த பொருட்கள் கொண்ட கண்காட்சி அரங்குகள் உள்ளன.
    • மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், இயக்குனர்கள் வந்திருந்தனர்.

    மாமல்லபுரம்:

    தேசிய மீன் விவசாயிகள் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் இரண்டு நாள் சந்திப்பு மாநாட்டை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர்கள் டாக்டர் எல்.முருகன், சஞ்சீவ் குமார் பல்யான் மற்றும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர்.

    முன்னதாக அங்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட மீன்வளம் சார்ந்த பொருட்கள், மிஷினரி, ஏற்றுமதி வழிகாட்டுதல், புதிய தொழில் நுட்பம், பண்ணை இயந்திரம், மீன்வகை தொழில்கள், மதிப்பு கூட்டு தொழில், உள்ளிட்ட மீன்வகை தொழில் சார்பு கண்காட்சி அரங்குகளை திறந்து வைத்து பார்வையிட்டனர்.

    இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கோவா, அந்தமான், ஜார்கண்ட், ஒரிசா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, அசாம், சிக்கிம், நாகலாந்த், நேபாளம், ராஜஸ்தான், குஜராத், பஞ்சாப், அரியானா, போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர்கள் மற்றும் துறை சார்ந்த செயலர்கள், இயக்குனர்கள் வந்திருந்தனர்.

    ஒவ்வொரு மாநில மீன் விவசாயிகளிடமும் ஆன்-லைன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துரையாடல் நடத்தப்பட்டு, அவர்களிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது. அவர்களுக்கு அந்தந்த மாநில அமைச்சர்கள் உடனடியாக பதிலளித்தனர். புதிதாக மீன் பிடிப்பதற்கான தொழில்நுட்ப தொழில் துவங்கிய ஸ்டாட்டப் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

    • புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள்.
    • ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப்பிரித்து, செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு, புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று கோரி கடந்த 25 ஆண்டுகளாக பொதுமக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இதையடுத்து காஞ்சிபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

    அதன்படி 2019-ம் ஆண்டு நவம்பர் முதல் செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து பிரிந்து தமிழகத்தின் 37-வது மாவட்ட மாக உதயமானது.

    புதிய மாவட்டத்திற்கு அரசு சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பல புதிய துறைகள் கொண்டு வரப்பட்டன.

    இதைத்தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி அருகே உள்ள பழைய கோட்டாட்சியர் அலுவலக கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்க தொடங்கியது.

    அங்கு செயல்பட்ட கோட்டாட்சியர் அலுவலகம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள பழைய தபால் நிலைய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது.

    செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகமாக தற்போது செயல்பட்டு வரும் இடத்தில் போதிய இடவசதி இல்லை. கடும் இடநெருக்கடி காரணமாக இப்போது உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் துறைகள் அனைத்தும் ஒன்றாக செயல்பட முடியவில்லை.

    இதனால் புதிய துறைகள் மற்றும் அதன் அதிகாரிகள், வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். சில இடங்களில் வாடகை கட்டிடத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.

    இதையடுத்து ஒரே கட்டிடத்துக்குள் ஒருங்கிணைந்து அலுவலகங்கள் இயங்குவதற்காக, புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் கட்ட முடிவெடுக்கப்பட்டது. இதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

    அனைத்து அரசுத்துறை அதிகாரிகளின் ஆலோசனைப்படி செங்கல்பட்டு நகரை ஒட்டிய ஆலப்பாக்கம் ஊராட்சியில் உள்ள வெண்பாக்கம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் இடத்தை தேர்வு செய்து 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கின. தரை தளத்துடன் கூடிய 4 மாடிகள் கொண்ட கட்டிடம் கட்ட ரூ.120-கோடி செலவில் பிரமாண்டமாக கட்டப்பட்டு 2022-ஆண்டு நவம்பர் மாதம் பணிகள் முழுவதும் நிறைவு பெற்றது.

    கலெக்டர் அலுவலக புதிய கட்டிடத்தில் பொதுப்பணி துறை, வருவாய் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட முகமை, சுகாதாரத் துறை, சுற்று சூழல் துறை, பேரிடர் மேலாண்மை துறை,நீர் வளத் துறை, விவசாயத் துறை, வேளாண்மை துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை, சமூக நலத்துறை, கால் நடைகள் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தீயணைப்பு துறை, கல்வி துறை, தொழிலாளிகள் நலத்துறை, விஞ்ஞானத்துறை, தமிழ் இலக்கிய துறை, நிதித்துறை உள்பட 35 துறையின் அலுவலகங்கள் அனைத்து வசதிகளுடன் செயல்படும் வகையில் தயார் நிலையில் இருந்தன.

    இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மக்கள் பயன் பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது.

    இதனால் புதிய கட்டிடத்தின் அனைத்து நுழைவு வாயில்களும் பூட்டப்பட்டு தனியார் காவலர்கள் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

    இப்போது இயங்கி வரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடும் இட நெருக்கடி நிலவுகிறது. ஆவணங்களை பாதுகாப்பதிலும் தினசரி பணிக்கும் ஊழியர்கள் திணறி வருகிறார்கள்.

