search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "child died"

    • பள்ளி மாணவிக்கு பிறந்த குழந்தை சில மணிநேரத்திலேயே இறந்து விட்டது.
    • தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலித்து வந்தனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த வாலிபர் சிறுமியிடம் அத்துமீறி பலாத்காரம் செய்துள்ளார்.

    இதனால் 10ம் வகுப்பு படித்து வரும் சமயத்திலேயே அவர் கருவுற்றார். அவரது உடல்நிலையில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அப்போது சிறுமி கருவுற்றிருந்த செய்தியை கேட்ட அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சம்மந்தப்பட்ட வாலிபரிடம் கேட்ட போது திருமணம் செய்து கொள்வதாக கூறி பின்னர் தலைமறைவாகி விட்டார்.

    இந்நிலையில் சிறுமியின் கருவை கலைக்க முடியாததால் அவருக்கு நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் குழந்தை பிறந்தது. ஆனால் பிறந்த சில மணிநேரத்திலேயே அது இறந்து விட்டது. இதனிடையே 15 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்தது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சிறுமியிடம் விசாரணை நடத்தி கற்பழித்த வாலிபர் விவரம் கேட்டபோது நடந்தவற்றை அவர் கூறியுள்ளார்.

    பின்னர் வடமதுரை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை தேடி வருகின்றனர்.

    வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல மைனர் பெண்கள் கருவுற்று பின்னர் கலைக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்படுவது அடிக்கடி நடந்து வருகிறது. சமரசம் செய்து திருமணம் நடத்தி வைக்கலாம் என குடும்பத்தினர் முடிவு செய்தால் அந்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுகிறார். இதனால் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் வாலிபர்கள் திருமணத்திற்கு மறுத்து தப்பியோடி விடுகின்றனர்.

    சமூக நலத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தி இளம் வயது திருமணம், போக்சோ குறித்த அறிவுரைகள் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார்.
    • பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது குழந்தை ஆரோன்மேத்யூ(2). தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.

    2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் குழந்தை ஆரோன்மேத்யூ ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    • தான் வேலை செய்யும் இடத்திற்கு தனது 2 பெண் குழந்தைகளையும் அழைத்துச் சென்றுள்ளார்.
    • அங்கு விளையாடிக் கொண்டிருந்த குழந்தை குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

    செம்பட்டி:

    செம்பட்டி அடுத்த சித்தையன்கோட்டை அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது25) . கூலி தொழிலாளி.

    இவரது மனைவி பவித்ரா (21) குழந்தைகள் கனிஷ்காஸ்ரீ (4) ஹர்ஷிதாஸ்ரீ (1½). பவித்ரா நரசிங்கபுரம் அருகே சித்தைன்கோட்டையைச் சேர்ந்த தேங்காய் கம்பெனியில் கூலி வேலை பார்த்து வருகிறார்.

    இந்நிலையில் நேற்று பவித்ரா உட்பட 7 பெண்கள் அங்கு தேங்காயில் பருப்பு எடுக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது பவித்ரா தனது 2 பெண் குழந்தைகளையும் அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷிதாஸ்ரீ குடிதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து செம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்கு பதிவு செய்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    • தச்சநல்லூர் ராமையன் பட்டி சிவாஜி நகரை சேர்ந்த தொழிலாளி பெருமாள் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
    • ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் தனது மனைவியை கொண்டு சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் ராமையன் பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள். இவர் இன்று தனது உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இந்து அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி பேச்சியம்மாள் 2-வதாக கருவுற்றிருந்தார்.

    எனது மனைவிக்கு கடந்த 5-ந்தேதி காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றேன்.

    அங்கு அவரை முறையாக பரிசோதிக்காமல் உடனடி யாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போது ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் எனது மனைவியை கொண்டு சென்றேன். ஆனால் ஆஸ்பத்திரியை சென்றடைந்த உடனே எனது மனைவிக்கு உடலை விட்டு குழந்தை வெளியே வந்துவிட்டது.

    சிகிச்சைக்காக சேர்க்கும் போது எனது குழந்தை இறந்து விட்டது. கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் காரணமாகவே எனது மனைவியின் பிரசவம் தாமதமாகி குழந்தை இறந்து விட்டது.

    எனவே கடந்த 5-ந்தேதி கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.
    • இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.

    3 வயது குழந்தை

    இவரது மனைவி சுகிர்தா. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஷாம் லிரின். இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதற்காக எலி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.

