என் மலர்
செங்கல்பட்டு
- ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது.
- அதிகாரிகளிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.
மாமல்லபுரம்:
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலி ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் பொன்னையா பங்கேற்றார். ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் ஊராட்சி செயலர் மூலம் வாசிக்கப்பட்டது. பின்னர் வந்திருந்த மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
அப்போது மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப் பட்ட ஏராளமான பெண்கள் திடீரென கிராம சபை கூட் டம் நடைபெறும் இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்கள் அங்கிருந்த அதிகாரி களிடம் மகளிர் உரிமைத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கூறி கடும் வாக்குவாதம் செய்தனர்.
அவர்களிடம் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர். ஏராளமான பெண்கள் ஒரே நேரத்தில் திரண்டு வந்ததால் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
- செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர்.
- சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர்.
செங்கல்பட்டு:
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சி வரை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தாம்பரம், செங்கல்பட்டு, தஞ்சாவூர் வழியாக திருச்சி செல்வது வழக்கம். நேற்று காலை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு செங்கல்பட்டு ரெயில் நிலையத்தை வந்தடைந்தது.
செங்கல்பட்டு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி வழக்கமான சோதனையில் ஈடுபட்டனர். ரெயிலில் முன்பதிவு செய்யப்பட்ட எஸ்.1 பெட்டியில் ரெயில்வே போலீசார் சோதனை செய்துகொண்டிருந்தனர்.
அப்போது அங்குள்ள கழிவறை பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகமடைந்த போலீசார் கழிவறையில் பதுங்கி இருந்த 2 பேரை மடக்கினர். அவர்கள் கையில் ஒரு கைப்பை இருந்தது. அதை போலீசார் வாங்கி சோதனை செய்தனர்.
அந்த பையில் ஏராளமான தங்க நகைகள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அந்த நபர்களிடம் கேட்டபோது அவற்றை தாங்கள் கடைகளுக்கு வியாபாரம் செய்ய எடுத்து செல்வதாக கூறினர். அவர்களிடம் தங்க நகைகளுக்கான உரிய ஆவணங்களை கேட்டனர். ஆனால் அது தொடர்பான ஆவணங்கள் எதுவும் அவர்களிடம் இல்லை.
இதையடுத்து அந்த நகைகளை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த அமித் ஜெயின் (வயது 44) மற்றும் ராம்லால் (44) எனதெரிந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளை ரெயில்வே போலீசார் வணிகவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
- ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம்.
- ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து இதனை பார்த்து ரசித்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின்போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் "லயன்சபாரி" நிறுத்தப்பட்டது. பின்னர் பூங்கா வழக்கமாக திறந்த பின்னரும் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்படவில்லை.
இதனால் சிங்கங்களை பார்வையிடும் "லயன் சபாரி"யை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட்டது. இதனை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பூங்காவில் நடைபெற்ற வனவிலங்கு வார கொண்டாட்டங்கள் நிகழ்ச்சியின்போது தொடங்கி வைத்தார். இதேபோல் மான்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதியும் தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்சில் பார்வையாளர்கள் சென்று சிங்கம், மான்களை பார்வையிடலாம். ஒரு பஸ்சில் ஒரே நேரத்தில் 28 பேர் பயணிக்க முடியும்.
இதேபோல் நுழைவுச் சீட்டில் கியூஆர் கோடு ஸ்கேனர் வசதி, நுழைவுச் சீட்டு வழங்க 2 கவுண்டர்கள், உலக தரம் வாய்ந்த உணவகம், முதுமலை வனத்துறை என்ற இணையதளம், வண்டலூர் உயிரியல் பூங்காவில் புதிதாக கட்டப்பட்ட வன உயிரினங்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி ஆகியவையும் தொடங்கி வைக்கப்பட்டது.
வண்டலூர் பூங்காவில் 3 ஆண்டுக்கு பிறகு சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் வசதி செய்யப்பட்டு உள்ளதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். பூங்கா நிர்வாகத்தினரின் ஏற்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்து உள்ளனர்.
- கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
- விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
வண்டலூர்:
படப்பை அடுத்த ஆரம்பாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மனைவி வனிதா. இவர்களது 6 வயது மகள் அவந்திகா. பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று இரவு வண்டலூர் அருகே உள்ள கண்டிகையில் நடைபெற்ற உறவினர் சீமந்த விழாவில் கணபதி குடும்பத்துடன் பங்கேற்றார்.
பின்னர் கணபதி தனது மனைவி மற்றும் மற்றொரு மகளுடன் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அவரது உறவினர்களான பிரசாந்த், அஜித் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் கணபதியின் மகள் அவந்திகா உடன் பயணம் செய்தார்.
இதில் வண்டலூர் பூங்கா அருகே வந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த டாரஸ் லாரி திடீரென சிறுமி அவந்திகா பயணம் செய்த மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்கிள் வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரில் மோதி நொறுங்கியது. படுகாயம் அடைந்த அவந்திகா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். உறவினர்களான பிரசாந்த் மற்றும் அஜித் ஆகியோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
விபத்து நடந்ததும் லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தகவல் அறிந்ததும் ஓட்டேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். உயிருக்கு போராடிய பிரசாந்த், அஜித்தை மீட்டு குரோம்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
விபத்து ஏற்படுத்திய லாரி சுமார் ஒரு மீட்டர் தூரத்திற்கு வண்டலூர் உயிரியல் பூங்காவின் சுற்றுச்சுவரை உரசியபடி மோதி நின்றது குறிப்பிடத்தக்கது.
- டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
- சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 5-க்கு உட்பட்ட இடங்களில், அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த தி.மு.க. அரசும், தாம்பரம் மாநகராட்சியும் தவறியதன் காரணமாக, பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுச் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளதால், டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
சேலையூர் மற்றும் இரும்புலியூர் ஏரிகளில் கழிவுநீர் கலப்பதால் ஏரிகள் மாசடைந்து வருகின்றன.
இங்குள்ள அம்மா உணவகத்தில், 1500-க்கும் மேற்பட்ட மக்கள் உணவருந்தி பயன்பெற்று வந்த நிலையில் தற்போது, தரமற்ற உணவு வகைகளை தயார் செய்வதால் மிகவும் குறைவான மக்களே உணவருந்தி வருகின்றனர்.
இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம்-5-ல் நிலவி வரும் சுகாதார சீர்கேடு, குடிநீர் பிரச்சனை, தெரு விளக்குகள் எரியாமை, பாதாள சாக்கடைத் திட்டம் சரிவர முடிக்காதது, குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்யாதது, ஏரிகளில் கழிவு நீர் கலப்பது முதலானவற்றை சரிசெய்யத் தவறிய தி.மு.க. அரசையும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தை யும் கண்டித்தும், அம்மா உணவகங்களில் வழங்கப் படும் உணவுகளின் தரத்தைக் குறைத்து, இத்திட்டத்திற்கு மூடுவிழா காணத் துடிக்கும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், தாம்பரம் கிழக்கு, மாடம்பாக்கம் ஆகிய பகுதிக் கழகங்கள் ஒன்றிணைந்து, வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணியளவில், தாம்பரம் கிழக்கு, வால்மீகி தெருஏரிக்கரை தெரு சந்திப்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், மகளிர் அணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும், முன்னாள் அமைச்சர் டி.கே.எம். சின்னையா, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச. ராசேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகி களும், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளின் முன்னாள் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும்.
தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொது மக்களும், வியாபாரிகளும், தொழிலாளர்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு ஆதரவு நல்கிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
- கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வண்டலூர்:
மறைமலைநகர் அடுத்த மகேந்திராசிட்டியில் உள்ள தேவி கருமாரியம்மன்கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஐம்பொன் சிலை மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்று விட்டனர்.
