என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Doctors Negligence"

    • ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.
    • மருத்துவர்கள் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் சேர்ந்தவர் மணிஷ். இவருக்கு சமிபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் காலில் காயம் ஏற்பட்டது. இதனால் கோட்டா பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்களின் அவரின் இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த சனிக்கிழமை அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய நாள் குறிக்கப்பட்டிருந்தது. மணிஷுக்கு துணையாக அவரது தந்தை ஜெகதீஸ் மருத்துவமனையில் உடன் இருந்தார். ஜெகதீஸுக்கு ஏற்கனவே முடக்கு வாதம் உள்ளதால் அவரால் பேச முடியாது.

    சம்பவத்தன்று மணிஷ் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது ஆபரேஷன் தியேட்டருக்கு வெளியே ஜெகதீஸ் இருந்தார். அங்கு வந்த மருத்துவர்கள் சிலர் ஜெகதீஸ் என்பவரை சிகிச்சைக்காக அழைத்துள்ளனர்.

    அப்போது இவர் தனது கையை உயர்த்தினார். பின்னர் அந்த மருத்துவர்கள் ஜெகதீஸை ஆபரேசன் தியேட்டருக்கு அழைத்துச் சென்று அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய தொடங்கினர்.

    இதனை அறிந்த அவரது மகன் மணிஷ் அதிர்ச்சியடைந்தார். இதனால் உடனடியாக அங்கு சென்ற மணிஷ் மருத்துவர்களிடம் வாக்கு வாதம் செய்தார்.

    இதனையடுத்து அவரது தந்தைக்கு கையில் 6 தையல் போடப்பட்டு திருப்பி அனுப்பி உள்ளனர். நோயாளி என நினைத்து மற்றொரு நபருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தச்சநல்லூர் ராமையன் பட்டி சிவாஜி நகரை சேர்ந்த தொழிலாளி பெருமாள் தனது உறவினர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்.
    • ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் தனது மனைவியை கொண்டு சென்றுள்ளார்.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த தச்சநல்லூர் ராமையன் பட்டி சிவாஜி நகரை சேர்ந்தவர் தொழிலாளி பெருமாள். இவர் இன்று தனது உறவினர்களுடன் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் இந்து அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவன். எனக்கு திருமணம் ஆகி 4 வருடங்கள் ஆகிறது. எனக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. எனது மனைவி பேச்சியம்மாள் 2-வதாக கருவுற்றிருந்தார்.

    எனது மனைவிக்கு கடந்த 5-ந்தேதி காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு கல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றேன்.

    அங்கு அவரை முறையாக பரிசோதிக்காமல் உடனடி யாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போது ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் ஆட்டோவில் எனது மனைவியை கொண்டு சென்றேன். ஆனால் ஆஸ்பத்திரியை சென்றடைந்த உடனே எனது மனைவிக்கு உடலை விட்டு குழந்தை வெளியே வந்துவிட்டது.

    சிகிச்சைக்காக சேர்க்கும் போது எனது குழந்தை இறந்து விட்டது. கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணி செய்யும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் அலட்சியம் காரணமாகவே எனது மனைவியின் பிரசவம் தாமதமாகி குழந்தை இறந்து விட்டது.

    எனவே கடந்த 5-ந்தேதி கல்லூர் ஆரம்ப சுகாதார மையத்தில் பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மீது வன்கொ டுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    ×