என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
திண்டுக்கல்லில் 6 வயது குழந்தை திடீர் சாவு
- வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
- சிகிச்சைக்கு கொண்டு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் வேடபட்டி பொன்முத்துராமலிங்கத்தேவர் தெருவை சேர்ந்தவர் பீட்டர். இவர் மைக்செட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ஒரு மகனும், ஜோன்ரக்சிதா(6) என்ற மகளும் உள்ளனர். இவர் 2-ம் வகுப்பு படித்து வந்தார்.
இன்று இவர்களது வீட்டிற்கு அருகில் நடந்த ஒரு விஷேச நிகழ்ச்சிக்கு பீட்டர் மனைவியுடன் சென்றுவிட்டார். வீட்டில் விளையாடி கொண்டிருந்த சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.
இவருக்கு ஏற்கனவே கடந்த 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் உடல் சோர்வு ஏற்பட்டு மயக்க மடைந்திருக்கலாம் என நினைத்த பெற்றோர் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர்.
ஆனால் வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நகர் தெற்கு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