    இதனை பார்த்த ஷாம் லிரின் தின்பண்டம் என நினைத்து அதை எடுத்து தின்றுள்ளார். இதை அவளது பெற்றோர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

    பரிதாப சாவு

    இதனிடையே அவள் திடீரென வாந்தி எடுத்ததை பார்த்த பெற்றோர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

    இந்நிலையில் இன்று காலை திடீரென ஷாம் லிரின் மயங்கி விழுந்தாள். உடனே அவளை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
    • சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வேடபட்டி பொன்முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவர் மைக்செட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஜோன்ரக்சிதா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இன்று இவர்களது வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு பீட்டர் மனைவியுடன் சென்றுவிட்டார். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.

    இவருக்கு ஏற்கனவே கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க மடைந்திருக்கலாம் என நினைத்த பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தீக்காயம் அடைந்த 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது.
    • தாய் சமைத்துக் கொண்டிருந்தார்.

    கரூர்:

    திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள வெள்ளூர் சத்திரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38). இவர் தற்போது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கோட்டமேட்டில் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் என்ற 2 வயது மகள் இருந்தாள்.இந்தநிலையில்சம்பவத்தன்று வீட்டின் முன்பு தாய் அடுப்பில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது பொருட்கள் எடுப்பதற்காக தாய் வீட்டினுள் சென்று விட்டார். அப்போது வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த குழந்தை அடுப்பில் இருந்த பாத்திரத்தை எடுத்தாள். அப்போது எதிர்பாராத விதமாக குழந்தை மீது தீப்பிடித்து எரிந்தது.

    இதைக்கண்ட உறவினர்கள் தீக்காயம் அடைந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக இறந்தாள்.இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் கொடுத்த புகாரின்பேரில், குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி அருகே 2 வயது குழந்தை பன்றிக்காய்ச்சலுக்கு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    தொட்டியம்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள நாகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட பெரியநாச்சிபட்டியை சேர்ந்தவர் தமிழழகன் என்ற தினேஷ் (வயது 34), விவசாயி. இவரது மனைவி காயத்ரி (26). இவர்களுக்கு 2 வயதில் சிவான்யா என்ற மகள் இருந்தாள்.

    இந்த குழந்தைக்கு கடந்த 28-ந்தேதி கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக பெற்றோர் காடு வெட்டி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வீட்டுக்கு கொண்டு சென்றனர்.

    அதன் பின்னரும் மீண்டும் காய்ச்சல் அதிகமாக இருந்ததால் காட்டுப்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக 31-ந்தேதி நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு குழந்தை சிவான்யாவிற்கு மேற்கொள்ளப்பட்ட ரத்தப் பரிசோதனையில் பன்றிக்காய்ச்சல் ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவள் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். அங்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று குழந்தை சிவான்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தாள். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் குழந்தை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    அரியலூர் அருகே ஏரியில் மூழ்கி 4 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. சாமி கும்பிட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
    அரியலூர்:

    கேரளமாநிலம் திருச்சூர் அருகே  உள்ள கோலிமரம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 38). இவர் குடும்பத்துடன் அரியலூர்  மாவட்டம் தா.பழூர் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் உள்ள தனது குலதெய்வம் சென்னிஸ்வரர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தார். பூஜைக்கான ஏற்பாடுகளை செய்து விட்டு கோவில் அருகே உள்ள வெவ்வால் ஏரியில் குளிக்க சென்றார். பின்னர் ஏரியில் குடும்பத்துடன் குளித்தார். 

    அப்போது அய்யப்பனின் மகன் விமல் (வயது 4) நீரில் முழ்கினார். அவரை குடும்பத்தினர் தேடி பார்த்தனர். அதற்குள் விமல் தண்ணீரில் மூழ்கி பலியானார். 

    இது குறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விமல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஜெயங் கொண்டம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
    நெல்லையில் சமையல் எரிவாயு கசிந்து தொட்டிலில் தீப்பிடித்ததில் 5 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. #childdied
    நெல்லை:

    திருநெல்வேலி ரெட்டியார்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் இன்று சமையல் எரிவாயு கசிந்துள்ளது. இதை கவனிக்காமல் விட்டதால் எரிவாயு வீடு முழுக்க பரவி தீப்பிடித்துள்ளது. அப்போது வீட்டினுள் இருந்த தொட்டிலும் தீப்பிடித்துள்ளது. இதனால் தொட்டிலில் தூங்கிய குழந்தை உடல் கருகி உயிரிழந்தது.

    இந்த சம்பவம் ரெட்டியார்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #childdied
    ×