என் மலர்
அரியலூர்
அணைக்கரை கொள்ளிடம் கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்க கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அடுத்துள்ள அணைக்கரை கொள்ளிடம் கீழணையில் இருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 17-ந்தேதி உபரி தண்ணீர் வினாடிக்கு 2 ½ லட்சம் கன அடி வீதம் தண்ணீர் கொள்ளிடம் ஆற்றின் வழியாக கடலுக்கு உபரி தண்ணீர் கல்லணையில் இருந்து திறக்கப்பட்டது. இதையடுத்து அணைக்கரை கொள்ளிடம் கீழணையின் பாதுகாப்பு குறித்து கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந்தேதி அணைக்கரை பாலம் வழியாக செல்லும் அனைத்து பஸ்கள் நிறுத்தப்பட்டன.
மேலும் இந்த வழியாக கார்கள் மற்றும் வேன்கள் மட்டுமே சென்று வருகின்றன. இந்த வழியாக செல்லும் பஸ்கள் சென்னை, பாண்டிச்சேரி, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், மற்றும் கும்பகோணம், தஞ்சை, திருவாரூர், ராஜமன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து பஸ்களும் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மாற்று பாதை வழியாக ஜெயங்கொண்டம், தா.பழூர் மற்றும் மதனத்தூர் கொள்ளிடம் வழியாக அனைத்து பஸ்களும் இயக்கப்படுகின்றன. அணையின் பாதுகாப்பு குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தின் வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. மீண்டும் அணைக்கரை பாலம் வழியாக பஸ்கள் இயக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகும் என பொதுப்பணித்துறை அலுவலர்கள் அப்போது தெரிவித்தனர்.
இந்நிலையில் மீன்சுருட்டி அடுத்துள்ள ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நேற்று காலை சுமார் 7.30 மணியளவில் கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் கும்பகோணம் அரசு கலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் ஒன்று சேர்ந்து அணைக்கரை கீழணை வழியாக பஸ் இயக்க வேண்டும். கனரக வாகனங்கள் மறைமுகமாக சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து இயக்க வேண்டும் எனவும், கல்லூரிகளுக்கு செல்ல காலதாமதமும் ஏற்படுகிறது. குறித்த நேரத்தில் கல்லூரிகளுக்கு செல்ல முடியவில்லை என்று கோஷங்கள் எழுப்பினர்.
இதுகுறித்து தகவலறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி மற்றும் போலீசார், அணைக்கரை கீழணை பொதுப்பணித்துறை பாசன ஆய்வாளர் சத்தியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அணைக்கரை கீழணையை பார்வையிட, சென்னையில் இருந்து பாதுகாப்பு குழு இந்த வாரத்தில் வருவதாகவும், அவர்கள் பார்வையிட்ட பிறகு வருகிற 22-ந்தேதி காலை 9 மணியளவில் அணைக்கரை கீழணை வழியாக மீண்டும் பஸ் இயக்கப்படும் என்று தெரிவித்தனர்.
இதையடுத்து மாணவர்கள் 22-ந்தேதி பஸ் வழக்கம் போல் செல்லவில்லை என்றால் மீண்டும் நாங்கள் 24-ந்தேதி காலை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று கூறி மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு மற்றும் சென்னை-கும்பகோணம், திருச்சி-சிதம்பரம் சாலையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. #tamilnews

அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நடைபெற்றது.
அரியலூர்:
அண்ணா பிறந்த நாளையொட்டி அரியலூர் மாவட்ட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அரியலூர் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டி நேற்று நடைபெற்றது. சைக்கிள் போட்டி 13, 15, 17 வயதிற்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. சைக்கிள் போட்டியை அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரியலூர் மாவட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இதில் மாணவர்கள் 292 பேரும், மாணவிகள் 98 பேரும் பங்கேற்றனர்.
13 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் ஆர்.சி.நிர்மலா காந்தி நடுநிலைப்பள்ளி மாணவன் கார்த்திக், 15 வயதிற்குட்பட்ட மாணவர்கள் பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் நித்தீஸ்வரன், 17 வயதிற்குட்பட்ட பிரிவில் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் சாமுவேல் டேனியல் ஆகியோர் முதலிடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
13 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி சரண்யா, 15 வயதிற்குட்பட்ட பிரிவில் குணமங்கலம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவி நந்தினி, 17 வயதிற்குட்பட்ட மாணவிகள் பிரிவில் அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜானகி ஆகியோர் முதல் இடத்தை பிடித்து வெற்றி பெற்றனர்.
இதையடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு-சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நான்காம் இடம் முதல் 10-வது இடம் வரை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு ஆறுதல் பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மேலும் போட்டிகளில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

வகுப்பறையில் அனைவரின் முன்பும் பேராசிரியர் கன்னத்தில் அறைந்ததால் மனமுடைந்த பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் தளவாய் அருகே உள்ள ஆதனக் குறிச்சியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகன் தட்சிணாமூர்த்தி (வயது 18). இவர் கடலூர் மாவட்டம் தொழுதூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 6-ந்தேதி உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார். திருமணத்தில் பங்கேற்று விட்டு 7-ந்தேதி கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். அதன் பின்னர் அவர் பெற்றோருக்கு போன் எதுவும் பண்ணவில்லை. பெற்றோர் தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தொழுதூர் கல்லூரிக்கு சென்று பார்த்த போது அங்கும் தட்சிணா மூர்த்தியை காணவில்லை. இதையடுத்து அவரை பல்வேறு இடங்களில் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது பெண்ணாடம் பஸ் நிலையத்தில் தட்சிணா மூர்த்தி நிற்பது தெரியவந்தது. அங்கு சென்ற உறவினர்கள் அவரை கண்டுபிடித்து ஊருக்கு அழைத்து சென்றனர்.
இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தட்சிணாமூர்த்தி திடீரென விஷம் குடித்து விட்டார். உயிருக்கு போராடிய அவரை மீட்டு விழுப்புரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று தட்சிணாமூர்த்தி இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி தளவாய் போலீசில் புகார் செய்தார். புகாரில், கல்லூரி பேராசிரியர் தாக்கியதால் தட்சிணா மூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாகவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி கல்லூரிக்கு சென்ற தட்சிணாமூர்த்தியிடம் அக்கல்லூரி பேராசிரியர் ஒருவர் 6-ந் தேதி ஏன் வரவில்லை என்று கேட்டுள்ளதோடு, கன்னத்தில் மாறி மாறி அறைந்ததாக கூறப்படுகிறது. மற்ற மாணவர்கள் மத்தியில் தன்னை அடித்ததால் மனமுடைந்து தட்சிணாமூர்த்தி தற்கொலை செய்து கொண்டதாக என கூறப்படுகிறது.
இந்த காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயி வீட்டின் பின்பக்க கதவு உடைத்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே சாத்தம்பாடி மெயின் ரோட்டை சேர்ந்தவர் ராமசாமி (வயது 95). இவரது மனைவி சின்னம்மாள்(85). விவசாயியான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு சாப்பிட்டு விட்டு, தங்களது ஓடு வீட்டில் தூங்கினர்.
நேற்று காலை எழுந்து பார்த்த போது வீட்டின் பின்பக்க கதவு உடைந்து கிடந்ததை கண்டு ராமசாமி அதிர்ச்சியடைந்தார்.
மேலும் வீட்டில் இருந்த இரும்பு பெட்டியை காணவில்லை. மர்மநபர்கள் நள்ளிரவில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து, அதன் வழியாக உள்ளே புகுந்து ரூ.3 லட்சத்து 80 ஆயிரம் ரொக்கம் மற்றும் மோதிரம், தாலி சங்கிலி, நகைகள் உள்ளிட்ட 12 பவுன் நகைகள் இருந்த இரும்புபெட்டியை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து விக்கிரமங்கலம் போலீஸ் நிலையத்தில் ராமசாமியின் மருமகள் கலைச்செல்வி புகார் அளித்தார். அதன் பேரில் உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்கு பதிந்து நகைகள்-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

பெரம்பலூர் மற்றும் அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அரியலூர்:
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து தூய்மை இந்தியா திட்டப் பணிகளை ஆய்வு செய்து வருகிறார். மேலும் பொது மக்களிடம் குறைகளை கேட்டறிவதோடு, வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் பெரம்பலூர் -அரியலூரில் வருகிற 19 மற்றும் 20-ந்தேதி கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதையொட்டி 19-ந்தேதி காலை 7மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வரும் கவர்னர் பின்னர் கார் மூலம் பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அதன் பின்னர் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மீண்டும் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார்.
