கொடைக்கானல் அருகே தனியார் பஸ் மோதி குழந்தை பலி

தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார். பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் பாம்பார்புரத்தை சேர்ந்தவர் அருண்குமார். இவரது குழந்தை ஆரோன்மேத்யூ(2). தனது குழந்தையுடன் பெருமாள்மலை பகுதியில் சாலையோரத்தில் நின்றிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பஸ் அவர்கள் மீது மோதியது. பஸ்சின் கதவு குழந்தை மீது பலமாக மோதியதால் படுகாயமடைந்தது.

2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு கொடைக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் குழந்தை ஆரோன்மேத்யூ ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். பலத்த காயமடைந்த அருண்குமாருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் போலீசார் வழக்குபதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com