என் மலர்
அரியலூர்
தா.பழூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாகிர் உசேன் தலைமையில், துணை மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, தா.பழூர் ஊராட்சி செயலர் இளங்கோவன், அணைக்குடம் ஊராட்சி செயலர் சகாதேவன், காரைக்குறிச்சி ஊராட்சி செயலர் சுப்பிரமணியன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், வட்டார சுகாதார ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கொண்ட குழுவினர் தா.பழூர் கடைவீதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? எனவும், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? எனவும் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் கடைகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டு மொத்தம் 1,500 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.13 ஆயிரத்து 100 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு அவற்றை பறிமுதல் செய்து அந்த கடைகளின் உரிமை யாளர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள வெளிப்பிரிங்கியம் கிராமத்தை சேர்ந்தவர்கள் சதீஷ் (வயது 24), அஜித் (19), ஹீரன் (22), விக்னேஷ் (22. இவர்கள் 4 பேரும் நேற்றிரவு ஒரே மோட்டார் சைக்கிள்களில் கீழப்பழுவூர் சென்று விட்டு மீண்டும் வெளிப்பிரிங்கியம் கிராமத்தை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
திருச்சி-சிதம்பரம் சாலையில் மயிலாண்டகொட்டாய் பகுதியில் செல்லும் போது முன்னாள் தனியார் சிமெண்டு தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியை முந்த முயன்றனர். அப்போது எதிரே மற்றொரு மோட்டார் சைக்கிளில் மதியழகன் (34), மணிகண்டன் (27) ஆகியோர் வந்தனர்.
இதனால் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. மதியழகன், மணிகண்டன் சாலையோரத்தில் மணலில் விழுந்தனர். சதீஷ், அஜீத், ஹீரன், விக்னேஷ் ஆகிய 4 பேரும் நடுரோட்டில் விழுந்தனர். அந்த சமயம் பின்னால் வேகமாக வந்த டிப்பர் லாரி 4 பேர் மீதும் ஏறி இறங்கியது.
இதில் ஹீரன் தவிர மற்ற 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மதியழகன், மணிகண்டன், ஹீரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். அவர்கள் 3 பேரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஹீரன் உயிரிழந்தார். மற்ற 2 பேருக்கும் அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன், டி.எஸ்.பி. இளஞ்செழியன், அரியலூர் இன்ஸ்பெக்டர் அழகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் விபத்தில் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில் விபத்தில் உயிரிழந்த வாலிபர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை உடனே கைது செய்யக்கோரி திருச்சி- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்திதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அரியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருவதுடன், தப்பியோடிய லாரி டிரைவர் அரியலூர் கீழநத்தம் பகுதியை சேர்ந்த ரகுபதியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பொது மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள ஆயிப்பாளையம் கிராமம் அக்ரஹாரத்தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி(வயது 38). விவசாயியான இவர் நேற்று முன்தினம் இரவு ஜெயங்கொண்டத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஆயிப்பாளையத்திற்கு செல்வதற்காக ஜெயங்கொண்டம்- அணைக்கரை சாலையில் உதயநத்தம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது வேகமாக மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் பலத்த காயமடைந்த குருமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அவ்வழியே சென்றவர்கள் பார்த்து தா.பழூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குருமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
அரியலூர் மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம் விவசாயிகளுக்கு எதிர்பாராமல் ஏற்படும் இழப்புகளுக்கு நிதியுதவி வழங்கி பாதுகாக்கவும், பண்ணை வருவாயை நிலைப்படுத்தவும் மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயிர் காப்பீடு செய்யும் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு பயிர் இழப்பீட்டு தொகை சம்பந்தப்பட்ட பயிர்காப்பீடு நிறுவனத்தால் வழங்கப்படும். நடப்பு 2019-ம் ஆண்டு குறுவை நெல் பயிர் மற்றும் இதர பயிர்களுக்கு காப்பீடு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி அரியலூர் மாவட்டத்தில், நெல்- குறுவைக்கு 74 வருவாய் கிராமங்களும், இதர காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம் பயிருக்கு 73 வருவாய் கிராமங்களும், துவரை பயிருக்கு 5 வருவாய் கிராமங்களும், உளுந்து பயிருக்கு 82 வருவாய் கிராமங்களும், நிலக்கடலை பயிருக்கு 140 வருவாய் கிராமங் களும் மற்றும் தோட்டக்கலை பயிர்களான வாழை பயிருக்கு 8 வருவாய் கிராமங்களும், வெங்காயம் பயிருக்கு 9 வருவாய் கிராமங்களும், மரவள்ளி பயிருக்கு 9 வருவாய் கிராமங்களும், மஞ்சள் பயிருக்கு 1 வருவாய் கிராமமும் மற்றும் 15் குறுவட்டங்களிலும் அறிக்கை செய்யப் பட்டுள்ளன.
இந்த திட்டத்தில் கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெரும் வங்கிகளில் கட்டாயமாகப் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவார்கள். கடன் பெறாத விவசாயிகள் அரியலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீடுத் திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனத்தின் அங்கீ கரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, பொது சேவை மையங்கள் மூலமாகவோ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தில் குறுவை நெல் பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய ஜூலை மாதம் 31-ந் தேதி கடைசி நாள் ஆகும். இதர பயிர்களான உளுந்து, சோளம், கம்பு, எள், கடலை, மக்காச்சோளம் மற்றும் துவரை பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய ஆகஸ்டு மாதம் 16-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
தோட்டக்கலை பயிர் களான வாழை, வெங்காயம், மரவள்ளிக் கிழங்கு மற்றும் மஞ்சள் பயிரிடும் விவசாயிகள் பதிவு செய்ய செப்டம்பர் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் பயிர் சாகுபடி செய்ய இயலாத விவசாயிகள் முன்னதாகவே கிராம நிர்வாக அதிகாரியிடம் பயிர் செய்ய உள்ளதற்கான சான்று பெற்று விண்ணப்பிக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்கு பின் பயிர் காப்பீடு செய்பவர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்படமாட்டாது. மேலும், பயிர் வாரியாக அறிக்கை செய்யப்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற இயலும்.
