நெல்லை அருகே தின்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை தின்ற 3 வயது குழந்தை பலி

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது.
நெல்லை அருகே  தின்பண்டம் என்று நினைத்து எலி மருந்தை தின்ற 3 வயது குழந்தை பலி
Published on

நெல்லை:

நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள இரண்டும் சொல்லான் சர்ச் தெருவை சேர்ந்தவர் வேதநாயகம் அலெக்ஸ் மணி. விவசாயி.

3 வயது குழந்தை

இவரது மனைவி சுகிர்தா. இவர்களது 3 வயது பெண் குழந்தை ஷாம் லிரின். இவர்களின் வீட்டில் எலி தொல்லை அதிகமாக இருந்துள்ளது. இதற்காக எலி மருந்து வாங்கி வீட்டில் வைத்துள்ளனர்.

இதனை பார்த்த ஷாம் லிரின் தின்பண்டம் என நினைத்து அதை எடுத்து தின்றுள்ளார். இதை அவளது பெற்றோர் கவனிக்கவில்லை என கூறப்படுகிறது.

பரிதாப சாவு

இதனிடையே அவள் திடீரென வாந்தி எடுத்ததை பார்த்த பெற்றோர் அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை திடீரென ஷாம் லிரின் மயங்கி விழுந்தாள். உடனே அவளை பெற்றோர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து மானூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com