search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சதுரங்கப்பட்டினத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த போலீஸ்காரர் சஸ்பெண்டு
    X

    சதுரங்கப்பட்டினத்தில் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்த போலீஸ்காரர் "சஸ்பெண்டு"

    • செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார்.
    • போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    மாமல்லபுரம்:

    செங்கல்பட்டு மாவட்டத்தில் கஞ்சா, குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை ஒழிப்பதில் போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அனைத்து போலீசாரும் தங்களது போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்கள் விற்பனையை ஒழிக்கவும், இதில் ஈடுபடுபவர்கள் மீது உடனடியாக கைது நடவடிக்கை எடுக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார். மேலும் இதற்காக தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் மறைமலைநகர் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் ஒருவரை பிடிக்க போலீசார் பல்வேறு முயற்சியில் ஈடுபட்டும் சிக்காமல் இருந்தார். இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரித்தபோது மாமல்லபுரம் அருகே உள்ள சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வரும் கோகுல் என்பவர் கஞ்சா வியாபாரிக்கு போலீசாரின் நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவித்து வந்தது தெரியவந்தது. மாவட்ட போதை தடுப்பு சிறப்பு பிரிவில் உள்ள போலீஸ்காரர் கோகுல் பல குற்றவாளிகளுடன் தொடர்பில் இருந்ததும் தெரிந்தது. இதையடுத்து போலீஸ்காரர் கோகுலை சஸ்பெண்டு செய்து போலீஸ் சூப்பிரண்டு சாய் பிரனீத் அதிரடியாக உத்தரவிட்டார்.

    Next Story
    ×