மதிய உணவுக்கு பின்னர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துவதோடு, பொதுமக்களிடம் மனுக்கள் பெறுகிறார். பின்னர் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் கார் மூலம் அரியலூர் விருந்தினர் மாளிகைக்கு சென்று இரவு தங்குகிறார். மறுநாள் 20-ந்தேதி காலை 10 மணிக்கு அரியலூரில் பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து அரசு துறை அதிகாரிகளுடன் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார். மதிய உணவுக்கு பிறகு பொது மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.
அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி முகமை, நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகளில் மத்திய, மாநில அரசுகளின் நிதிகள் முறையாக செலவிடப்பட்டுள்ளதா? ஏரி, குளங்கள், நீர்வரத்து வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரப்பட்டுள்ளதா ?பாலங்கள், சாலைகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா? என்றும், அரசு சிமெண்ட் ஆலையில் ரூ.200 கோடியில் நடைபெறும் விரிவாக்க பணிகள் குறித்தும், அரியலூர் பெரம்பலூர் சாலையில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் குறித்தும் ஆய்வு செய்கிறார்.
பின்னர் இரவு 8 மணியளவில் கார் மூலம் திருச்சி சென்று விமானம் மூலம் சென்னை செல்கிறார். பெரம்பலூர், அரியலூர் மாவட்ட பகுதிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் வருவதை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. மாவட்ட காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அரியலூர்:
அரியலூர் ராஜாஜி நகரில் உள்ள மாவட்ட தி.மு.க அலுவலகத்தில் மாவட்ட தி.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் துரைராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சிவசங்கர் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள முப்பெரும் விழாவில் பெருந்திரளாக கலந்துகொள்வது எனவும், பெட்ரோல், டீசல், கேஸ் போன்ற அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றி பெற செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது,
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொள்கை பரப்பு துணைச்செயலாளர் பெருநற்கிள்ளி, மாவட்ட துணைச்செயலாளர்கள் தனபால், கணேசன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, செயற்குழு உறுப்பினர் தில்லைகாந்தி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதிவேல், ஞானமூர்த்தி, தனசேகர், செல்வராஜ், தர்மதுரை, நகர செயலாளர்கள் அரியலூர் முருகேசன், ஜெயங்கொண்டம் கருணாநிதி உட்பட அனைத்து பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

அரியலூரில் கல்லூரி மாணவி உள்பட 3 பேர் மாயமானது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. போலீசார் 3 பேரை தேடி வருகிறார்கள்.
அரியலூர்:
அரியலூர் அருகே உள்ள செந்துறை பெரிய குறிச்சியை சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகள் சுகுணா(வயது 18). இவர் உடையார்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று காலை கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை. இது குறித்து செந்துறை போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான சுகுணாவை தேடி வருகிறார்கள்.
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள எடையார் கிராமத்தை சேர்ந்தவர் அன்பரசன். இவரது மனைவி பானுபிரியா (வயது22). இவர்களது மகள் அபி (வயது2).
அன்பரசனுக்கும் அவரது மனைவி பானுபிரியாவுக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்களுக்குள் மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் பானுபிரியா தனது குழந்தை அபியை தூக்கி கொண்டு வெளியே சென்றார். மீண்டும் அவர் வீடு திரும்பவில்லை. பானுபிரியாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் எங்கு சென்றார் என்பது தெரியவில்லை.
இது குறித்து பானுபிரியாவின் தந்தை எத்திராஜ் உடையார்பாளையம் போலீசில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து குழந்தையுடன் மாயமான பானுபிரியாவை தேடி வருகிறார்கள்.
அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி 4 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. சாமி கும்பிட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அரியலூர்:
கேரளமாநிலம் திருச்சூர் அருகே உள்ள கோலிமரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38). இவர் குடும்பத்துடன் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் சென்னிஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு கோவில் அருகே உள்ள வெவ்வால் ஏரியில் குளிக்க சென்றார். பின்னர் ஏரியில் குடும்பத்துடன் குளித்தார்.
அப்போது அய்யப்பனின் மகன் விமல் (வயது 4) நீரில் முழ்கினார். அவரை குடும்பத்தினர் தேடி பார்த்தனர். அதற்குள் விமல் தண்ணீரில் மூழ்கி பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
திருமானூர் அருகே படிக்க சொல்லி பெற்றோர் கண்டித்ததால் நர்சிங் மாணவி எலி மருந்தை தின்று பலியானார்.