    அனைத்து துறை அலுவலகமும் ஒரே இடத்தில் செயல்பட முடியாமல் வெவ்வேறு இடங்களில் செயல்படுவதால் பொதுமக்களும் சிரமம் அடைந்துள்ளனர்.

    எந்தத் துறை அலுவலகம் எந்த இடத்தில் செயல்படுகிறது என்று தெரியாமல் தினந்தோறும் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக மாவட்ட மாற்று திறனாளி அலுவலகம், பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை, நீர் வளத்துறை, மின்சாரத் துறை, சுகாதாரத் துறை, கனிமவளத்துறை விவசாயம் மற்றும் வேளாண்மை துறை உள்ளிட்டவை செங்கல்பட்டு நகரத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்குவதால் பல்வேறு ஊர்களில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகின்றனர்.

    இதனால் செங்கல்பட்டு நகரத்திற்குள் பிரம்மாண்டமாக 4 மாடிகளில் எழுந்து நிற்கும் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்புடன் பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர்.

    இவ்வளவு பெரிய கட்டிடம் பணிகள் முடிந்தும் ஏன் திறக்கப்படாமல் உள்ளது? என்ற கேள்வி அவர்கள் எண்ணத்தில் எழுந்து வருகிறது. ஆனால் இது பற்றி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் கேட்கும்போது சரி வர எந்த பதிலும் கூறாமல் உள்ளனர்.

    இதனால் புதிய கலெக்டர் அலுவலகம் திறப்பது எப்போது என்ற கேள்விகளுடனேயே அவர்கள் காத்து இருக்கிறார்கள்.

    இது குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    காஞ்சீபுரம் மாவட்டத்தில் இருந்து கடந்த 2019 -ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் தனியாக பிரிந்தது. இதனால் அரசுத்துறை அலுவலகங்களுக்கு மக்கள் எளிதில் சென்று வரலாம் என்று நினைத்தோம். செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் 4 மாடியில் பிரம்மாண்டமாக கட்டி முடிந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. இதனால் அங்கு எந்தத் துறைகளும் செயல்படவில்லை. கட்டிடம் மூடியே கிடக்கிறது.

    அதில் செயல்பட வேண்டிய அனைத்து துறைகளும் வெவ்வேறு இடத்தில் தனித்தனியாக செயல்படுகின்றன .இதன் காரணமாக பல்வேறு பணிகளுக்காக வெளியூர்களில் இருந்து வரும் பொதுமக்கள் ஒவ்வொரு துறை அலுவலகமும் என்று உள்ளது எங்கு தேடி கண்டுபிடித்து செல்வதற்கு பெரும்பாடு பட்டு வருகிறார்கள்.

    புதிதாக கட்டப்பட்ட கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதிஇடம் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறுகிறார்கள். தொல்லியல் துறையிடம் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதால் திறக்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

    எனவே தொல்லியல் துறையுடன் மாநில அரசு பேச்சு வார்த்தை நடத்தி விரைவில் கலெக்டர் அலுவலகத்தை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இந்த கட்டிடப் பணிக்காக ரூ.120 கோடி முடங்கி உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, செங்கல்பட்டு மாவட்ட புதிய கலெக்டர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு திறப்புக்கு தயார் நிலையில் உள்ளது. சில சிக்கல்கள் இருப்பதால் தாமதம் ஏற்படுகிறது. இது பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். எனவே புதிதாக கட்டப்பட்ட செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகம் விரைவில் திறக்கப்படும் என்றனர்

    • கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது.
    • கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ்(வயது46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ம.க. நகர செயலாளராக இருந்தார். இவர் செங்கல்பட்டு நகரில், மணி கூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம்போல் வியாபாரம் முடிந்ததும் நாகராஜ் பூக் கடையை மூடிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் திடீரென நாகராஜை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து நாகராஜ் தப்பி ஓட முயன்றார். ஆனாலும் அவரை மர்ம கும்பல் சுற்றி வளைத்து வெட்டி கொன்று விட்டு தப்பி சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட் டது. தகவல் அறிந்ததும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விரைந்து வந்து நாகராஜின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுபற்றி அறிந்ததும் நாகராஜின் உறவினர்கள் மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் ஏராளமானோர் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். நாகராஜ் கொலை செய்யப்பட்டதற்கான காரணம்? கொலையாளிகள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இது தொடர்பாக அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்க தீவிர நடவடிக்கையில் இறங்கினர்.

    அப்போது கொலையாளிகள் பரனூர் வழியாக தப்பி சென்று இருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து அப்பகுதியை சுற்றி வளைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

    இதற்கிடையே இரவு 11.30 மணியளவில் கொலையாளிகளில் ஒருவன் செங்கல்பட்டு அடுத்த புலிபாக்கம் பகுதியில் ரெயில்வேபாதை அருகே தப்பி செல்வது தெரிந்தது.

