என் மலர்
செங்கல்பட்டு
- மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட துரைராஜ் என்பவரை கைது செய்தனர்.
ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரி ஊராட்சி, கோகுலம்காலனி பகுதியை சேர்ந்தவர் அருண். உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர் காரணைப்புதுச்சேரி கூட்டுரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென கத்திமுனையில் அருணிடம் இருந்த செல்போனை பறித்து தப்பி சென்றனர். அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவரிடம் இருந்த செல்போனை பறித்துதப்பிச் சென்றனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட சென்னை, பெசன்ட் நகர் அடுத்த திடீர் நகரைச் சேர்ந்த துரைராஜ் (28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
- இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது.
- மனமுடைந்த சஞ்சய் பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார்.
மாமல்லபுரம்:
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் சஞ்சய் பர்மல் (வயது20). இவர் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் உணவகம் ஒற்றில் சைனீஸ் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் வீடியோ கால் மற்றும் செல்போனில் மணிக்கணக்கில் பேசி தங்களது நட்பை வளர்த்து வந்தனர்.
அப்போது அந்த இளம்பெண்ணுக்கு சஞ்சய் பர்மல் ஏராளமான பரிசு பொருட்களை ஆன்லைனில் ஆர்டர் செய்து அனுப்பி வந்ததாகவும் தெரிகிறது. இதற்கிடையே சஞ்சய்பர்மல் அந்த பெண்ணை காதலிக்க தொடங்கினார். இதையடுத்து அவர் தனது காதல் குறித்து அவரிடம் தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் காதலை ஏற்க மறுத்ததாக தெரிகிறது. மேலும் நட்பாக பழகியதாக கூறி உள்ளார்.
இதனால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் காதலி குறித்து உடன் வேலை பார்க்கும் நண்பர்களிடம் கூறி வருத்தம் அடைந்தார். அவரை நண்பர்கள் சமாதானப்படுத்தி வந்தனர். இந்தநிலையில் காதல் தோல்வியால் மனமுடைந்த சஞ்சய்பர்மல் தங்கி இருந்த அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அவரது நண்பர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பந்தப்பட்ட 2 பெண் டாக்டர்களிடம் இன்ஸ்பெக்டர் மகிதா விசாரித்தார்.
- சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டை சேர்ந்த டாக்டர் மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் அளித்தார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா அன்னகிருஷ்டி போக்சோ சட்டத்தின் கீழ் சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்த ரஞ்சித் (வயது 27) என்பவரை கைது செய்தார்.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனை செய்தபோது அந்த சிறுமிக்கு ஏற்கனவே கருக்கலைப்பு செய்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சிறுமியின் தாயாரிடம் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதா விசாரித்தபோது அவர் சிங்கப்பொருமாள்கோவில் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள தனியார் கிளினிக்கில் தனது மகளுக்கு கருக்கலைப்பு செய்து உள்ளதாக தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட 2 பெண் டாக்டர்களிடம் இன்ஸ்பெக்டர் மகிதா விசாரித்தார். அப்போது 2 டாக்டர்களிடம் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்தால் உங்களால் டாக்டர் தொழில் செய்ய முடியாது என மிரட்டி வக்கீல் உதவிவுடன் அரசு டாக்டரிடம் ரூ.10 லட்சம் மற்றும் தனியார் ஆஸ்பத்திரி டாக்டரிடம் ரூ.2 லட்சம் வாங்கி உள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனருக்கு புகார் வந்தவுடன் வண்டலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகிதாவை பணியிடை நீக்கம் செய்து தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது ரூ.10 லட்சம் கொடுத்த சிங்கப்பொருமாள்கோவில் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சட்டம் சார்ந்த மருத்துவத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வரும் டாக்டர் பராசக்தி மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகார் மனுவில்:-
என்னுடைய மருத்துவ தொழிலுக்கு பிரச்சினை ஏற்படுத்தும் விதமாக பேசி என்னிடம் ரூ.10 லட்சம் பெற்றுகொண்ட இன்ஸ்பெக்டர் மகிதா அன்ன கிருஷ்டி, வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் பேரில் மறைமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் மகிதா மற்றும் வக்கீல் பன்னீர் செல்வம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்கல்பட்டு சேர்ந்த ஒரு டாக்டர் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் புகார் அளித்தார். மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் தீர்த்தலிங்கம் நேற்று அரசு டாக்டர் பராசக்தி, மறைமலைநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் உமா மகேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
- ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர்.
- குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
செங்கல்பட்டு:
செய்யூர் அடுத்த கொடூர் கிராமத்தை சேர்ந்தவர் துரை. இவரது மனைவி ஜெயஸ்ரீ. இவர்களுக்கு ஏற்கனவே பெண் குழந்தை உள்ளது. தற்போது ஜெயஸ்ரீ மீண்டும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவர் பவுஞ்சூரில் உள்ள ஆரம்ப அரசு சுகாதார நிலையத்தில் பரிசோதித்த போது குழந்தையின் எடை அதிகமாக உள்ளது உடனடியாக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு அங்கிருந்த டாக்டர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.
இதையடுத்து ஜெயஸ்ரீயை செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து முதல் குழுந்தை அறுவை சிகிச்சை இன்றி பிறந்ததால் தற்போதும் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவம் ஆக முயற்சி செய்தனர்.
இந்த நிலையில் ஜெயஸ்ரீக்கு சுகபிரசவகத்தில் பெண்குழந்தை பிறந்து உள்ளதாக அங்கிருந்த நர்சுகள் துரையிடம் கூறினர். மேலும் குழந்தையை உடனடியாக பார்க்க முடியாது அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதாக தெரிவித்து உள்ளனர்.
நீண்ட நேரத்திற்கு பின்னர் குழந்தையை துரை பார்த்தபோது குழந்தையின் தலையில் ரத்த கசிவும், வலது கை எலும்பு முறிந்து கட்டுபோடப்பட்டும், இடது கை நரம்பு பாதித்து அசைவற்றும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜெயஸ்ரீக்கு உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து பிரசவம் பார்க்காததே குழந்தையின் பாதிப்புக்கு காரணம் என்று டாக்டர்கள் மற்றும் நர்சுகள் மீது குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
இதுதொடர்பாக துரை செங்கல்பட்டு நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரசவத்தில் குழந்தையின் கை எலும்பு முறிந்து பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது.
- பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
தாம்பரம்:
தாம்பரம் அடுத்த சிட்லப்பாக்கம், கல்யாண சுந்தரம் தெருவை சேர்ந்தவர் பொன்னுதாஸ்(வயது48). திருமுடிவாக்கத்தில் ஏ.கே.ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி ஜான்சி ராணி(45). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ஒருவர் கல்லூரியிலும் மற்றொருவர் 9-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள். வழக்கம் போல் பள்ளி-கல்லூரிக்கு சென்ற இருவரும் நேற்று மாலை வீடு திரும்பினர்.
அப்போது வீட்டில் உள்ள அறையில் தந்தை பொன்னுதாஸ், தாய் ஜான்சிராணி ஆகியோர் தனித்தனியாக மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பெற்றோரின் உடல்களை பார்த்து மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.
இதுகுறித்து சிட்லப்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து பொன்னுதாஸ், ஜான்சிராணி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
பொன்னுதாஸ் ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனம் நடத்துவதற்காக வங்கி மற்றும் தனக்கு தெரிந்த நபர்களிடம் சுமார் ரூ.1 கோடி வரை கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. தொடர்ந்து ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அவரால் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கமுடியவில்லை.
இதனால் பணத்தை கடன் கொடுத்தவர்கள் பொன்னுதாசுக்கு நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது. இதுபற்றி அவர் தனது மனைவியிடம் கூறி கவலை அடைந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து உள்ளனர்.
அவர்களுக்கு பணம் கேட்டு நெருக்கடி கொடுத்தவர்கள் யார்? யாரேனும் மிரட்டினார்களா? யார் யாரிடம் கடன் பெற்றனர்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.
- தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
- மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.
தாம்பரம்:
சென்னை புறநகர் பகுதியான தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகின்றன. புறநகர் பகுதிகளில் குடியேறுபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. இதனால் தாம்பரம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் மக்கள் தொகை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இதைத்தொடர்ந்து தாம்பரம் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. சுமார் 2 லட்சத்து 52 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.
குடியிருப்புகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள். தங்கள் வீட்டு குப்பைகளை தூய்மைப் பணியாளர்களிடம் மொத்தமாக கொடுக்காமல் மக்கும் குப்பை, மக்காத குப்பை 'என்று பிரித்துக் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், 50 வீடுகளுக்கு மேல் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளில் குப்பையை அகற்ற தாம்பரம் மாநகராட்சி புதிய விதிமுறையை கொண்டு வந்துள்ளது.
அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்கள் குடியிருப்பில் அமைக்கப்பட்டு உள்ள மறுசுழற்சி சாதனங்களை பயன்படுத்தி திடக்கழிவை சுத்திகரித்து கொள்ளவேண்டும். மேலும் மக்கும் குப்பையை அந்தந்த குடியிருப்பில் வசிப்பவர்களே உரமாக்கி கொள்ளவேண்டும்.
காகிதம் மற்றும் மக்காத பிளாஸ்டிக், எலெக்ட்ரானிக்ஸ் கழிவுகள் மட்டும் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதற்கு ஒப்புக்கொள்ளாத குடியிருப்புகளில் குப்பை அள்ள மாநகராட்சி ஊழியர்கள் வரமாட்டார்கள். அந்த குடியிருப்பில் உள்ளவர்கள் தனியார் குப்பை அகற்றும் ஏஜென்சி மூலம் அகற்றி கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் கூறும்போம், அடுக்கு மாடி குடியிருப்புகளில் வீடு வாங்கிய பலருக்கு தாம்பரம் மாநகராட்சி விதித்துள்ள புதிய கட்டுப்பாடு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மைக்கு வரி வசூலித்து வரும் நிலையில், குப்பையை அந்தந்த குடியிருப்புகளே அகற்ற வேண்டும் என்ற உத்தரவை தாம்பரம் மாநகராட்சி மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.
- மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது.
- உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வருகிற 21-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆடிப்பூர திருவிழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது.
இந்த உள்ளூர் விடுமுறை நாளை ஈடுசெய்திட அடுத்த மாதம் 5-ந்தேதி (சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர்.
- விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி நியமிக்கப்பட்டார்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர், அச்சரப்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த மே மாதம் விஷ சாராயம் குடித்து 8 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணை அதிகாரியாக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரி நியமிக்கப்பட்டார். தொடர்ந்து கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 6 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விஷ சாராயம் விற்பனை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கருக்கந்தாங்கல் பகுதியை சேர்ந்த அமாவாசை (வயது 40) மற்றும் பனையூரை சேர்ந்த ராஜேஷ் (27) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு வினோத் சாந்தாராம் பரிந்துரையின்படி இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.
- இன்று காலை நீண்டநேரம் ஆகியும் கருத்தோவியன்-மஞ்சுளா ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை.
- கருத்தோவியனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.
வண்டலூர்:
ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, ஜெயேந்திர சரஸ்வதி ஜெயராம் நகர், அக்ஷயா குடியிருப்பில் வசித்து வந்தவர் கருத்தோவியன்(வயது67). இவரது மனைவி மஞ்சுளா (55). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி அருகிலேயே தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
கருத்தோவியன் தனியார் சூப்பர் மார்க்கெட்டில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். கருத்தோவியனும், அவரது மனைவியும் தனியாக வசித்து வந்தனர்.
இந்தநிலையில் இன்று காலை நீண்டநேரம் ஆகியும் கருத்தோவியன்-மஞ்சுளா ஆகிய இருவரும் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அருகில் வசிக்கும் அவர்களது மகன்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவர்கள் விரைந்து வந்து பார்த்தபோது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது அங்குள்ள அறையில் தந்தை கருத்தோவியன் தூக்கில் தொங்கிய நிலையிலும், தரையில் தாய் மஞ்சுளா வாயில் நுரை தள்ளியபடியும் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் இருவரும் தற்கொலை செய்து இருப்பது தெரிந்தது. தந்தையும் தாயும் இறந்து கிடப்பதை கண்டு மகன்கள் இருவரும் கதறி துடித்தனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்த தம்பதி மகளிர் குழுவில் கடன் வாங்கி இருந்ததாக தெரிகிறது. வருமானம் போதிய அளவில் இல்லாததால் அவர்கள் கடனை திருப்பி கொடுக்க சிரமம் அடைந்தனர். மேலும் இருவருக்கும் உடல்நிலை பாதிப்பும் இருந்து வந்தது.
கருத்தோவியனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. மேலும் அவரது மஞ்சுளா நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக பாதிப்பால் அவதி அடைந்தார். இந்த நிலையில் வயதான தம்பதி இருவரும் தற்கொலை செய்து உள்ளனர். மஞ்சுளா அளவுக்கு அதிகமாக மாத்திரை தின்று இருப்பது தெரிய வந்துள்ளது.