அரியலூர்:
திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூர் அண்ணா நகரை சேர்ந்தவர் சேகர். இவரது மகள் சினேகா (வயது 17) கீழப்பழுவூரில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில் சினேகாவை சரியாக படிக்க வேண்டும் என்று பெற்றோர் கண்டித்துள்ளனர். இதில் மனமுடைந்த சினேகா சம்பவத்தன்று எலி மருந்தை (விஷம்) தின்று வீட்டில் மயங்கி கிடந்தார்.
இதைபார்த்த அவரது உறவினர்கள் சினேகாவை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சினேகா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிநீர் சீராக வினியோகிக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் எருத்துக்காரன்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கொல்லாபுரம் கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர். மேலும் காசு கொடுத்து குடிநீர் வாங்கி குடிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர் வராததை கண்டித்தும், குடிநீரை சீராக வினியோகிக்க கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பல முறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.
இதனால் ஆத்திரமடைந்த கொல்லாபுரம் பெண்கள் உள்பட பொதுமக்கள் நேற்று மாலை கையில் காலிக்குடங்களுடன் அரியலூர்-செந்துறை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்த சாலை மறியலால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணி வகுத்து நீண்ட வரிசையில் நின்றன. இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது உங்கள் கிராமத்திற்கு குடிநீர் வரும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடிநீர் வரவில்லை என்றும், அதனை சீரமைக்க வரை தற்காலிகமாக தற்போது குடிநீர் வழங்கப்படும் என்றும், பின்னர் குழாயில் உள்ள அடைப்பை எடுத்த பிறகு குடிநீர் சீராக வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து போலீசார் சுமார் 1 மணி நேரம் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர். இதனை தொடர்ந்து அந்தப்பகுதிக்கு உடனடியாக தற்காலிகமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. குடிநீர் சீராக வினியோகம் செய்யக்கோரி கொல்லாபுரம் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்வதற்கான சிறப்பு முகாமை கலெக்டர் விஜயலட்சுமி ஆய்வு செய்தார்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரிவின் மூலம் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் நிர்மலா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறும் முகாமினை கலெக்டர் விஜயலட்சுமி நேரில் சென்று ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து கலெக்டர் விஜயலட்சுமி கூறியதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் வரைவு பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்தம்-2019 பணிகள் கடந்த 1-ந்தேதி முதல் அடுத்த மாதம் (அக்டோபர்) 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. அது சமயம் 1.1.2019 அன்று வரை தகுதி நாளாக கொண்டு 18 வயது நிரம்பிய நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கும் மற்றும் வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், பெயர் திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளும் பொருட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்க திருத்த முகாம் இன்று (அதாவது நேற்று) அரியலூர் மாவட்டத்தில் நடைபெற்றது. மேலும் வருகிற 22-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 6, 13-ந்தேதி ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் தொடர்புடைய பாகம், பிரிவை அந்தந்த கிராம சபைகளில் படித்து பெயர்களைச் சரிபார்க்கும் பணியும் மற்றும் வருகிற 23-ந்தேதி மற்றும் அடுத்த மாதம் 7, 14-ந்தேதி ஆகிய நாட்களில் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற உள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந்தேதி வெளியிடப்படும். எனவே, 18 வயது நிரம்பிய தகுதியான நபர்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும் மற்றும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பெயர் நீக்கம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அரியலூர் கோட்டாட்சியர் சத்தியநாராயணன், தாசில்தார் முத்துலட்சுமி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அரியலூரில் அரசு பள்ளியில் படித்துவரும் பிளஸ்-2 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலாளியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்தனர்.
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி காந்தி நகரை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 60), இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். ஒருவர் அவர் வேலை செய்யும் பள்ளியில் துப்புரவு பணியாளராகவும், மற்றொருவர் அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் துப்புரவு பணியாளராக உள்ளனர்.
இதற்கிடையே கந்தசாமி தான் வேலை பார்க்கும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மாணவிகள் பள்ளி இடைவேளை நேரங்களில் கழிவறைக்கு சென்று வரும்போது அவர்களை நெருங்கி சென்று ஆபாச வார்த்தைகளில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
கந்தசாமியின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வந்துள்ளது. இதனால் அவரால் பாதிக்கப்பட்ட 5 மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறினர். அவர்கள் இதுகுறித்து செந்துறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
அப்போது கந்தசாமி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதனை தொடர்ந்து அவர் மீது சிறுமிகளுக்கு எதிரான பாலியல் தடுப்பு சட்டமான போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
மேலும் அவரது மனைவி வேலை செய்யும் விடுதிக்கும் கந்தசாமி, அவரை அழைக்க சென்று வந்துள்ளார். இதனால் அங்கும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.