search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாமல்லபுரம் கடற்கரையில் சேவலை அறுத்து ஜாமபூஜை? சுற்றுலா பயணிகள் அச்சம்
    X

    மாமல்லபுரம் கடற்கரையில் சேவலை அறுத்து ஜாமபூஜை? சுற்றுலா பயணிகள் அச்சம்

    • பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாக மாமல்லபுரம் கடற்கரை உள்ளது.
    • பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையானது சுற்றுலா பயணிகளுக்கு சூரிய குளியல், நடைபயிற்சி, அலைச்சறுக்கு விளையாட்டு, கடலில் குளிப்பது என மகிழ்ச்சியை கொடுக்கும் முக்கிய பொழுதுபோக்கு பகுதியாக இருந்தாலும், ஸ்தலசயன பெருமாள் கோயில் தீர்த்தவாரி, மூதாதையர் திதி, இருளர்களின் குலதெய்வ வழிபாடு, காணிக்கை, வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு ஆன்மீக செயல்பாடுகள் நடக்கும் இடமாகவும் உள்ளது.

    இப்பகுதி கடலோரத்தில் அண்மைக் காலமாக அவ்வப்போது ஏவல், பில்லி, சூனியம் வைக்கும் மர்ம நபர்கள் நள்ளிரவில் கடற்கரையில் அமர்ந்து ஜாமகால பூஜைகள் செய்வதாகவும், ஊழையிட்டு பேய் ஆட்டம் ஆடுவதாகவும் பேசப்பட்டு வந்தது. சமீபத்தில்

    கடற்கரை கோயில் தென் பகுதி கடலோரத்தில், கழுத்தை அறுத்து பூஜை செய்யப்பட்ட சேவல், மஞ்சள் குங்குமம் கலந்த பூசணிக்காய், துணி, ரிப்பன், மரப்பொம்மை உள்ளிட்ட ஜாமபூஜை பொருட்கள் கிடந்தன. இதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் முகம் சுழித்து சென்றனர்.

    இதுபோன்ற பூஜைகள் செய்வதை கட்டுப்படுத்த இரவில் போலீசார் மற்றும் கடலோர காவல் படையினர் ரோந்து சென்று கண்காணிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×