இது தொடர்பாக கார்த்திக் மற்றும் அவர் கொடுத்த தகவலின்படி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொள்ளை தொடர்பாக ஜெயச்சந்திரன் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
- பூங்காவின் நடைபெறும் “வனவிலங்கு வார” கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன.
- ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும்.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள், பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இதனை ரசித்து செல்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 10 லட்சம் பேர் பூங்காவுக்கு வந்து செல்கிறார்கள்.
கொரோனா ஊரடங்கின் போது கடந்த 3 ஆண்டுக்கு முன்பு பூங்காவில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்வையிடும் லயன்சபாரி நிறுத்தப்பட்டது. கொரோனோ தொற்று பரவல் முடிந்து வழக்கமாக பூங்கா திறக்கப்பட்டதும் வாகனத்தில் சிங்கங்களை பார்வையிடம் வசதியை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதைத் தொடர்ந்து லயன் சபாரியை தொடங்க பூங்கா அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். இதற்காக தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் 3 ஏ.சி. பஸ்கள் வாங்கப்பட்டது. மேலும் சிங்கங்கள் உலாவும் பகுதியில் நவீனப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் சிங்கங்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி 3 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற 2-ந்தேதி வண்டலூர் பூங்காவில் தொடங்கப்பட உள்ளது. அன்று பூங்காவின் நடைபெறும் "வனவிலங்கு வார" கொண்டாட்டத்தின் போது இதற்கான விழா நடைபெற உள்ளன. சுற்றுலா பயணிகள் ஏ.சி. பஸ்களில் பயணம் செய்து திறந்த வெளியில் சுற்றும் சிங்கங்களை பார்க்கலாம். ஒரு பஸ்சில் 28 பேர் பயணம் செய்ய முடியும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இதுகுறித்து வண்டலூர் பூங்கா அதிகாரி ஒருவர் கூறும்போது, வண்டலூர் பூங்காவில் லயன்சபாரி வருகிற 2-ந்தேதி தொடங்கப்பட உள்ளது. இதற்காக 3 ஏ.சி. பஸ்கள் உள்ளன. பேட்டரி மூலம் இயக்கப்படும் இந்த வாகன த்தில் செல்ல ஒருவருக்கு ரூ.150 கட்டணமாக இருக்கும். இதன் மூலம் பூங்காவில் வருவாய் மேலும் அதிகரிக்கும். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் தற்போது பூங்காவுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. அடுத்த ஆறு மாதங்களுக்குள் வருவாய் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
- இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார்.
- பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார்.
மாமல்லபுரம்:
"இஷ்ரே" என்கின்ற இந்திய வெப்பப்படுத்துதல், குளிர்வித்தல் பொறியாளர்கள் கூட்டமைப்பின் கல்பாக்கம் பிரிவு, இந்திய பெண் விஞ்ஞானிகள் சங்கம் மற்றும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் ஆகியவை இணைந்து கல்பாக்கத்தில் சக்தி-2023 என்ற கருத்தரங்கை நடத்தியது.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் வெங்கட்ராமன் தலைமை ஏற்றார். பெண் விஞ்ஞானி ராஜலட்சுமி மேனன் துவக்கி வைத்தார். "இஷ்ரே" அமைப்பின் தேசிய தலைவர் யோகேஷ் தக்கர், சுற்றுச்சூழல் சுகாதார பொறியியல் துறை தலைவர் கல்பனா மற்றும் 300 பெண் விஞ்ஞானிகள், பொறியாளர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
பசுமை தொழில்நுட்ப ஆராய்ச்சி, பாதுகாப்பு ஆராய்ச்சி, வனப்பகுதியின் வான்வழி பாதுகாப்பு, 2070ம் ஆண்டிற்குள் கார்பனை முற்றிலும் குறைப்பது, காற்றின் மாசுபாட்டை கண்காணித்து அதை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட முக்கிய ஆய்வுகள், திட்டங்கள் குறித்து கருத்தரங்கில் பெண் விஞ்ஞானிகள் பேசினார்கள்.
- அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
- வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
மாமல்லபுரம்:
கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் கீழ் பெருமாள்சேரி பகுதியை சேர்ந்தவர் மஞ்சுளா. இவரது குடிசை வீட்டில் மின்கசிவு காரணமாக திடீரென தீப்பிடித்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியேவந்தனர்.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசைமுழுவதும் பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. இதுகுறித்து கல்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.
- குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
திருப்போரூர்:
அ.தி.மு.க.-பா.ஜனதா கட்சியினர் இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டு இருக்கிறது. பா.ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க.கூட்டணியை முறித்து உள்ளது. இந்நிலையில் திருப்போரூர் பஸ்நிலையத்தில் எம்.ஜி.ஆர்.சிலைக்கு காவித்துண்டு அணிவிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்போரூர், ஓ.எம்.ஆர். சாலையில் பஸ்நிலையம் உள்ளது. இதன் முன்பகுதியில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் முழு உருவச்சிலை வைக்கப்பட்டுள்ளது. சிலையை சுற்றி இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் அதில் பூட்டு போடவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு வந்த மர்ம நபர்கள் திருப்போரூர் பஸ்நிலையத்தில் இருந்த எம்.ஜி.ஆர்.சிலையின் மீது காவித் துண்டை அணிவித்து சென்றுவிட்டனர். இன்று காலை பஸ்நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. தண்டரை மனோகரன், ஒன்றிய செயலாளர் குமரவேல், நகர செயலாளர் முத்து உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க தொண்டர்கள் அங்கு குவிந்தனர். அவர்கள் எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித் துண்டு அணிவித்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பஸ்நிலையம் முன்பு ஓ.எம்.ஆர். சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசலும் பரபரப்பும் ஏற்பட்டது.
தகவல் அறிந்ததும் டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)மங்கள பிரியா மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட அ.தி.மு.க.வினருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். எம்.ஜி.ஆர்.சிலை இருந்த இரும்பு கூண்டுக்கு புதிய பூட்டும் போடப்பட்டது.
இதுதொடர்பாக திருப்போரூர் போலீஸ்நிலை யத்தில் அ.தி.மு.க.வினர் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து எம்.ஜி.ஆர். சிலைக்கு காவித்துண்டு அணிவித்த நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவத்தால் திருப்போரூர் பஸ்நிலைய பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
- சுவேதா கேளம்பாக்கத்தை அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
- நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அடுத்த கூத்தவாக்கத்தை சேர்ந்தவர் சுவேதா(20). பட்டதாரியான இவர், கேளம்பாக்கம் அடுத்த நாவலூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு சென்ற சுவேதா வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
- மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தின விழா கொண்டாடபட்டது. விழாவில் பரதநாட்டியம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம், பொய்கால்குதிரை என பாரம்பரிய நடனங்கள் நடத்தப்பட்டது. விழாவில் செங்கல்பட்டு சப்-கலெக்டர் லட்சுமிபதி, மாமல்லபுரம் சுற்றுலா அலுவலர் சக்திவேல், சிற்பக்கல்லூரி முதல்வர் ராமன், சுர்தீப் ரங்கசாமி, வழிகாட்டிகள் உட்பட 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
முன்னதாக திருக்கழுகுன்றம், கடம்பாடி, தண்டரை, மானாமதி சுற்றுவட்டார பகுதி இருளர் பழங்குடி பெண்கள் தங்கள் வீட்டில் இருந்து உற்பத்தி செய்யும் கை எம்ராய்டரி துணிகளை, அர்ச்சுனன்தபசு அருகே ஸ்டால் அமைத்து காட்சி படுத்தி இருந்தனர். மயில், பழங்குடி வேட்டை, மாம்பழம், மயில், கோலம் உள்ளிட்ட டிசைன்கள் அங்கு வந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர்ந்தது. மாமல்லபுரம் அபிராமி யோகாலயாவினர் இவர்களை ஒருங்கிணைத்து இந்த பழங்குடி விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.