எனவே விவசாயிகள் இறுதி நேர நெரிசலை தவிர்க்கவும், விவசாயிகளின் விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி தங்களது பயிர்களை முன்கூட்டியே பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பயிர் காப்பீடு செய்ய குறுவை நெல் பயிருக்கு பிரிமியத் தொகையாக ஒரு ஏக்கருக்கு ரூ.650-ம், உளுந்து பயிருக்கு ரூ.315-ம், சோளப்பயிருக்கு ரூ.206-ம், கம்புக்கு ரூ.182-ம், எள்ளுக்கு ரூ.260-ம், நிலக்கடலைக்கு ரூ.520-ம், மக்காச்சோளத்திற்கு ரூ.446-ம், துவரைக்கு ரூ.315-ம், வாழைக்கு ரூ.3,065-ம், வெங்காயத்திற்கு ரூ.1,710-ம், மரவள்ளிக்கிழங்குக்கு ரூ.1,388-ம் மற்றும் மஞ்சளுக்கு ரூ.3,175-ம் காப்பீடுக் கட்டணமாக செலுத்தினால் போதுமானது.
அரியலூர் மாவட்ட விவசாயிகள் இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல், வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து பிரிமியத் தொகையை செலுத்தியபின் அதற்கான ரசீதையும் பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
மேற்கண்ட திட்டங்கள் தொடர்பாக எழும் சந்தேகங் களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் மற்றும் 2-ம் தாள் நடைபெறுவதை முன்னிட்டு முன்னேற்பாடுகள் சம்பந்தமான கூட்டம் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதற்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) பொற்கொடி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் பொற்கொடி பேசுகையில், அரியலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் வருகிற 8-ந் தேதியும், 2-ம் தாள் 9-ந் தேதியும் நடைபெறவுள்ளது.
ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் 2,097 பேர், 6 தேர்வு மையங்களிலும், 2-ம் தாள் 7,071 பேர், 12 தேர்வு மையங்களிலும் தேர்வுவெழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கவும், தேர்வர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையத்திற்கு தேர்வெழுத ஏதுவாக போதிய பஸ் வசதியும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வுகள் அமைதியாக நடைபெற ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசார் உட்பட போதிய போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
கூட்டத்தில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் செந்தில், பள்ளித்துறை ஆய்வாளர் பழனிசாமி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். நடத்துனராக அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.
இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ரகுபதி (67) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.
அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த போது பஸ்சில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அனைவரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த ஹரிகரன் (12), மகேஸ்வரி (22), பாலாஜி, அமுதா, ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்தில் பலியான ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ரகுபதி தனது மனைவி விஜயகுமாரி மற்றும் 2-வது மகள் லாவண்யா, பேத்தி மவுலிகாவுடன் தஞ்சாவூரில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். லாவண்யாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த ரகுபதி அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தஞ்சை வந்ததாகவும் தெரியவந்தது.
சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் 7,36,655 ஆண்கள், 7,42,394 பெண்கள் மற்றும் 59 மூன்றாம் பாலி னத்தவர்கள் என மொத்தம் 14,79,108 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு சிதம்பரம், அரியலூர், குன்னம், ஜெயங்கொண்டம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரசேகர், தி.மு.க. கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அ.ம.மு.க. வேட்பாளர் இளவரசன், மக்கள் நீதி மய்யம் சார்பில் ரவி, நாம் தமிழர் கட்சியில் சிவஜோதி உள்பட மொத்தம் 13 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் விவிபேட் எந்திரங்கள் அனைத்தும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையமான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன.
இன்று காலை வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
அடுத்ததாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மொத்தம் 23 சுற்றுக்களாக வாக்குகள் எண்ணப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. வாக்கு எண்ணும் பணியில் மத்திய அரசில் பணியாற்றும் நுண் பார்வையாளர் ஒருவர், மாநில அரசில் பணியாற்றும் கண்காணிப்பாளர் ஒருவர், ஒரு மேஜைக்கு 3 பணியாளர்கள் ஈடுபட்டனர்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவு வருமாறு:-
திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்)-20,867
சந்திரசேகர் (அ.தி. மு.க.)-20,686
முதல் சுற்று முடிவின்படி 200 வாக்குகள் வித்தியாசத்தில் திருமாவளவன் முன்னிலையில் இருந்தார்.
தமிழகத்தில் நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் ஆகியவற்றை எடுக்க மத்திய அரசு வேதாந்தா குழுமத்திற்கு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்தினால் டெல்டா பகுதிகள் அனைத்தும் அழிந்து நிலத்தடி நீர்மட்டம் இறங்கி பாலைவனமாகிவிடும் நிலை உள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை ரத்து செய்ய அனைத்து பகுதிகளிலும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு பகுதியில் விவசாயிகள், மக்கள் சேவை இயக்க விவசாய பிரிவு மாநிலத்தலைவர் தங்கசண்முகசுந்தரம் தலைமையில், விவசாயிகள் உளுந்து வயலில் இறங்கி ஹைட்ரோ கார்பன், மீத்தேன் ஆகிய திட்டங்களை செயல்படுத்த தமிழகம் முழுவதும் கைவிட வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின்போது விவசாயிகள், பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் முதல் கிழக்கு கடற்கரை சாலை வழியாக ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் வரை மனிதசங்கிலி போராட்டம் நடத்துவது என விவசாயிகள் முடிவு செய்தனர்.