கணவன்-மனைவி இருவரும் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
- செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 1.7.2023-ல் தொடங்கும் காலாண்டுக்கு படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களிடமிருந்து வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
10-ம் வகுப்பு (தோல்வி), 10-ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அதற்கும் மேலான கல்வித்தகுதிகளை பெற்று வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, பதிவினை தொடர்ந்து புதுப்பித்து, 30.6.2023 அன்றைய நிலையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தமிழக அரசால் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது.
என்ஜினீயரிங், மருத்துவம், கால்நடை மருத்துவம், விவசாயம், சட்டம், பி.எஸ்.சி நர்சிங் போன்ற தொழிற்பட்டப் படிப்புகள் முடித்தவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
இத்திட்டத்தின் கீழ் பயன் பெற மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். இந்த உதவித்தொகையை பெறுவதற்கு தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மனுதாரர்கள் 30.6.2023 அன்றைய நிலையில் 45 வயதிற்குள்ளும், இதர இனத்தை சேர்ந்தவர்கள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
உதவித்தொகை விண்ணப்ப படிவம் பெற விரும்பும் மனுதாரர்கள், தங்களின் வேலைவாய்ப்பு அடையாள அட்டையை ஆதாரமாக காண்பித்து, செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் விண்ணப்பங்களை இலவசமாக பெற்று கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, மனுதாரர்கள் 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10-ந்தேதிக்குள்ளாக அனைத்து அலுவலக வேலை நாட்களிலும், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை திட்டப்பிரிவில், அனைத்து அசல் கல்வி சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் கணக்கு தொடங்கி புத்தகத்துடன் நேரில் ஆஜராகி சமர்ப்பிக்கலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபரும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது.
- சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுன் தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, பகுதிகளை இரவிவிலும் பார்த்து ரசிப்பதற்காக, கடந்த 2019ல் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின்பிங்கும் மாமல்லபுரம் வந்த போது மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டது. இரவு 9 மணிவரை சுற்றுலா பயணிகள் உள்ளே சென்று பார்க்க அனுமதியும் வழங்கப்பட்டது. பின்னர் ஓரிரு வாரத்தில் பராமரிப்பு இல்லாமல், பாதுகாப்பு கருதி நிறுத்தப்பட்டது.
இந்த இரவு ஒளிக்காட்சி குறித்து அறிந்து உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகள் மாலை நேரத்தில் வந்தனர். ஆனால் அவர்கள் ஒளிக்காட்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
அதன்பின்னர், மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட், ஜி-20 சர்வதேச கூட்டங்கள், காத்தாடி திருவிழா, அலைச்சறுக்கு என சர்வதேச நிகழ்ச்சிகள் நடைபெற்றதால், நிகழ்ச்சிக்கு வரும் வெளிநாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை இரவிலும் பார்வையிட மீன்டும் அலங்கார ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டன. இதை சுற்றுலா பயணிகளும் கண்டு ரசிக்கும் வகையில் இரவு 9 மணி வரை, ஒளிவிளக்குகளை எரியவிட்டு, உள்ளே அனுமதிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் தொல்லியல் துறை உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.
இதையடுத்து வரும் 15ஆம் தேதியில் இருந்து இரவு 9 மணி வரை அலங்கார மின்னொளியுடன், புராதன சின்னங்கள் திறந்திருக்கும் என தொல்லியல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல் கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, திருச்சி மற்றும் வெளி மாநிலம் என 14 இடங்களுக்கு 9 மணிவரை அனுமதி வழங்கியுள்ளது.
- டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரம்.
- சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவு.
செங்கல்பட்டில் டாஸ்மாக் கடை ஒன்றில் கூடுதலாக பத்து ரூபாய் கேட்பதாக கூறி மதுப்பிரியர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
அப்போது அங்கு வந்த எஸ்.ஐ ராஜா மதுப்பிரியர் மீது தாக்குதல் நடத்தினார். இதன் வீடியோ நேற்று இணையத்தளத்தில் வைரலானது.
இதையடுத்து, டாஸ்மாக் கடையில் பத்து ரூபாய் கூடுதலாக கேட்பதாக கேள்வி எழுப்பிய நபர் தாக்கப்பட்ட விவகாரத்தில் காவல் உதவி ஆய்வாளர் ராஜா ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர் ராஜா மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பாக காவல் உதவி ஆய்வாளர் ராஜா விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.