    இதையடுத்து செங்கல்பட்டு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜா மற்றும் போலீசார் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அந்த வாலிபர் தப்பி ஓட முயன்றார்.

    மேலும் பிடிக்க முயன்ற இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் மீது கற்களை வீசியும் மற்றும் மறைத்து வைத்திருந்த கத்தியாலும் தாக்க முயன்றார்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ராஜா தன்னிடம் இருந்த துப்பாக்கியால் அந்த வாலிபர் மீது ஒரு ரவுண்டு சுட்டார். இதில் வாலிபரின் இடது காலில் குண்டு துளைத்து சுருண்டு விழுந்தார். அவரை மீட்டு உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பின்னர் அவரை காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விசாரணையில் அவர் செங்கல்பட்டு, சின்னநத்தம் பகுதியை சேர்ந்த அஜய் என்பது தெரியவந்தது. அவரது காலில் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை. அவரது உடல் நிலை நன்றாக உள்ளது. அவருக்கு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    அங்கு டி.எஸ்.பி. ஜூலியஸ் சீசர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வன், சத்தியவாணி ஆகியோர் தலைமையில் 15-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்படுகிறது.

    இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக மேலும் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக், சூர்யா ஆகிய 2 பேரை ஸ்ரீபெரும்புதூர் அருகே போலீசார் பிடித்து உள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடிவருகிறார்கள். பா.ம.க. பிரமுகர் கொலையில் இதுவரை 3 பேர் பிடிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பா.ம.க. பிரமுகர் கொலையில் தொடர்புடைய குற்றவாளியை போலீசார் சுட்டுபிடித்து உள்ள சம்பவம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே நாகராஜ் கொலையை கண்டித்து இன்று காலை வணிகர் சங்கத்தினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி முன்பு திடீர் மறியலில ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். செங்கல்பட்டு நகரம் முழுவதும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு உள்ளனர்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.

    செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலலவியது

    உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.

    இந்நிலையில், பாமக பிரமுகர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவரை போலீசார் சுட்டுப்பிடித்துள்ளனர்.

    தப்பியோடிய கும்பலில் அஜய் என்பவரை போலீசார் சுட்டுப்பிடித்தனர்.

    துப்பாக்கி குண்டு பாய்ந்து காலில் காயமடைந்த அஜய் காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து அஜய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    • செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து போராட்டம்.
    • குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் பரபரப்பு.

    செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்த பாமக நகர செயலாளர் நாகராஜை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந் செங்கல்பட்டு நகர போலீசார் விசாரணை நடைபெற்று வருகிறது.

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் நாகராஜனின் உடலை வைத்து உறவினர்கள், கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தி நூறுக்கும் மேற்பட்டோர் கூடியதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    உடலை வைத்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பிரேத பரிசோதனைக்கு அனுப்புவதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    • சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
    • மாமல்லபுரத்தில் பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

    மாமல்லபுரம்:

    சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் "தூய்மை இந்தியா இருவார விழா" என்ற பெயரில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியரிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு, மட்கும் குப்பை, மட்காத குப்பை தரம் பிரிப்பது, சுற்றுப்புற தூய்மை, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.

    அவ்வகையில், மாமல்லபுரத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. பேரூராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் கூடும் புராதன சின்னங்கள் பகுதியில் பொம்மலாட்டம், மைன்ட்ஷோ, கையெழுத்து இயக்கம் வாயிலாகவும், துணிப் பைகளை இலவசமாக கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். நிறுவன பொது மேலாளர் கோமுராஜ், உதவி மேலாளர் ராமலிங்கம், பேரூராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாக மாமல்லபுரம் கடற்கரை உள்ளது.
    • பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையானது சுற்றுலா பயணிகளுக்கு சூரிய குளியல், நடைபயிற்சி, அலைச்சறுக்கு விளையாட்டு, கடலில் குளிப்பது என மகிழ்ச்சியை கொடுக்கும் முக்கிய பொழுதுபோக்கு பகுதியாக இருந்தாலும், ஸ்தலசயன பெருமாள் கோயில் தீர்த்தவாரி, மூதாதையர் திதி, இருளர்களின் குலதெய்வ வழிபாடு, காணிக்கை, வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாகவும் உள்ளது.

    இப்பகுதி கடலோரத்தில் அண்மைக் காலமாக அவ்வப்போது ஏவல், பில்லி, சூனியம் வைக்கும் மர்ம நபர்கள் நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து ஜாமகால பூஜைகள் செய்வதாகவும், ஊழையிட்டு பேய் ஆட்டம் ஆடுவதாகவும் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில்

    கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், கழுத்தை அறுத்து பூஜை செய்யப்பட்ட சேவல், மஞ்சள் குங்குமம் கலந்த பூசணிக்காய், துணி, ரிப்பன், மரப்பொம்மை உள்ளிட்ட ஜாமபூஜை பொருட்கள் கிடந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் முகம் சுழித்து சென்றனர்.

    இதுபோன்ற பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×