search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "father dies"

    ஜெயங்கொண்டம் அருகே இன்று காலை லாரி மீது பஸ் மோதிய விபத்தில் ஒருவர் பலியானார். 10 பேர் காயம் அடைந்தனர்.
    ஜெயங்கொண்டம்:

    சென்னை கோயம்பேட்டில் இருந்து தஞ்சாவூர் நோக்கி நேற்றிரவு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தஞ்சாவூர் அய்யம்பேட்டையை சேர்ந்த குமார் (வயது 46) என்பவர் ஓட்டினார். நடத்துனராக அதே பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் பணியில் இருந்தார். பஸ்சில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

    இன்று அதிகாலை 4.30 மணியளவில் அந்த பஸ் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை அடுத்த காரைக்குறிச்சி கிராமத்தின் அருகே சென்று கொண்டிருந்தது.

    அப்போது சாலையின் ஓரத்தில் நின்று கொண்டிருந்த சரக்கு லாரியின் பின்புறத்தில் எதிர்பாராதவிதமாக அரசு பஸ் வேகமாக மோதியது. இதில் சென்னை கொரட்டூரில் தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வரும் ரகுபதி (67) என்பவர் பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே வந்து சாலையில் விழுந்து பரிதாபமாக இறந்தார். மேலும் 10 பேர் காயம் அடைந்தனர்.

    அதிகாலை நேரம் என்பதால் இந்த விபத்து நடந்த போது பஸ்சில் பயணிகள் அனைவரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தனர். பஸ் விபத்தில் சிக்கியதும் அனைவரும் அலறினர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் தா.பழூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்த ஹரிகரன் (12), மகேஸ்வரி (22), பாலாஜி, அமுதா, ராஜேஸ்வரி, யுவராஜ் உள்ளிட்ட 10 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்தில் பலியான ரகுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் சென்னை கோயம்பேடு, எம்.எம்.டி.ஏ. காலனியை சேர்ந்த ரகுபதி தனது மனைவி விஜயகுமாரி மற்றும் 2-வது மகள் லாவண்யா, பேத்தி மவுலிகாவுடன் தஞ்சாவூரில் உள்ள மூத்த மகள் வீட்டிற்கு புறப்பட்டு வந்துள்ளார். லாவண்யாவுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்த ரகுபதி அவருக்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக தஞ்சை வந்ததாகவும் தெரியவந்தது.
    சாத்தான்குளம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து மகன்கள் இறந்த சோகத்தில் தந்தையும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சாத்தான்குளம்:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை அடுத்த தட்டார்மடம் அருகேயுள்ள மணிநகர் புதூரை சேர்ந்தவர் கோயில்மணி(60). இவர் ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி குணசீலி. இவர்களுக்கு 3 மகன்கள், 2 மகள்கள். இவர்களில் நான்கு பேருக்கு திருமணமாகிவிட்டது. கடைசி மகன் விஜய். இவருக்கு திருமணமாகவில்லை.

    விஜய் கோவையில் தனியார் கடையில் வேலை பார்த்து வந்தார். விஜயின் அண்ணன் ராஜா புதூரில் சொந்தமாக டெம்போ வைத்து தொழில் செய்து வந்தார். விஜய் ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். அந்த காதல் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் வெறுப்படைந்த விஜய் கோவையிலிருந்து புதூருக்கு வந்து கடந்த 20-ம் தேதி மதுவில் வி‌ஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துவிட்டார்.

    ஏற்கனவே 4 மாதங்களுக்கு முன்பு திருமணமான அவரது சகோதரர் ராஜா குடும்ப பிரச்சனையால் மதுவிற்கு அடிமையாகி இருந்துள்ளார். அவர் தம்பி குடித்துவிட்டு மீதம் வைத்திருந்த வி‌ஷம் கலந்திருந்த மதுவை சாதாரண மது என நினைத்து குடித்து விட்டார். சாத்தான்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜா 20-ந் தேதி இறந்தார். பாளை ஹைகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஜய் 22-ந் தேதி இறந்தார்.

    இரண்டு மகன்களும் இறந்த சோகத்தில் இருந்த கோயில்மணி வேலைக்கு சென்றார். அங்கு அவருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மேலும் சரியாக சாப்பிடாமல் இருந்துவந்தாராம். சம்பவத்தன்று அவர் தங்கியிருந்த அறையில் மயங்கி கிடந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் புதூருக்கு தகவல் கொடுத்தனர்.

    உறவினர்கள் சென்று அவரை மீட்டு வந்து உடன்குடி தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளித்தனர். அங்கு அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே கோயில்மணி பரிதாபமாக‌ இறந்தார். ஒரே வீட்டில் 10 நாட்களுக்குள் 2 மகன்கள், தந்தை இறந்தது அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தி உள்ள‌து.
    திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். #DMK #MKStalin
    சென்னை:

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    திரைப்பட இயக்குனர் கவுதமனின் தந்தை வடமலை உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது இன்று இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயரமுற்றேன்.

    அவரது மறைவிற்கு திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, தந்தையை இழந்து வாடும் கவுதமனுக்கும், அவரது உறவினர்களுக்கும் அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமுதாய ஏற்றத்தாழ்வுகளை அறவே நீக்கிவிடும் வகையில் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே தாழ்த்தப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக கடுமையாகவும், உறுதியாகவும் போராடிய அவரின் மறைவு சமத்துவ போராளிகளுக்கு பேரிழப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #DMK #MKStalin
    ×